search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதி"

    • அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.
    • மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட காஜி நியமனம் செய்யப்பட உள்ளது. காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவர்கள் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவ னத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

    காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோ ர்கள் மேற்கண்ட தகுதியுடை வர்களாக இருப்பின் விண்ண ப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் 30.11.2023-க்குள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
    • போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ், பிளஸ் 2 பயிலும் சிறந்த 15 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர். நடப்பாண்டுக்கான காமராஜர் விருது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தரப்பில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி விருதுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியலை பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • வி.ஏ.ஓ. பதிவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்க வேண்டும் என மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிவகங்கை

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் சந்தான கிருஷ்ணன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    விவசாயத்துறை பணியான அக்ரி ஸ்டாக் பணியை செய்யும்படி கிராம நிர்வாக அலுவலர்களை கட்டாயப்படுத்த கூடாது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட செயல்படாத சிம்கார்டுகளை திரும்ப பெற்று அதற்கு பதிலாக அனைவருக்கும் இணையதள சேவை செலவின தொகையாக மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர் பதவியை மீண்டும் டெக்னிக்கல் பதவியாக அறிவிக்க வேண்டும். தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு வருவாய் கணக்குகள் தனியாக உள்ளதற்கு ஏற்ப கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சான்றுகள் வழங்குதல் தொடர்பான களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு வசதியாக அரசு மூலம் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். எரிபொருள் செலவினம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், மாநில செயலாளர்கள் செல்வன், பாண்டியன், விஜயராஜ், மாநில அமைப்பு செயலாளர் அசோக்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தென்றல் தமிழோசை நன்றி கூறினார்.

    • நாளை காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று கொள்ளலாம்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவினா சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பாம்பூர் கவினா இண்டர் நேஷனல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் தென் மாவட்ட5-வது குறு வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது. தென் பொதுவக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இளமுருகு இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் கண்ணதாசன் பாண்டியன், தாளாளர் ஹேமலதா கண்ணதாசன், விளங்குளத்தூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

    முதல்வர் சுமிசுதிர் வரவேற்றார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் கவினா பள்ளியைச் சேர்ந்த 12 வயது பிரிவு மாணவி ஹேமதர்ஷினி, 14 வயது பிரிவு சுரேகா, 17 வயது பிரிவு ஜோஷிதா ஆகியோர் முதலிடம் பெற்று 3 தங்கப் பதக்கங்களை பெற்றனர்.மேலும் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் 13 வெள்ளி பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

    அவர்களையும், நீச்சல் பயிற்சியாளர்கள் விஜயேந்திரன், சரவணன்,உடற்கல்வி ஆசிரியை சத்யா ஆகியோரையும் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும், பாராட்டினர்.

    • கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 255 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
    • அரசுப்பள்ளி மாணவர்களில் 64 பேர் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றனர்.

    கடலூர்:

    நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை கட லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 532 மாணவ, மாணவிகள் எழுதினர்.இவர்களில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 266 பேர், அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 65 பேர், அரசு உதவி பெறும் பள்ளி களைச் சேர்ந்தவர்கள் 21 பேர், மெட்ரிக், சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 180 பேர் ஆவார்கள். நீட் தேர்வு முடிவு அண்மையில் வெளியானது. இதில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியான மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றவர்களின் பட்டியலை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்டது.

    அதன்படி, அரசுப்பள்ளி மாணவர்களில் 64 பேர் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி யைப் பெற்றனர். மேலும், 12 பேர், இந்த ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இதேபோல, அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்தவர்களில் 33 பேர் அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ள நிலையில், 4 பேர் நேரடியாக மட்டுமே விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றனர். அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த வர்களில் 10 பேரும், மெட்ரிக், சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 132 பேரும் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பூஸ்டர் கடந்த 15ந் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது உட்பட்டவர்களுக்கு முதல் தவணை 87 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 63 சதவீதம் பேருக்கும், 15 முதல் 18 வயது உட்பட்டவர்களுக்கு முதல் தவணை 87 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 74 சதவீதம் பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை 98 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 76 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் கடந்த 15ந் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை செலுத்தி 6மாதங்கள் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.இந்த தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவசமாக அடுத்த செப்டம்பர் 30-ந் தேதி வரை செலுத்தப்படும்.

    இது குறித்து, கலெக்டர் வினீத் கூறியதாவது:-

    மாவட்டத்தில் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் ஆன, 10 லட்சத்து 14 ஆயிரத்து 495 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை செலுத்திய ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து 949 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரத்து 444 பேர் உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×