search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Examination"

    • இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன.
    • இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி.

    அண்மையில் தகுதித்தேர்வு குறித்து ராகுல்காந்தி பேசிய வீடியோ வைரலானது.

    அந்த வீடியோவில், "இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன. அந்தத் தேர்வுகள் அமல்படுத்தப்பட்ட போது வெள்ளையர்கள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றனர். கறுப்பினத்தவரும் லத்தீன் அமெரிக்கர்களும் தேர்ச்சி பெற முடியவில்லை. அவர்களுக்கு தகுதியும் அறிவும் இல்லை எனப் பேசினார்கள்.

    பிறகொரு நாள் ஒரு பேராசிரியர் வந்தார். அதே தேர்வுத்தாள்களை கறுப்பினத்தவர்களைக் கொண்டு தயார் செய்து, கறுப்பினத்தவர்களை எழுத வைத்தார். வெள்ளை மாணவர்கள் எவரும் தேர்ச்சி பெற முடியவில்லை.

    எனவே இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி."

    உயர் சாதியினர் நடத்தும் தேர்வுகளில் தலித்துகள் தோல்வி அடைகிறார்கள் என்று சொன்னால், ஒன்று செய்வோம், தலித்துகளை தேர்வுத் தாளை தயாரிக்க வைத்து, உயர் சாதியினரை தேர்வு எழுதச் சொல்லுங்கள்" என்று ராகுல்காந்தி பேசுகிறார்.

    தகுதியின் சிக்கலான விஷயங்களை ராகுல்காந்தி மிக எளிமையாக விளக்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள்.
    • ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம்.

    ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

    அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை.

    தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர்.

    ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.

    "முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது" என்கின்றனர் மருத்துவர்கள்.

    மேலும், "பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு 'நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை."

    ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

     

    ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.

    ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.

    உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. 'எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்' என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

    உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். 'மெடிட்டரேனியன் டயட்' எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை.

    பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

    குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம்.

    "உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும்.

    அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது.

    இதுபோன்ற வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் இரத்த அழுத்ததினால் வரும் உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

    • ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.
    • ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல், 10-ந்தேதி அறிவியல் தேர்வும், 12-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    11-ந்தேதி ஈகைப் பெரு நாள்(ரம்ஜான்) விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதால் அன்று மட்டும் தேர்வுகளை நடத்தாமல் அதற்கு முந்தைய தினமும் பிந்தைய தினமும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பெருநாட்கள் இரண்டும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.

    நமது நாட்டில் பெரும்பாலும் வட பகுதியில் ஒருநாளும், தென்பகுதியில் மற்றொரு நாளும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் சூழலில் ஏப்ரல் 10-ந்தேதி அன்றும் 12-ந் தேதி அன்றும் தேர்வுகளை எழுதுவது என்பது முஸ்லிம் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும்.

    எனவே ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மின் தொடர்பான புகார்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் மின்ன கத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்மர் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய (பொறுப்பு) பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம் உள்பட பல இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. கடந்த வாரம் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 4 பேராசிரியர்கள் மற்றும் விருந்தினர் மாளிகை தற்காலிக ஊழியர் உள்பட 5 பேருக்கு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து 5 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது துணை வேந்தர் மீது போடப்பட்ட வழக்கின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன் மட்டுமே அந்த அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணை வேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு முன்பு திரண்டனர். கவர்னர் வருவதற்கு முன்பாகவே அங்கு திரண்டிருந்த 156 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30 போலீசார் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர் வசதி மையம், கணினித்துறை அலுவலகம், தமிழ்துறை அலுவலகம், ஆவணங்கள் பாதுகாக்கும் அலுவலகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் தீனதாயன் யோஜனா கிராமின் கவுசல்யா அலுவலகம் ஆகிய 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக இந்த சோதனை நடத்தப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை இரவு 11 மணி வரை நடந்தது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் சோதனையை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 14 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகை, போலீஸ் சோதனை, மாணவர் அமைப்புகள் போராட்டம் ஆகியவை காரணமக நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சென்னை:

    புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கல்யாண சுந்தரம் . இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார் இந்த தேர்வில் தனித் தேர்வலராக அவர் பங்கேற்றார். அப்போது இவருக்கு பதில் வேறு ஒருவர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.

    இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பித்தார்.

    போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சண்முகசுந்தரம் அமைச்சராக இருந்த போது என்.ஆர்.காங்கிரசில் இருந்தார். தற்போது காலாபட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    • இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வேதியியல் மற்றும் கணிதவியல் துறை மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டு இருந்தனர். அவர்கள் வராண்டாவில் தங்களது பையில் 8 செல்போன்களை வைத்து சென்றனர். தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
    • தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும்.

    சென்னை:

    பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    புளு வைரஸ்களால் பரவும் இன்புளுயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோ தனை செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம் மருத்துவா்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள் பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்று நோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு 'ஓசல்டா மிவிா்' எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

    அதேபோன்று தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 'ஓசல்டாமிவிா்' உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

    மருத்துவத்துறையினா், சுகாதாரக் களப்பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக்கவசங்களை அணிய வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • பரிசோதிக்கபட்டு உரிய ஆலோசானைகள் வழங்கப் பட்டு மருந்துகள், சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி சார்பில் 27-வது வார்டு பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ உதவி பெற்றனர். இந்த முகாமை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி நீலக்கண்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் விஜய், ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இதில் ரத்த அழுத்தம், உடல் எடை, சர்க்கரை அளவு ஆகியன பரிசோதிக்கபட்டு உரிய ஆலோசானைகள் வழங்கப் பட்டு மருந்துகள், சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

    • ராமாநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் பரிசோதனை செய்து கொண்டார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன் னிலை வகித்தார்.

    இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை மருத்து வம், தோல் சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், தொடர் பான அனைத்து வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மேல் சிகிச்சை தேவைப்படு பவர்களுக்கு ஆலோசனை களும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தின குமார், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இதில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
    • உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது.

    கோவை,

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    கோவையில் 427 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வில் 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து, இதில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

    இதனை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்த உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது. 

    • அரசு பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • பரிசு தொகை வழங்கி பாராட்டினர்.

    மேலூர்

    மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் சார்பாக மேலூர் தாலுகா அரசு பள்ளியில் படித்த 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அரசு பொதுத் தேர்வு எழுதி மேலூர் தாலுகா அளவில் முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் வளாகத்தில் நடைபெற்றது. 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர் வில் அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகள் நிரஞ்சனா மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 487 மதிப்பெண் பெற்று முதலி டம் பெற்றார். அவருக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகள் சாருமதி மேலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று 478 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகள் பிரிய தர்ஷினி தனியாமங் கலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் பயின்று 473 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கினர். 12-ம் வகுப்பு பொதுத் தேர் வில் வெள்ளலூர் கிராமத் தை சேர்ந்த சேதுராஜன் மகள் முத்து மீனாட்சி மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 558 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 25,000 பரிசு தொகையை வழங்கி னர்.

    கருங்காலக்குடியை சேர்ந்த காதர் பாட்சா மகன் முகமது பாரூக் கருங்காலக் குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பயின்று 557 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த திருப் பதி மகள் மகாலட்சுமி உறங் கான்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பயின்று 556 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கி பாராட்டி னர்.

    இந்த நிகழ்ச்சியில் டை மண்ட் ஜூப்லி கிளப் தலை வர் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேச பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவி, சேது பாண்டி, மகாராஜன், இப்ரா ஹிம் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.

    ×