என் மலர்
நீங்கள் தேடியது "நெல்லை மாணவர்"
- நாடு முழுவதும் 290 நகரங்களிலும், அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளிலும் நடந்த இந்த தேர்வை 11 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.
- அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது.
நாடு முழுவதும் 290 நகரங்களிலும், அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளிலும் நடந்த இந்த தேர்வை 11 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். ஆங்கிலம், இந்தி மட்டுமில்லாது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டிருந்தது. அபுதாபி, ஹாங்காங் மற்றும் ஒஸ்லோ நகரங்களில் முதல்முறையாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்பட்டது.
இந்தநிலையில் ஜே.இ.இ, முதன்மை தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார். தேர்வு எழுதிய 11 லட்சம் மாணவர்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 23 மாணவர்கள் 300-க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர். அவர்களில் முகுந்த் பிரதீசும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தவரிசையில் மாணவிகள் யாரும் இடம்பெறவில்லை. அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
2-ம் கட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான விண்ணப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது.
- இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.
தேனி மாவட்டம் போடி அருகே மேலசொக்கநாதபுரம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு திருநெல்வேலி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் எலெக்ரானிக் கம்யூனிகேசேன் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் அந்த கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவர் மர்மமான முறையில் கழிவறையில் இறந்து கிடந்தார். மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் எறும்பு கடித்து மாணவர் இறந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, "எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்" என்று பொறுப்பற்ற முறையில் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது. இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி. இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.
பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப ஸ்டாலின் மாடல் திமுக அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது.
மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.






