search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஐடி"

    • பிரபலமான 30 நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்புகளை ஆய்வு செய்தனர்.
    • ஒரு மனிதனுக்கு 0.6 மில்லிகிராம் புளோரைடு தேவைப்படுகிறது.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் குறைந்தபட்ச கால்சியம், மெக்னீசியம், குளோரைடு, புளோரைடு மற்றும் சோடியம் ஆகியவற்றை நிர்ணயம் செய்ய இந்திய தர நிலைகள் நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

    பிரபலமான 30 நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்புகளை ஆய்வு செய்தனர். நிலத்தடி நீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனங்களின் தண்ணீரில் மொத்த கரைந்த உப்புகளின் மதிப்பை குறைக்கிறது. 2000 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட உப்பு அளவை 56 மில்லி கிராம் வரை மட்டுமே பயன்படுத்துகிறது என்று வல்லுனர்கள் கண்டறிந்து உள்ளனர். தற்போது விற்பனையில் உள்ள பிரபலமான குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் கனிம சத்துக்கள் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 188 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் இருக்கலாம் என இந்திய உணவு தரநிலை வலியுறுத்திய நிலையில் இந்த நிறுவனங்கள் 3.5 மில்லி கிராம் மட்டுமே சேர்க்கிறது.

    உணவு உட்கொள்வதில் இருந்து பல தாதுக்கள் பெறப்படலாம். அவற்றில் சில புளோரைடுகள் தண்ணீரில் மட்டுமே உள்ளன. குறைந்த புளோரைடு எடுத்துக்கொண்டால் பல் சிதைவை ஏற்படுத்தும். அதிக புளோரைடு உட்கொண்டால் பற்களில் நிறமாற்றம் மற்றும் எலும்பு பலவீனம் ஏற்படலாம் என்று ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பேராசிரியர் சுதர்ஷினி கூறினார்.

    ஒரு மனிதனுக்கு 0.6 மில்லிகிராம் புளோரைடு தேவைப்படுகிறது. தரநிலை நிர்ணயம் வரம்பு 1.5 மில்லி கிராம் ஆகும். பரிசோதிக்கப்பட்ட குடிநீரில் 0.08 மில்லி கிராம் அளவே இருந்துள்ளது.

    உணவு இல்லாமல் தண்ணீர் மட்டும் குடிப்பதன் மூலம் ஒருவர் 7 நாட்கள் உயிர் வாழ முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்கள் பாட்டிலில் அடைக்கப்பட குடிநீரை மட்டுமே குடித்தால் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்று சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் இளங்கோ கூறினார்.

    • நாடு முழுவதும் 23 ஐஐடி மையங்கள் உள்ளன
    • ஐடி நிறுவனங்கள் பெருமளவு பணி சேர்க்கையை குறைத்து விட்டன

    உயர்தர பொறியியல் படிப்பிற்காக உலகம் முழுவதும் பிரபலமானவை நாடெங்கிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT).

    மத்திய கல்வி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இவை ஒவ்வொன்றும் தன்னாட்சி கொண்ட கல்வி மையங்கள்.

    சென்னை உட்பட நாடு முழுவதும் 23 ஐஐடி மையங்கள் உள்ளன.

    ஆண்டுதோறும் 2 கட்டங்களாக ஐஐடி வளாகங்களுக்கு வந்து பன்னாட்டு முன்னணி நிறுவன உயர் அதிகாரிகள் இறுதி ஆண்டு மாணவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்வது வழக்கம்.

    "கேம்பஸ் இன்டர்வியூ" என அழைக்கப்படும் இந்த "வளாக நேர்காணல்" முறையில் தேர்வாகும் மாணவர்களுக்கு பெரும் தொகை ஊதியமாக கிடைப்பது வழக்கம்.

    இதன் முதல் கட்டம் டிசம்பர் மாதம் தொடங்கி சில நாட்களில் நிறைவு பெறும். இரண்டாம் கட்டம், ஜனவரியில் தொடங்கி மே வரை நடைபெறும்.

    2024-ஆம் வருட மாணவர்களுக்கு 1-ஆம் கட்ட நேர்முக தேர்வுகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.

    2024ல், எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக, 2023-ஐ விட பணி நியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.

    இதை ஈடு செய்யும் வகையில் விரைவில் தொடங்க உள்ள இரண்டாம் கட்ட நேர்முக தேர்வுகளில் ஓவ்வொரு ஐஐடியிலும் உள்ள பணி சேர்க்கை அமைப்பினர் (recruitment cell), அதிகளவில் மாணவர்களை பணியில் சேர்த்து விட தீவிரமாக முயன்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் மூலம் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்பை குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

    சில ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்ப சேவைக்கான நிறுவனங்கள் புதிய ஊழியர் சேர்க்கையை பெருமளவு குறைத்து விட்டன.

