search icon
என் மலர்tooltip icon

    கணினி

    நிறம் மாறும் வசதியுடன் புதிய வாட்ச் பேண்ட் - ஆப்பிள் அசத்தல்
    X

    நிறம் மாறும் வசதியுடன் புதிய வாட்ச் பேண்ட் - ஆப்பிள் அசத்தல்

    • ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களில் பயன்படுத்த இருக்கும் புதிய வகை பேண்ட் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • தற்போதைய வாட்ச்களில் பேண்ட் நிறத்தை மாற்ற, அதனை கழற்றிவிட்டு வேறு நிறம் கொண்ட பேண்ட்-ஐ இணைக்க வேண்டும்.

    ஆப்பிள் நிறுவனம் விசேஷ எலெக்ட்ரோக்ரோமிக் அம்சம் கொண்ட ஆப்பிள் வாட்ச் பேண்ட்-க்கு ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்று இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் பேண்ட் நிறத்தை மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்து அதன் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம். பேண்ட் நிறத்தை மூன்று விதங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்பதோடு, இதற்கு பயனர்கள் பேண்ட்-ஐ கழற்றி மாற்ற வேண்டிய அவசியத்தை நீக்கி இருக்கிறது.

    பயனர்கள் தங்களின் வாட்ச் பேண்ட்களை அடிக்கடி கஸ்டமைஸ் செய்து அதன் ஸ்டைல் மற்றும் நிறத்தை வித்தியாசப்படுத்த நினைப்பர், புதிய தொழில்நுட்பம் இதற்கான தீர்வை வழங்கி விட்டது. வழக்கமான வாட்ச்களில் பேண்ட் நிறத்தை மாற்ற, ஒவ்வொரு முறையும் வேறு நிறம் கொண்ட பேண்ட்களை பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

    புதிய தொழில்நுட்பம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கலர் கண்ட்ரோல் மூலம் பல்வேறு நிறங்கள் மற்றும் நிற காம்பினேஷன்களை ஒற்றை பேண்ட்-இல் வெளிப்படுத்துகிறது. பயனர் அல்லது கண்ட்ரோல் சிஸ்டம் பேண்ட்-இல் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறங்களை கண்ட்ரோல் செய்து மாற்றுகிறது. இவ்வாறு செய்யும் போது பல்வேறு பேண்ட்களை மாற்றாமலேயே பேண்ட்-இல் பல நிறங்கள் அல்லத நிற காம்பினேஷன்களை மாற்ற முடியும்.

    அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நிறங்களை கொண்டு பயனர்கள் தகவல் பரிமாற்றத்தையும் செய்ய முடியும் என காப்புரிமை விவரங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கலர் அட்ஜஸ்ட் செய்யும் கூறுகளை ஒருங்கிணைக்கவோ அல்லது தனித்தனியாக கண்ட்ரோல் செய்து குறிப்பிடத்தக்க ஐகான், வடிவம் அல்லது எழுத்துக்களை வெளிப்படுத்த முடியும். இந்த வாட்ச் பேண்ட் ஆடை மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    விசேஷமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஆடையில் நூல் வடிவில் மென்கம்பிகள் புகுத்தப்பட்டு உள்ளன. சில அல்லது அனைத்து மென்கம்பிகளில் எலெக்ட்ரோக்ரோமிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரோ-க்ரோமிசம் என்பது எலெக்ட்ரிக் ஃபீல்டு அல்லது கரண்ட் பாய்ச்சும் போது ஆடையில் ஏற்படும் நிற மாற்றம் ஆகும். ஐயன் இன்சர்ஷன் பொருட்கள் கண்டக்டர்களில் புகுத்தப்படுகிறது. இவற்றில் ஐயன்களை வேகமாகவும், தலைகீழாக செருகி எலெக்ட்ரோக்ரோமிக் பாகங்களாக பயன்படுத்த முடியும்.

    வாட்ச் பேண்ட் கண்டக்டரில் ஆப்ஷனாக ஷேப் மெமரி அலாய் வழங்கப்படுகிறது. இது கண்டக்டரில் வோல்டேஜ் செலுத்தும் போது வடிவத்தை மாற்றும். நிற மாற்றத்திற்கு தேவையான அதே அளவு வோல்டேஜ்-ஐ கண்டக்டரிலும் செலுத்தலாம். இவ்வாறு வடிவம் மாறுவது பயனருக்கு ஹேப்டிக் ஃபீட்பேக் வழங்குகிறது. பயன்பாட்டுக்கு வரும் போது இந்த தொழில்நுட்பம் வழக்கமான வாட்ச் பேண்ட்களுக்கு வித்தியாசமான, புதுமை மிக்க மாற்றாக அமையும்.

    Photo Courtesy: Patently Apple

    Next Story
    ×