என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் மணிமேகலை பேசினார்.

    பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆன்லைன் வகுப்பில் படிக்கும் போது வரக்கூடிய வீடியோ கால்களை ஆன் செய்யக்கூடாது.
    • பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு காவல்துறையின் உதவி மைய எண்களை தொடர்பு கொண்டு உதவி பெற்றுக் கொள்ளலாம்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாலுகா ஆலங்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான தடுப்பு பிரிவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    இதில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமேகலை மாணவ -மாணவிகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினார் .

    அப்போது ஆன்லைன் வகுப்பில் படிக்கும் போது வரக்கூடிய வீடியோ கால்களை ஆன் செய்யக்கூடாது.இதன் மூலம் உங்களது புகைப்படங்களை மாற்றி தவறான வழியில் மற்றவர்கள் பயன்படுத்தக்கூடும். அதேபோல் முகநூல், வாட்ஸ் அப்பில் உங்களது முகப்பு படத்தை வைக்க கூடாது. பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு காவல்துறையின் உதவி மைய எண் 1098, 1930 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு எப்போது வேண்டுமானாலும் உதவி பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

    மேலும் சைபர் கிரைம் சப்- இன்ஸ்பெக்டர் கணபதி பேசும்போது:-வங்கி மோசடி அதிகமாக நடக்கிறது. ஆன்லைன் மூலம் வங்கி மோசடி அதிகம் நடக்கிறது. ஓ.டிபி.வருவதை யாரிடமும் பகிரக்கூடாது .அதேபோல் தற்கொலை எண்ணங்களை தவிர்த்து விட வேண்டும் என்றார்.முடிவில் தலைமை ஆசிரியர் (பொ) ஆனந்தன் நன்றி கூறினார்.

    Next Story
    ×