    வளாக சேர்க்கை (campus recruitment) முறையில் பணிகள் கிடைப்பது அரிதாகி விட்டதால் இறுதி ஆண்டு மாணவர்கள் தனித்தனியே மனு போட்டு வெளியில் வேலை தேட துவங்கி விட்டனர்.

    ஐஐடி மாணவர்களுக்கே வேலை வாய்ப்பு குறைந்து வருவது தீவிரமாக பார்க்கப்பட வேண்டிய நிலவரம் என்றும் இந்நிலை தொடர்ந்தால் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலையை ஒப்பு கொள்ள மாணவர்கள் தயாராகி விடலாம் எனவும் சில மனித வள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஐஐடி சென்னையின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • புதிய ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.

    தொழில்நுட்ப கல்வியில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) உலகப்புகழ் வாய்ந்தது.

    இந்நிறுவனத்தின் முதல் அயல்நாட்டு வளாகம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தான்சானியாவிற்கு சென்றிருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியில் உள்ள தான்சானியா தீவுக்கூட்டமான சான்சிபாரில், ஜெய்சங்கர் மற்றும் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவின்யி ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் கல்வி அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ் மற்றும் சான்சிபாரின் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் ஆகியோருக்கிடையே ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று கையெழுத்தானது.

    இந்த வளாகம், இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரதிபலிக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள மக்களுடன் நல்லுறவுகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்துவதையும் இதன் மூலம் இந்தியா நினைவூட்டுகிறது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை அங்கீகரித்து, சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதன் மூலம், இரு தரப்பிற்கான கல்வி கூட்டுறவு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    ஐஐடி கல்வி நிறுவனம், தற்போது இந்தியா முழுவதும் 23 இடங்களில் இயங்கி வருகிறது.

    "உயர் செயல்திறன் கொண்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்ற நாடுகளில் வளாகங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்" என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளதில் மகிழ்ச்சி.
    • இந்தியக் கல்வி இப்போது சிறந்ததாக மட்டுமல்ல, இது உலகின் மிகச் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது.

    இங்கிலாந்தில் உள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) என்ற அமைப்பு உலகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து உலகின் சிறந்த பல்லைக்கழக தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில நேற்று வெளியிட்டுள்ள தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150 இடத்திற்குள் வந்து சாதனைப் படைத்துள்ளது. ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் 2016-ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) 147-வது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் தற்போது ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்குமுன் இருந்ததில் இருந்து 23 வரிசை முன்னேறி 149 இடத்தை பிடித்துள்ளது.

    அதேவேளையில் இந்திய அறிவியல் கழகம் 155-வது இடத்தில் இருந்து 225-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி 174-ல் இருந்து 197-வது இடத்திற்கும், ஐ.ஐ.டி. கான்பூர் 278-வது இடத்திலும், ஐ.ஐ.டி. சென்னை 250-ல் இருந்து 285 இடத்திற்கும் பின்தங்கியுள்ளன.

    இந்நிலையில், ஐஐடி மும்பை 149-வது இடத்தை பிடித்தது தொடர்பாக மத்திய அமசை்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டின் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கல்வியை மாற்றியுள்ளார்.

    இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. இனி குறைந்த இந்தியர்கள் சிறந்த கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்தியக் கல்வி இப்போது சிறந்ததாக மட்டுமல்ல, இது உலகின் மிகச் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது.

    நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்திருத்தப்படுவதில் இருந்து தொடங்குகிறது.

    780ம் இடம் பிடித்து, சிறந்து விளங்கிய சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    மேலும் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு, உலகக் கண்ணோட்டத் தரவரிசை மற்றும் QS தரவரிசை முறைகள் மற்றும் பிற முயற்சிகள் அந்த வேகத்தைத் தொடரும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவ அறுவை சிகிச்சை எந்திரங்கள் பழுதடைந்தால் அதை சரி செய்யும் திறமை மருத்துவர்களிடம் இருப்பதில்லை.
    • முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். இணையவழி வகுப்புகள் கிடையாது.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை என்ற புதிய துறை நேற்று தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் நாட்டிலேயே முதல் முறையாக பி.எஸ். மெடிக்கல் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காக்னிசன்ட் நிறுவன இணை நிறுவனர் லட்சுமி நாராயணன், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள், மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை வடிவமைக்கும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்படுவர். இதற்கான அணுகு முறைகளை இந்த துறை வழங்கும்.

    மேலும் மருத்துவ நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த ஏதுவாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், நாட்டில் மருத்துவர்- விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியையும் இந்த துறை மேற்கொள்ளும்.

    இது குறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் மற்றும் மருத்துவத்தை இணைக்க இது மிகப்பெரிய முன்னெடுப்பாக இருக்கும். மருத்துவ அறுவை சிகிச்சை எந்திரங்கள் பழுதடைந்தால் அதை சரி செய்யும் திறமை மருத்துவர்களிடம் இருப்பதில்லை.

