search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Humanity People's Party"

    • ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.
    • ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல், 10-ந்தேதி அறிவியல் தேர்வும், 12-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    11-ந்தேதி ஈகைப் பெரு நாள்(ரம்ஜான்) விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதால் அன்று மட்டும் தேர்வுகளை நடத்தாமல் அதற்கு முந்தைய தினமும் பிந்தைய தினமும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பெருநாட்கள் இரண்டும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.

    நமது நாட்டில் பெரும்பாலும் வட பகுதியில் ஒருநாளும், தென்பகுதியில் மற்றொரு நாளும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் சூழலில் ஏப்ரல் 10-ந்தேதி அன்றும் 12-ந் தேதி அன்றும் தேர்வுகளை எழுதுவது என்பது முஸ்லிம் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும்.

    எனவே ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒன்றிய அரசு ஒருவேளை உதவித் தொகையை வழங்க மறுத்துவிட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என முதலமைச்சர் அறிவிப்பு.
    • கிறிஸ்துமஸ் பெருவிழாவில் இனிப்பான அறிவிப்பை வழங்கியமைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய அரசு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்ற மாணவர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்திலிருந்து வழங்கி வந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகையை திடீரென்று இந்த ஆண்டில் இருந்து நிறுத்துவதாக அறிவித்தது.

    இந்நிலையில் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துவிட்ட உதவித் தொகையை உடனே மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒன்றிய அரசு ஒருவேளை இந்த உதவித் தொகையை வழங்க மறுத்துவிட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்திய அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் ஆற்றிய உரையின் போது இனிப்பான அறிவிப்பை வழங்கியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×