search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awarded"

    • அரசு பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • பரிசு தொகை வழங்கி பாராட்டினர்.

    மேலூர்

    மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் சார்பாக மேலூர் தாலுகா அரசு பள்ளியில் படித்த 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அரசு பொதுத் தேர்வு எழுதி மேலூர் தாலுகா அளவில் முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் வளாகத்தில் நடைபெற்றது. 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர் வில் அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகள் நிரஞ்சனா மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 487 மதிப்பெண் பெற்று முதலி டம் பெற்றார். அவருக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகள் சாருமதி மேலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று 478 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகள் பிரிய தர்ஷினி தனியாமங் கலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் பயின்று 473 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கினர். 12-ம் வகுப்பு பொதுத் தேர் வில் வெள்ளலூர் கிராமத் தை சேர்ந்த சேதுராஜன் மகள் முத்து மீனாட்சி மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 558 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 25,000 பரிசு தொகையை வழங்கி னர்.

    கருங்காலக்குடியை சேர்ந்த காதர் பாட்சா மகன் முகமது பாரூக் கருங்காலக் குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பயின்று 557 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த திருப் பதி மகள் மகாலட்சுமி உறங் கான்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பயின்று 556 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கி பாராட்டி னர்.

    இந்த நிகழ்ச்சியில் டை மண்ட் ஜூப்லி கிளப் தலை வர் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேச பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவி, சேது பாண்டி, மகாராஜன், இப்ரா ஹிம் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.

    • மாநில இளைஞரணி துணை செயலாளர் சங்கீதபிரியன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • ஒலிம்பிக் வீரர் விஷாலை மதகடிபட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணி வித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    ஜெர்மனியில் நடை பெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பவர் லிப்டிங் விளையாட்டுப் போட்டியில் 4 வெள்ளி பதக்கங்களை பெற்று புதுவையை சேர்ந்த இளம் வீரர் விஷால் இந்தியா விற்கும் புதுவைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    இந்த இளைஞரை பாராட்டும் வகையில் புதுச்சேரி மாநில பா.ம.க. கட்சியின் அமைப்பாளர் கணபதி தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒலிம்பிக் வீரர் விஷாலை மதகடிபட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணி வித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் புதுவைமாநில வன்னியர் சங்க செயலாளர்கள் நாகப்பன், நரசிம்மன், ராஜசேகர், மாலா தங்கமணி, மாநில துணை அமைப்பாளர் வடிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் திருபுவனை தொகுதி பொறுப்பாளர் சரவணன், இளைஞரணி கலைச்செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் சங்கீதபிரியன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் இயக்கிய அரசு பஸ் ஓட்டுனருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
    • ஓட்டுனர் ரவிச்சந்திரன் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்

    கரூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலம் குளித்தலை கிளையில் பணிபுரியும் ஓட்டுனர் ரவிச்சந்திரன் (வயது58). இவர் கடந்த 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் சிறப்பாக பணி புரிந்ததற்காக டெல்லியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தேசிய விருது விழாவில் ரவிச்சந்திரனுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சிறந்த ஓட்டுநருக்கான விருதினை வழங்கினார். இவ்விருதினை பெற்ற ஓட்டுனர் ரவிச்சந்திரன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து ஓட்டுனர் ரவிச்சந்திரன் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது துணை மேலாளர் (வணிகம்&தொழில்நுட்பம்) சுரேஷ்குமார், உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) சேகர் மற்றும் உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


    • கலெக்டர் வழங்கினார்
    • மாணவர்களை பாராட்டி சான்றிதழ்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் கல்வி இணையச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ,மாணவிகள் 30 பேருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, மாணவ, மாணவிகள் 30 பேருக்கு பெருந்தலைவர் காமராசர் விருதும், பரிசுத் தொகையும் வழங்கி பாராட்டினர். மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில், அரியலூர் மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களில் சிறந்த 30 மாணவ, மாணவியர்களை மாவட்ட அளவில் தேர்ந்தெடுத்து, அம்மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பாராட்டுச் சான்றிதழ் பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000 வீதம் 15 மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.20,000 வீதம் 15 மாணவர்களுக்கும் என மொத்த ரூ.4,50,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    • சிறப்பாக பணி புரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான நவம்பர் மாதத்திற்கான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை நடந்தது.