    பொதுவாக 95 சதவீத மின்னணு சாதனங்கள் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவிலேயே மருத்துவ பயன்பாடுகளுக்கான கருவிகள், எந்திரங்கள், தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான முதல்படி சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை ஐ.ஐ.டி. யில் தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள துறை மூலம் பி.எஸ்.மருத்துவ அறிவியல்-தொழில்நுட்பம் (4 ஆண்டு படிப்பு), மருத்துவர்களுக்கான முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள், அறிவியல்- பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆராய்ச்சி படிப்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    நாட்டில் முதல் முறையாக பி.எஸ்.மருத்துவ அறிவியல் - பொறியியல் பாடப்பிரிவு தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் தொடங்கப்பட்டு உள்ளது.

    பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் படித்த மாணவர்கள் ஜூலை மாதம் நடைபெறும் 'ஐ.ஏ.டி.' நுழைவுத் தேர்வு எழுதி பி.எஸ்.படிப்பில் சேரலாம்.

    இந்தப் பாடப்பிரிவுக்கு முதல் கட்டமாக 30 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். இணையவழி வகுப்புகள் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • ஐஐடி காரக்பூரின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வெங்கயப்பய ஆர் தேசாய் ஐஐடி தார்த்வாட்டின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்தியகல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஐடி பிலாய் இயக்குநர் ரஜத் மூனா, ஐஐடி காந்திநகர் இயக்குநராகவும், ஐஐடி தார்வாட் இயக்குநர் பசுமார்த்தி சேசு ஐஐடி கோவாவின் இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இரண்டாவது முறையாக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஐஐடி இயக்குநர்கள் – கே.என் சத்தியநாராயணா (ஐஐடி திருப்பதி) மற்றும் மனோஜ் சிங் கவுர் (ஐஐடி ஜம்மு), ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களான சேஷாத்ரி சேகர் மற்றும் ஸ்ரீபாத் கர்மல்கர் ஆகியோர் முறையே ஐஐடி பாலக்காடு மற்றும் ஐஐடி புவனேஷ்வரின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஐஐடி காரக்பூரின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வெங்கயப்பய ஆர் தேசாய் ஐஐடி தார்த்வாட்டின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஐடி பிஹெச்யுவின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியைச் சேர்ந்த ராஜீவ் பிரகாஷ் ஐஐடி பிலாய் இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பள்ளி இறுதியாண்டு தேர்வில் 98.40 சதவிகித மதிப்பெண் எடுத்தும் கோச்சிங் செல்ல பணம் இல்லாததால் சத்தீஸ்கர் மாணவர் தனது ஐஐடி கனவை தியாகம் செய்துவிட்டு பி.எஸ்சி படிக்க சேர்ந்துள்ளார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் சிம்கா பகுதியை சேர்ந்த சிவ்குமார் பாண்டே என்ற மாணவர், நடந்து முடிந்த பள்ளி இறுதியாண்டு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். 3.6 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 98.40 சதவிகித மதிப்பெண் எடுத்த சிவ்குமார் பாண்டே எப்படியாவது ஐஐடி.யில் பொறியியல் படிக்க வேண்டும் என முயன்று வந்தார்.

    ஆனால், ஐஐடி.யில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற கோச்சிங் போக வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தனது தந்தையால் அதிகம் செலவு செய்ய இயலாது என்பதால், தனது ஐஐடி கனவை தியாகம் செய்துவிட்டு ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி சேர்ந்துள்ளார்.

    ஏற்கனவே, சிவ்குமாரின் மூத்த சகோதரர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பணம் செலவளிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை கைவிட்டுள்ளார். எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆக இருக்கும் சிவ்குமாரின் தந்தை மாதம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில், மகனின் கல்விக்கு அரசு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

    மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்களுக்கு வழங்கப்படும் அரசு பணம், செப்டம்பர் மாதம்தான் கையில் கிடைக்கும் என்பதால், அதனை விரைந்து வழங்கினால் மகனின் கல்விக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    அரசியலமைப்பு சட்டத்தின் 377 பிரிவுக்கு எதிராக முன்னாள் ஐஐடி மாணவர்கள் 20 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. #Article377
    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 377 பிரிவு ஓரினச்சேர்க்கையை குற்றம் என கருதுகிறது. இயற்கைக்கு மாறான உறவு என அதில் ஓரினச்சேர்க்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கல் தாக்கல் செய்யப்படுள்ளன. இந்த மனுக்கள் அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில், ஐஐடி மாணவர்கள் அமைப்பில் உள்ள 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் 377-க்கு எதிராக புதிய மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, மத்திய அரசு இது தொடர்பாக பதில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
    ×