search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ முகாம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    மருத்துவ முகாமை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார்.


    மருத்துவ முகாம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • ராமாநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் பரிசோதனை செய்து கொண்டார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன் னிலை வகித்தார்.

    இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை மருத்து வம், தோல் சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், தொடர் பான அனைத்து வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மேல் சிகிச்சை தேவைப்படு பவர்களுக்கு ஆலோசனை களும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தின குமார், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×