    இதில் சிறப்பாக பணி யாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் லோகநாதனுக்கு 2-ம் பரிசும், முன்னாள் ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் சீனிவாசனுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி)சாத்தூர் தனி வட்டாட்சியர்நா.சீதா லட்சுமிக்கு முதல் பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் சாந்திக்கு 2-ம் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் சிவக்குமாருக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவண க்குமாருக்கு முதல்பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி க்கு 2-ம் பரிசும், காரியா பட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி க்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்ட த்துணை ஆய்வாளர் மாரிமுத்துக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்டத்துணை ஆய்வாளர் கார்த்தி கேயனுக்கு 2-ம் பரிசும், சிவகாசி வட்டத்துணை ஆய்வாளர் சுப்புராஜாவுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார் ஆய்வாளர் சுரேசுக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்ட சார் ஆய்வாளர் கணேசன், ராஜபாளையம் வட்ட குறுவட்ட அளவர் ராஜீவ்காந்தி ஆகியோருக்கு 2-ம் பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டிசெல்வி, சாத்தூர் வட்ட குறுவட்ட அளவர் ராதா ருக்குமணி ஆகியோருக்கு 3-ம் பரிசும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

    கரூர்:

    கரூர் எம் குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு ஐசிடி அகாடமியால் பிரிட்ஜ் 22 என்ற நிகழ்ச்சியில் லேர்னதான் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதானது இமேஜ் புரோசெசிங் ஆன்ராம்ப் யூசிங் மேட்லப் என்னும் பாடப்பிரிவில் அதிகபட்ச மாணவர்களின் சான்றிதழைக் கொண்ட சிறந்த வளாகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐசிடி அகாடமியின் ஆட்டோடெஸ்க் மூலம் இயங்கும் வடிவமைப்புக்கான சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் இவ்விருதினை தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்க, கரூர் எம் குமாரசாமி பொறியியல் கல்லூரியின் செயலாளர் இராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் கட்டிடவியல் துறை தலைவர் செந்தில்குமார், இயந்திரவியல் துறை தலைவர் மோகன்ராஜ் மற்றும் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் ரூபாயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். #dmk #mkstalin

    சென்னை:

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 4 கோடி ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 75 லட்சத்து 90 ஆயிரம். கடந்த பிப்ரவரி மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் ரூபாயை இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

    நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.  #dmk #mkstalin

    இந்திய, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்கு தென் கொரியா நாட்டின் மிக உயரிய சியோல் அமைதி விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். #Modiawarded #SeoulPeacePrize
    சியோல்:

    தென் கொரியா நாடு கடந்த 1990-ம் ஆண்டில் 24-வது ஒலிம்பிக் போட்டிகளை தலைநகர் சியோலில் வெகு சிறப்பாக நடத்தியது.

    இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றிய உலக தலைவர்களுக்கு ஆண்டுதோறும் சியோல் அமைதி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான விருதுக்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 1300 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இப்பரிசுக்கு தேர்வாகியுள்ளார்.



    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால் தூய்மையான அரசை உருவாக்கியதற்காகவும் உலக நாடுகளுடன் நட்புறவை பாராட்டி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக சியோல் அமைதி பரிசு குழு தெரிவித்துள்ளது.

    மேலும், சமூகப் பொருளாதார அமைப்பில் மாற்றத்தை உண்டாக்கி பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு உதவியாக மோடி அரசின் கொள்கைகள் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #Modiawarded #SeoulPeacePrize
    தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர். #Modi #Amritanandamayi #SwacchBharat
    புதுடெல்லி:

    சர்வதேச தூய்மை மாநாடு புதுடெல்லி கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.

    அவர் வழங்கிய ரூ.100 கோடி மூலமாக கங்கைக்கரையில் வசிக்கக் கூடிய ஏழை, எளிய மக்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் ஆசிரமத்தின் தூய்மைத் திட்டங்கள் குறித்த காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மாநாட்டில் மத்திய மந்திரிகள் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ், மனோஜ் சின்கா, ஹர்தீப்சிங்பூரி மற்றும் 50 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  #Modi #Amritanandamayi #SwacchBharat 
    ×