search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election commission"

    • பாஜக வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • வேட்புமனு நிராகரிப்பால் எனது மனம் உடைந்திருக்கலாம் அனால் எனது தைரியம் உடையாது. வாரணாசியில் இன்று என்னடையதையும்ம சேர்த்து 32 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

    மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் மொத்தமாக எண்ணப்பட உள்ளது. பாஜக வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முந்தினம் (மே 14) பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் பிரபல நகைச்சுவைக் கலைஞர் சியாம் ரங்கீலா நேற்று (மே 15) வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமானவர் இவர்.

    ஆரம்ப காலங்களில் 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு தீவிர ஆதரவாளராக இருந்த சியாம் ரங்கீலா அதன்பின்னர் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து தனது நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இவரது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் வாரணாசியில் எதிர் வேட்பாளர் இல்லாமல் மோடி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று தான் அவரை எதிர்த்து நிற்க முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார்.

     

    இந்நிலையில் உறுதிமொழி படிவத்தை நிரப்பவில்லை எனக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வேட்புமனு நிராகரிப்பால் எனது மனம் உடைந்திருக்கலாம் அனால் எனது தைரியம் உடையாது. வாரணாசியில் இன்று என்னடையதையும் சேர்த்து 32 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணயத்தைப் பார்த்து சிரிப்பதா?அழுவதா? என்று தெரியவில்லை. மோடி நடிக்கவும் அழுகவும் செய்யலாம், ஆனால் நான் அழப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

    • 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம்.
    • 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்த பிறகும், தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை.

    பத்திரிகையாளர் அமைப்பான பிரஸ் கிளப் ஆப் இந்தியா பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

    அக்கடிதத்தில், "கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம்.

    இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் என்ன நடந்தது என்பதை பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும்.

    பத்திரிகையாளர் சந்திப்புகளில், பத்திரிகையாளர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றைத் தீர்த்து வைப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    பத்திரிகையாளர்கள் நடந்துகொண்டிருக்கும் தேர்தல்களைப் பற்றி மக்களுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் ஆணையர்கள் மின்னணு ஊடகங்கள் மூலம் வாக்காளர்களிடம் நேரடியாக பேசலாம்.

    நாடு முழுவதும் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்த பிறகும், தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தாதது குறித்து பத்திரிகையாளர் அமைப்புகளான நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். கடந்த தேர்தல்களில் இவ்வாறு நடந்ததில்லை. இந்த புதிய மாற்றங்கள் தேர்தல் நேர்மையாக நடக்கிறதா என்ற அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

    இந்தச் சூழலில், ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். மேலும், வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நாளுக்குள் பதிவான வாக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை மற்றும் இறுதியான வாக்குப்பதிவு சதவீதம் உள்ளிட்ட முழு வாக்குப்பதிவு தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று கோருகிறோம்.

    தேர்தல் முறையில் வாக்காளர்களின் நம்பிக்கையை உறுதிசெய்ய இத்தகைய வெளிப்படைத்தன்மை அவசியம். இந்தக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவு
    • குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குகள் பதிவு

    பாராளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற்றது.

    அன்று உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

    அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

    குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

    ஆண்கள் 67% பேரும், பெண்கள் 64% பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25% பேரும் வாக்களித்துள்ளனர்

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 85.45 சதவீதம்

    பீகார் 59.15 சதவீதம்

    சத்தீஸ்கர் 71.98 சதவீதம்

    கோவா 76.06 சதவீதம்

    குஜராத் 60.03 சதவீதம்

    கர்நாடகா 71.84 சதவீதம்

    மத்திய பிரதேசம் 66.75 சதவீதம்

    மகாராஷ்டிரா 63.55 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.55 சதவீதம்

    மேற்கு வங்காளம் 77.53 சதவீதம்

    • தேர்தல் ஆணையம் பதிலளித்த நிலையில் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
    • தேர்தல் ஆணையம், கூட்டணி கட்சிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் வலிமைக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார்.

    வாக்குப்பதிவு சதவீதத்தில் உள்ள முரண்பாடு குறித்து மல்லிகார்ஜூன கார்கே எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்த நிலையில் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் பக்கம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    ஒரு பக்கம் குடிமக்களின் கேள்வி கேட்கும் உரிமையை மதிப்பதாக கூறும் தேர்தல் ஆணையம் மற்றொரு பக்கம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது.

    தன்னுடைய கடிதம் கூட்டணிக் கட்சிகளுக்காக எழுதப்பட்டதே தவிர தேர்தல் ஆணையத்திற்காக எழுதப்படவில்லை.

    நேரடியாக கொடுக்கும் புகார்களையே நிராகரிக்கும் தேர்தல் ஆணையம், கூட்டணி கட்சிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    அரசியல் சாசனத்தின்படி நேர்மையான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.

    • கடந்த 10 ஆண்டுகளில் 22 பெரிய தொழிலதிபர்களுக்காக மோடி உழைத்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் நர்சாபூர் மற்றும் ஐதராபாத் சரூர் நகர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-

    இந்திய அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டும் அல்ல. ஏழைகளின் இதய துடிப்பு. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை அதிரடியாக மாற்றுவோம்.

    இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் கூறி வருகிறது. அம்பேத்கர், மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் அரசியல் சட்டத்திற்காக போராடினார்கள்.

    அவர்கள் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மாற்றி அவர்களின் தியாகத்தை வீணாக்குவது தான் பா.ஜ.க.வின் யோசனையாக தற்போது இருக்கிறது. அரசியல் சாசனத்தை காங்கிரஸ் முன் நின்று பாதுகாக்கும்.

    தற்போது இதற்காகத்தான் தேர்தல் போர் நடந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் 22 பெரிய தொழிலதிபர்களுக்காக மோடி உழைத்தார். அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இந்த நிதி மூலம் நாடு முழுவதும் 24 ஆண்டுகளுக்கு தேவையான வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் சட்டப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் ரூ. 250-ல் இருந்து 400 ஆக உயர்த்தப்படும்.

    அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும். கோடீஸ்வரர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி அரசு கோடீஸ்வரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றியது.

    நாங்கள் ஏழைகளை கோடீஸ்வரர்களாக மாற்றுவோம். தொழிலதிபர்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடிக்கு பதில் சொல்லாதவர்கள் ஏழைகளுக்கு நல்லது செய்வீர்களா என எங்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர். நாங்கள் எப்போதும் ஏழைகளின் பக்கம் தான் நிற்கிறோம். ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் இந்தியா முழுவதும் 30 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இருவரும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.

    ராகுல் காந்தி நின்றபடியே அரசு பஸ்சில் பயணம் செய்தார். அவர் பெண்களுக்கான இலவச பஸ் பயண வசதி குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ராகுல் காந்தி பஸ் பயணத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.
    • சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் ஒருவர் ஓட்டு போடுபவர்களுக்கு இலவசமாக முடி வெட்டப்படும் என அறிவித்துள்ளார்.

    விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆர்.கே. சலூன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன். வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.

    பொதுமக்கள் ஓட்டு போட்டதும் எனது கடைக்கு வந்து இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம். மேலும் விசாகப்பட்டினத்தில் முத்தியாலம்மா கோவில் அருகிலுயும் எனக்கு மற்றொரு கடை உள்ளது. அங்கு சென்று பொது மக்கள் இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம்.

    இந்த சலுகையை பெற வாக்கு அளித்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாராளுமன்ற தேர்தலின் பொது ஒரு வாக்குச்சாவடிக்கு பாஜக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர் தனது மகனை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் இருப்பது பாஜகவின் பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹரின் மகன் என்றும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 7-ம் தேதி வாக்குச் சாவடிக்கு தனது தந்தையுடன் சென்று வாக்களிக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    அந்த வீடியோவில் தந்தையும் மகனும் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பது பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி சந்தீப் சைனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    குஜராத்தில் உள்ள தாஹோத் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக ஜஸ்வந்த்சிங் பாபோர் உள்ளார்.

    இந்நிலையில், தாஹோத் மக்களவைத் தொகுதியில் உள்ள பர்தாம்பூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அத்தொகுதியின் பாஜக எம்.பியின் மகன் விஜய் பாபோர் கைப்பற்றினார். அது சம்பந்தமான வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர் நேரடியாக ஒளிபரப்பினார்.

    பின்பு விஜய் பாபோர் அந்த வீடியோவை நீக்கினார். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    தஹோத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தாவியாட் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், பர்தாம்பூர் வாக்குச்சாவடியில், மே 11-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தாஹோத் தொகுதியில் 58.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், எஸ்சி/எஸ்டி சமூகத்திற்கு எதிராக கர்நாடக பாஜக வெளியிட்ட வீடியோ தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா ஆகியோரை 7 நாட்களுக்குள் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது. இதனையடுத்து எக்ஸ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது.
    • கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    குஜராத் மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது.

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    குஜராத்தில் உள்ள தாஹோத் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக ஜஸ்வந்த்சிங் பாபோர் உள்ளார்.

    இந்நிலையில், தாஹோத் மக்களவைத் தொகுதியில் உள்ள பார்த்தம்பூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அத்தொகுதியின் பாஜக எம்.பியின் மகன் விஜய் பாபோர் கைப்பற்றினார். அது சம்பந்தமான வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர் நேரடியாக ஒளிபரப்பினார்.

    பின்பு விஜய் பாபோர் அந்த வீடியோவை நீக்கினார். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது,

    தஹோத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தாவியாட் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தாஹோத் தொகுதியில் 58.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

    • காலை முதலே ஆர்வமுடன் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
    • 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை துவங்கியது.

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப் பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    இன்று (மே 7) உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.

    இந்த நிலையில், இன்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 75.26 சதவீதம்

    பீகார் 56.55 சதவீதம்

    சத்தீஸ்கர் 66.99 சதவீதம்

    தாத்ரா, டயு மற்றும் டாமன் 65.23 சதவீதம்

    கோவா 74.27 சதவீதம்

    குஜராத் 56.76 சதவீதம்

    கர்நாடகா 67.76 சதவீதம்

    மத்திய பிரதேசம் 63.09 சதவீதம்

    மகாராஷ்டிரா 54.77 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.34 சதவீதம்

    மேற்கு வங்காளம் 73.93 சதவீதம்

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    ×