search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JEE Exam"

    • நாடு முழுவதும் 290 நகரங்களிலும், அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளிலும் நடந்த இந்த தேர்வை 11 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.
    • அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது.

    நாடு முழுவதும் 290 நகரங்களிலும், அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளிலும் நடந்த இந்த தேர்வை 11 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். ஆங்கிலம், இந்தி மட்டுமில்லாது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டிருந்தது. அபுதாபி, ஹாங்காங் மற்றும் ஒஸ்லோ நகரங்களில் முதல்முறையாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் ஜே.இ.இ, முதன்மை தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    இதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார். தேர்வு எழுதிய 11 லட்சம் மாணவர்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 23 மாணவர்கள் 300-க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர். அவர்களில் முகுந்த் பிரதீசும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்தவரிசையில் மாணவிகள் யாரும் இடம்பெறவில்லை. அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    2-ம் கட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான விண்ணப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    திருப்பூர்:

    உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்தாண்டுக்கான நுழைவுத்தேர்வு வருகிற 2024 - 25 கல்வியாண்டுக்கு, ஜே.இ.இ., முதன்மை மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ் என இரண்டு தேர்வுகளாக நடைபெற உள்ளது. ஜனவரி 24 -ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை, ஜே.இ.இ., முதன்மை தேர்வு நடக்கிறது.

    முதன்மை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வெழுத தகுதியான மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந்தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்கள், சந்தேகங்கள் இருப்பின் அதனை 011 - 40759000 அல்லது 011 - 69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

    • சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 'கிரேடு' குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர்களால் எளிதாக விண்ணப்பிக்க முடிகிறது.
    • தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் குறிப்பிடுவதற்காக ஏதேனும் குறியீட்டை அறிவிக்க வேண்டுகோள்

    சென்னை:

    2023 ஆம் ஆண்டிற்கான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. முதற்கட்ட தேர்வு, 2023 ஜனவரி 24 முதல் 31ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 12ல் முடிகிறது. விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்ணை கட்டாயம் பதிவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் பத்தாம் வகுப்பு முடித்தபோது, மதிப்பெண் இன்றி, 'ஆல் பாஸ்' மட்டும் வழங்கப்பட்டதால், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 'கிரேடு' குறிப்பிடப்பட்டு உள்ளதால், அவர்களால் எளிதாக விண்ணப்பிக்க முடிகிறது.

    மாநில திட்டத்தில் படித்த மாணவர்கள் விண்ணப்பக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பள்ளிக் கல்வித் துறை விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

    நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அதற்கான இடங்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் குறிப்பிடுவதற்காக ஏதேனும் குறியீட்டை தேசிய தேர்வு முகமை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020-21ம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின், 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. எந்த மதிப்பெண்ணும் இன்றி, 'தேர்ச்சி' என்று மட்டும் குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆல் பாஸ் பெற்று, பிளஸ் 1 சேர்ந்த மாணவர்கள், நடப்பு ஆண்டில் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.

    ×