search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவை- மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
    X

    இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவை- மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

    • உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளதில் மகிழ்ச்சி.
    • இந்தியக் கல்வி இப்போது சிறந்ததாக மட்டுமல்ல, இது உலகின் மிகச் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது.

    இங்கிலாந்தில் உள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) என்ற அமைப்பு உலகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து உலகின் சிறந்த பல்லைக்கழக தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில நேற்று வெளியிட்டுள்ள தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150 இடத்திற்குள் வந்து சாதனைப் படைத்துள்ளது. ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் 2016-ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) 147-வது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் தற்போது ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்குமுன் இருந்ததில் இருந்து 23 வரிசை முன்னேறி 149 இடத்தை பிடித்துள்ளது.

    அதேவேளையில் இந்திய அறிவியல் கழகம் 155-வது இடத்தில் இருந்து 225-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி 174-ல் இருந்து 197-வது இடத்திற்கும், ஐ.ஐ.டி. கான்பூர் 278-வது இடத்திலும், ஐ.ஐ.டி. சென்னை 250-ல் இருந்து 285 இடத்திற்கும் பின்தங்கியுள்ளன.

    இந்நிலையில், ஐஐடி மும்பை 149-வது இடத்தை பிடித்தது தொடர்பாக மத்திய அமசை்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டின் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கல்வியை மாற்றியுள்ளார்.

    இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. இனி குறைந்த இந்தியர்கள் சிறந்த கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்தியக் கல்வி இப்போது சிறந்ததாக மட்டுமல்ல, இது உலகின் மிகச் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது.

    நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்திருத்தப்படுவதில் இருந்து தொடங்குகிறது.

    780ம் இடம் பிடித்து, சிறந்து விளங்கிய சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    மேலும் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு, உலகக் கண்ணோட்டத் தரவரிசை மற்றும் QS தரவரிசை முறைகள் மற்றும் பிற முயற்சிகள் அந்த வேகத்தைத் தொடரும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×