search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civil Services"

    • மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையுடன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை இணைந்து நடத்திய சிவில் சர்வீஸ் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் திண்டிவனம் சப் -கலெக்டர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மயிலம் என்ஜீனியரிங் கல்லூரி விழுப்புரம் மாவட்டத்தில் தலைசிறந்த கல்லூரியாக திகழ்ந்து வருகிறது. மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு பாட ங்களுடன் தனித்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சி கள் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமை பணி தேர்வு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மயிலம் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலை வர் சுகுமாரன், செயலாளர் மருத்துவர் நாராயணசாமி மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயங்குனர் முனைவர் செந்தில் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் இராஜப்பன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா கலந்துகொண்டு மாணவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்நிகழ்சியில் மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியில் பயிலும் அனைத்து துறையைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    அதனைத்தொடர்ந்து மாணவர்கள் சார்பில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பான முறையில் இயல்பான பாணியில் விளக்கிக்கூறி னார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மயிலம் என்ஜீனியரிங் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் மற்றும் தொழில்நுட்பத்துறையின் துறைத்தலைவர் கலைவாணி ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

    ×