search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்புமனு"

    • முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நகல் வெளியீடு.
    • அண்ணாமலை வேட்புமனு தொடர்பாக அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் புகார்

    கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.

    தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டது.

    நீமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளை பயன்படுத்தியே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி.

    தேர்தல் விதிக்கு முரணாக நீதிமன்ற முத்திரைத்தாளை அண்ணாமலை பயன்படுத்தியுள்ளதால் அவரது வேட்புமனுவை செல்லாது என அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தொடர்பான ஆவண நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    நான் ஜூடிஷியல் (Non Judicial) முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நகல் வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், "கோவையில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை எண் 17, எண் 27 என இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார். எண் 17 வேட்புமனு Court Fee பத்திரத்தில் கையெழுத்து இல்லாமல் இருந்ததால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் எண் 27 வேட்புமனுவை Non Judicial பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டதால் அந்த மனு ஏற்கப்பட்டது" என்றார்.

    • 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
    • யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.

    இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆகும்.

    வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வட சென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.


    40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

    வடசென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ, தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பா.ஜ.க. வேட்பாளர் வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆகியோர் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள ராயபுரம் மண்டல அலுலகத்திற்கு பரிசீலனையில் போது வந்திருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு வேட்பாளரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் மனு ஏற்கப்பட்டது.

    அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்புமனுவில் முந்தைய வழக்குகளின் விவரங்களை குறிப்பிடவில்லை என்று தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு அ.தி.மு.க.வினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்தல் அதிகாரி உடனே ராயபுரம் மனோவின் மனுவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மீண்டும் 12.45 மணிக்கு வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் என்று கூறினார்.

    இதே போல் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது வேட்புமனு தாக்கலின் போது விதிகளை மீறியதால் தி.மு.க. வேட்பாளரின் மனுவை ஏற்கக் கூடாது என்று அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் தி.மு.க. வேட்பு மனுவையும் தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்தார். இந்த மனு மீது மதியம் 12.45 மணிக்கு பரிசீலனை நடைபெறும் என்று அறிவித்தார்.

    அ.தி.மு.க., தி.மு.க. இரு வேட்பாளர்களின் மனுக்களையும் காலையில் நிறுத்தி வைத்ததால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான எம்.சந்திரகாசன் மனுதாக்கல் செய்திருந்தார். அங்கு வேட்பாளரை மாற்றப் போவதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சந்திர காசி திடீரென்று மனு தாக்கல் செய்தார். அதே நேரத்தில் சந்திரகாசியின் வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படாததால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு பரிசீலனையின் போது வேட்புமனுவில் சில பிழைகள் இருப்பதாக கூறப்பட்டதால் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனுவும் பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் ஏற்கப்பட்டது.

    சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செல்வகணபதிக்கு சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாக அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆன்லைன் மூலமும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் செய்தனர். அதே போல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் செல்வகணபதி சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாகவும், பழைய வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனுவை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மற்ற மனுக்கள் பரிசீலனை முடிந்ததும் கடைசியாக இந்த மனுவை பரிசீலனை செய்வதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    இதற்கிடையே செல்வ கணபதி சார்பில் கடந்த 2015-ம் ஆண்டே இரட்டை வாக்குரிமைகளில் ஒன்றை நீக்குமாறு மனு கொடுத்ததாக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்தனர்.

    தேனி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு மீதான பரிசீலனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு விவரங்களை வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிடவில்லை என்று கூறி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

    கரூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனு மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மனு ஏற்கப்பட்டது.

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதி மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    தென்சென்னையில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் வேட்புமனுவும், பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனுவும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.

    கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகன் வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு, விருதுநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராதிகா சரத்குமார், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி, கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், கடலூர் பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சான் மனுக்களும் ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் மனுவும் ஏற்கப்பட்டது.

    இதேபோல் பெரும்பாலான அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

    யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.

    • அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது.
    • வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    நெல்லை:

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறார்.

    இதனையொட்டி அவர் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அவரது பெயரை போலவே பெயர் கொண்ட மேலும் 4 பேர் நேற்று சுயேட்சைகளாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்த்து, கேசவபுரம் கடஞ்சிகுளத்தை சேர்ந்த பா.கிருஷ்ணசாமி, சிவகிரி விஸ்வநாதபேரி காந்தி காலனியை சேர்ந்த மூ.கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த க.கிருஷ்ணசாமி, சிதம்பராபுரம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த வெ.கிருஷ்ணசாமி (45) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரை கொண்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    • அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
    • வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரத்தில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் தொடங்குவது அ.தி.மு.க.வின் வழக்க மாகும். ஜெயலலிதா, தான் தொடங்கும் அனைத்து செயல்களையுமே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே தொடங்கி அதில் வெற்றியையும் கண்டிருக்கிறார்.

    இப்போது அவரது வழியை பின்பற்றியே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்களை ஒதுக்கியது போக மீதமுள்ள 32 இடங்கள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஆகியவற்றில் அ.தி.மு.க. வேட்பாளர்களே களம் இறங்குகிறார்கள்.

    இவர்கள் அனைவரும் திருச்சியில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். பின்னர் அனைவரும் நாளை தங்களது தொகுதிகளுக்கு சென்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். நாளை மதியம் 12 மணி முதல் 1 மணிவரை புதன் ஓரையாகும்.

    அந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். முன்னதாக நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு வேட்பு மனுக்களில் கையெழுத்து போடவும் அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி மேற் கொண்டிருந்த இந்த ஜோதிட நம்பிக்கை அரசியலில் அவருக்கு எப்படி கை கொடுக்கப் போகிறது? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • மாநகராட்சி பகுதியில் உள்ள பகுதி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, ஆண்டிபாளையம் மற்றும் முத்தணம்பாளையம் ஆகிய 3 கிளைகளுக்கு, பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தி.மு.க.,பகுதி கிளை நிர்வாகிகள் தேர்தலுக்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறவுள்ளது.தி.மு.க.,வின் 15வது உட்கட்சி அமைப்பு தேர்தல் கடந்த பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இதில் மாநகராட்சி பகுதியில் உள்ள பகுதி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பகுதியில் உள்ள பகுதி கிளைகளுக்கான வேட்பு மனுக்கள் நாளை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெறப்படும். தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் மனுக்களை பெறுகிறார்.

    இதில், திருப்பூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட வேலம்பாளையம், அண்ணா நகர், பாண்டியன் நகர், கொங்கு நகர், வாலிபாளையம் மற்றும் நல்லுார் ஆகிய ஏழு கிளைகளுக்கு, மத்திய மாவட்ட அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

    அதேபோல் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, ஆண்டிபாளையம் மற்றும் முத்தணம்பாளையம் ஆகிய 3 கிளைகளுக்கு, பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது. இதில் பகுதி கிளைக்கு, அவைத் தலைவர், செயலாளர், மூன்று துணை செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

    • குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • தேர்தலுக்கான இடம், நாள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 9 ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு வினியோகம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழு கினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    தலைமை கழக பிரதிநிதி வக்கீல் அருள்தாசன் விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார். நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினர் காலை 10 மணிக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு, அன்று மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவங்களை உரிய கட்டணத்துடன் மாவட்ட அலுவலகத்தில் தலைமை கழக பிரதிநிதியிடன் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வேட்பு மனுவை பரி சீலனை செய்து போட்டி யிருக்கும் ஒன்றிய கழகத் தேர்தலை நாளை (செவ் வாய்க்கிழமை) முதல் 9-ந் தேதிக்குள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயலாளர் தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கான இடம், நாள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×