விழுப்புரம் மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்

அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விழுப்புரம் மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட காஜி நியமனம் செய்யப்பட உள்ளது. காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவர்கள் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவ னத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோ ர்கள் மேற்கண்ட தகுதியுடை வர்களாக இருப்பின் விண்ண ப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் 30.11.2023-க்குள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com