என் மலர்
நீங்கள் தேடியது "flower fair"
- மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.
- சுற்றுலாபயணிகள் வருகை மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.
ஊட்டி:
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு மே 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாபயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 பேரும், மே மாத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேரும், மலர் கண்காட்சியின் போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 179 சுற்றுலாபயணிகளும் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 சுற்றுலாபயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர் என்றனர்.
இந்நிலையில், சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
- ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
- இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சேலம்:
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது. விழா வில், சுற்றுலா துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பரா மரிப்புத்துறை, மீன்வ ளத்துறை உள்பட 42 துறைகள் சார்பில் அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஏற்காடு பூங்காவில் 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் (28-ந்தேதி) வரை ஒரு வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விழாவில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து, குடும்பத்துடன் ஏற்காட்டுக்கு வருகின்றனர்.
கோடை விழாவிற்காக பூங்காவில் பல்வேறு பூக்களால் வடி வமைக்கப்பட்ட டிராகன் உருவம், பொன்னியின் செல்வன் கப்பல், முயல் உருவம், மலர் படுக்கை, மலர் வளையங்கள், செல்பி பாய்ண்ட், சங்க கால மலர்கள், குடில்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் பிரிக்கப்படாமல் அப்ப டியே உள்ளது. அதனை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஏற்காடு ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்கின்றனர். இன்று வேலை நாள் என்ற போதி லும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். இதனால் ஏற்காடு சுற்றுலா தலம் களை கட்டியது.