search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு தள்ளுபடி"

    • விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சென்னை:

    புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கல்யாண சுந்தரம் . இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார் இந்த தேர்வில் தனித் தேர்வலராக அவர் பங்கேற்றார். அப்போது இவருக்கு பதில் வேறு ஒருவர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.

    இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பித்தார்.

    போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சண்முகசுந்தரம் அமைச்சராக இருந்த போது என்.ஆர்.காங்கிரசில் இருந்தார். தற்போது காலாபட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    • பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்தனர்.
    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை வரவேற்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இதில் ஒன்றிய செய லாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்ட செய லாளர் பாலமுருகன், ராஜ்குமார், நாகரத்தினம், மாணவரணி பகுதி செய லாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனைவியிடம் இருந்து பராமரிப்பு வேண்டும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என நீதிபதி கருத்து.
    • மாதாந்திர பராமரிப்பு மற்றும் வழக்கு செலவுகள் ரூ.2 லட்சம் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    பெங்களூரு:

    பொதுவாக விவாகரத்து வழக்குகளில் ஜீவனாம்சம் கேட்டு பெண்கள் வழக்கு தொடர்வது வழக்கம். இதற்கு மாறாக கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தனது மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு தனது சகோதரியின் மகனின் பிறந்தநாளில் கலந்து கொண்டதற்காக கணவன்-மனைவியுடன் சண்டை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பெற்றோரின் வீட்டிற்கு சென்றார். பின்பு கணவனிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்

    மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் கேட்டிருந்தார். குடும்பநல நீதிமன்றம், அவரது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து கணவர் தான் 2 ஆண்டுகளாக வேலையில்லாமல் இருந்ததாகவும், தன்னிடம் பணம் இல்லை. மனைவி பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனக்கு ரூ.2. லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அவரது மனுவை குடும்ப நல கோர்ட்டு நிராகரித்தது. இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் மனைவிக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு மற்றும் வழக்கு செலவு ரூ.25 ஆயிரம் வழங்க குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து, மாதாந்திர பராமரிப்பு மற்றும் வழக்கு செலவுகள் ரூ.2 லட்சம் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, உத்தரவிட்டார்.

    மனுதாரருக்கு வேலை இல்லை, தன்னைப் பராமரிக்க வழி இல்லை, எனவே, மனைவியை பராமரிக்கும் நிலையில் இல்லை, மனைவியிடம் இருந்து பராமரிப்பு வேண்டும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது, கொரோனா காலத்தில் தனது வேலையை இழந்ததால், அவர் சம்பாதிக்க முடியாதவர் என்று கூற முடியாது.

    எனவே, கணவன் தனது சொந்த நடத்தையால் மனைவியின் கைகளில் இருந்து பராமரிப்பைப் பெறுவதன் மூலம் நிதானமான வாழ்க்கையை நடத்த முடிவு செய்துள்ளார் என்பது ஏற்க முடியாதது.

    மேலும், இந்து திருமண சட்டத்தின் 24 வது பிரிவின் கீழ் ஏற்க முடியாத செயலாகும். தன்னையும், மனைவியையும், குழந்தையையும் பராமரிப்பது ஒரு திறமையான கணவனின் கடமை, என்று நீதிபதி குறிப்பிட்டார். 

    ×