search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    X

    உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    • நீலகிரியில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
    • இந்தாண்டு ரோஜா பூங்காவிலும் 19 ஆவது ரோஜா கண்காட்சி மே 10 அன்று தொடங்கியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.

    குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்தாண்டு ரோஜா பூங்காவிலும் 19 ஆவது ரோஜா கண்காட்சி மே 10 அன்று தொடங்கியது. 1 லட்சத்திற்கும் மேலான ரோஜா மலர்களை கொண்டு ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.

    இந்த கண்காட்சியை இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். 10 நாட்கள் நடைபெறும் ரோஜா கண்காட்சி இன்றுடன் முடிவந்தது.

    இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மே 22 வரை ரோஜா கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

    Next Story
    ×