என் மலர்
நீங்கள் தேடியது "குலுக்கல்"
- ஜெர்மனியில் நடுவானில் சென்றபோது விமானம் குலுங்கியது.
- இதனால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெர்லின்:
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து ரியானேர் என்ற விமானம் புறப்பட்டது. இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்தனர்.
நடுவானில் சென்றபோது பலத்த புயல் காற்று வீசியது. அப்போது விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகள் இருக்கை மீது மோதினர்
இதனால் பீதியடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து, விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி பவேரியாவின் மெம்மிங்கன் விமான நிலையம் அருகே விமானம் வட்டமிட்டது. பின்னர் விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் 185 பேரும் உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவத்தில் பணியாளர் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதனையடுத்து பவேரியா விமான நிலையத்தில் இருந்து விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டது. எனவே பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.
- 228 பள்ளிகளில் நாளை காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்ல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 013-2014-ம் கல்வி ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
மேலும் 2023-2024ம் கல்வி ஆண்டிற்கு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள 228 பள்ளிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பித்த பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






