iFLICKS தொடர்புக்கு: 8754422764

மலை பகுதியில் மழை - களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்ததால் தலையணையில் தண்ணீர் குறைய தொடங்கியது. நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மார்ச் 16, 2018 10:46

கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாதிசான்றிதழ் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

மார்ச் 16, 2018 10:38

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை

ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் நில ஆவணங்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மார்ச் 16, 2018 10:08

சேலம் அருகே ஆம்னி பஸ் - வேன் மோதி விபத்து - வியாபாரி உள்பட 3 பேர் பலி

சேலம் அருகே ஆம்னி பஸ் மீது வேன் நேருக்கு நேர் மோதியதில் வியாபாரி உள்பட 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்ச் 16, 2018 10:07

நெல்லை- தூத்துக்குடியில் 6 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்

நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் ஆபத்து நீங்கியதை அடுத்து 6 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் இன்று அதிகாலையில் கடலுக்கு சென்றனர்.

மார்ச் 16, 2018 09:57

கோடை காலத்தில் பால் தட்டுப்பாடு அபாயம் - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்

கோடை காலத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் செங்கோட்டு வேலு தெரிவித்தார்.

மார்ச் 16, 2018 09:51

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 185 கிராம் தங்கத்தை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மார்ச் 16, 2018 09:26

இன்சூரன்ஸ் தொகைக்காக ஜவுளி வியாபாரி கொலை - மனைவி, கள்ளக்காதலனிடம் விசாரணை

ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே ஜவுளி வியாபாரியை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

மார்ச் 16, 2018 09:24

நாமக்கல்லில் பெரியார் சிலைக்கு காவி நிற துணி போர்த்தியதால் பரபரப்பு

நாமக்கல்லில் பெரியார் சிலைக்கு காவி நிற துணி போர்த்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்ச் 16, 2018 08:53

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்ட விவசாயி படுகொலை

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட விவசாயியை கார் மோதி தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 15, 2018 22:09

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி மரணம்

சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி ரங்கநாயகி இன்று காலை காலமானார்.

மார்ச் 15, 2018 17:53

திருப்பூரில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை: நகை-பணம் கொள்ளை

திருப்பூரில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 15, 2018 17:03

கள்ளக்குறிச்சியில் மனைவி-குழந்தையை எரித்து கொன்ற வாலிபர் கைது

கள்ளக்குறிச்சியில் மனைவி மற்றும் 10 மாத குழந்தையை எரித்து கொன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

மார்ச் 15, 2018 17:01

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

தமிழக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. #TNAssembly

மார்ச் 15, 2018 16:19

தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை

தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 15, 2018 16:18

நெல்லையில் கனமழை - பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு

நெல்லையில் பெய்த திடீர் மழையால் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மாவட்ட நிர்வாகம் மூழ்கிய பயிருக்கு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மார்ச் 15, 2018 15:58

ஒருவர் மீது ஒருவர் குறை சொல்ல நேரமில்லை - சிறப்புத்தீர்மானம் மீது ஸ்டாலின் பேச்சு

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கூடியுள்ள சிறப்பு சட்டசபை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் எடபாடி பழனிசாமி கொண்டு வந்தார். #TNAssembly

மார்ச் 15, 2018 15:57

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுக்கிறது- சீமான் குற்றச்சாட்டு

மத்திய அரசு கர்நாடக தேர்தலை முன்னிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார். #seeman

மார்ச் 15, 2018 15:45

கால்வாயில் பிணமாக கிடந்த குழந்தை கொன்று வீச்சு? - போலீசார் தீவிர விசாரணை

திருச்செந்தூரில் கால்வாயில் பிணமாக கிடந்த குழந்தை குறித்து விசாரணை நடத்த போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 15, 2018 15:42

குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று மாலை மழை குறைந்ததால் அருவிகளிலும் வெள்ளம் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

மார்ச் 15, 2018 15:37

தினகரனால் பதவி பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம்- சி.ஆர்.சரஸ்வதி பேச்சு

தினகரன் மேலூரில் புதிய கட்சி, கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த விழாவில் பேசிய சி.ஆர்.சரஸ்வதி தினகரனால் பதவி பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம் என்று கூறினார்.

மார்ச் 15, 2018 15:36

5

ஆசிரியரின் தேர்வுகள்...