search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் வாட்ச்
    X
    ஆப்பிள் வாட்ச்

    உலகளவில் ஸ்மார்ட்வாட்ச் விற்பனையில் முதலிடம் பிடித்து கெத்து காட்டும் ஆப்பிள்

    ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    அதேபோல் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் பிரபலம் அடைந்ததன் காரணமாக சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. ஹவாய், சியோமி மற்றும் கார்மின் ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 வது இடங்களை பெற்றுள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களான அமேஸ்பிட் 4 சதவீத வளர்ச்சி உடன் 6-வது இடத்தில் உள்ளது.

     ஆப்பிள் வாட்ச்

    முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் அதிக வளர்ச்சி கண்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் அமைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தென் கொரியாவை சேர்ந்த ஹவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் 10.1 சதவீத வளர்ச்சியைக் கண்டதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் தாக்கம் இந்த முதல் காலாண்டில் தெரியவில்லை என்றும், அதன் பாதிப்பு இரண்டாம் காலாண்டில் எதிரொலிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×