search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Medicinal properties"

  • சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.
  • முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்.

   "முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு காரணம், முருங்கையில் மட்டும் எந்த பகுதியுமே வீண் கிடையாது.. அதனால்தான், அன்றைய வீடுகளில், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வளர்த்து வைத்திருப்பார்கள்.

  முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடிப்பாகம் முதல் இலைகள் வரை அவ்வளவும் மருத்துவ பொக்கிஷங்கள் அடங்கி உள்ளன.

  முருங்கை வேர் + அதன் பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் என்கிறார்கள்.

  முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.


  இளம் முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும் என்கிறார்கள்.. இந்த வேரின் சாறுடன் சம அளவு பால் சேர்த்து குடித்து வந்தால், விக்கல், இரைப்பு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகுவலி போன்றவையும் அகலும். முருங்கையீர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, ஆஸ்துமா, மார்புசளி, தலைவலி ஆகியவை குணமாகும். முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்..

  முருங்கைப்பூ : முருங்கைப்பூவை, ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், ஆண் மலடு நீங்கும். முருங்கைப்பூவை உட்கொள்ளும்போது, கண்பார்வை திறன் பெருகுகிறது.. முருங்கைப் பட்டையை தூளாக்கி, சிறிது கல் உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால், வீக்கங்கள் குறையும்.

  இப்படி முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன்தருகிறது என்றாலும், இந்த கீரையை மட்டும் வாரம் 3 முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். காரணம், முருங்கைக்கீரையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் B காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

  எதிர்ப்பு சக்திகள்: முருங்கைக்கீரை, சர்க்கரையை குறைக்கிறது. இதற்குள் ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன. ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். வேர்க்கடலை: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடும்போது, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவடையும்.

  தலைமுடி வளர: தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை. இதை உணவில் உட்கொள்ளும்போது, தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும்... மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். தோல் வியாதிகள் தீரும். உடல் சூட்டை தணிக்கும்.. தணியும் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.


  தோல் வியாதிகள்: முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது. உடல் எடை குறைய வேண்டுமானால், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை. முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும் என்கிறார்கள். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்.. முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளதால், இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

  முருங்கை ஜூஸ்: மேலும், மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, தொப்பை, உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. ஆனால், 7 நாட்கள் இதை குடித்தபிறகு, ஒரு இடைவெளி விடவேண்டும்... அதேபோல, மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், குழந்தைகள் இந்த ஜூஸை குடிக்கக் கூடாது என்கிறார்கள். இந்த முருங்கைக்கீரை மட்டும்தான், மற்ற கீரைகளைவிட மிகவும் ஸ்பெஷலாக கருதப்படுகிறது.. இதற்கான காரணங்களை பாருங்கள், நீங்களே அசந்துபோயிடுவீங்க

  பொக்கிஷம்: மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ஏ இந்த கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது. அதனால், எந்த அளவுக்கு முருங்கைக்கீரையை நாம் சேர்த்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நோய்கள் நம்மைவிட்டு விலகியே நிற்கும்..!!

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
  • தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.

  ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

  ஆளிவிதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கு பங்களிக்கும். நீண்ட மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

  ஆளிவிதையில் 18 முதல் 24 சதவீதம் புரதம் உள்ளது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

  ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்து நல்ல முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.

  ஆளிவிதைகளில் லிக்னான்ஸ் எனப்படும் தாவர கலவை உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டிஆக்சிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாத்து தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.

  மேலும் முடிவளர்ச்சிக்கு சீரான உணவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

  • சீலியாயிக், சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்க வல்லது.
  • அரிசியில் கஞ்சி வைத்து கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும்.

  தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பிரபலமான பழங்கால பழுப்பு அரிசி இந்த பூங்கார் அரிசி. இது மாப்பிள்ளை சம்பா அரிசி தோற்றத்தில் இருக்கும்.

  பூங்கார் கைகுத்தல் அரிசி தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று. பெண்களுக்கான பிரத்யேக அரிசி. கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து இந்த அரிசியில் கஞ்சி வைத்து கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும்.

  எலும்புகளை வலுப்படுத்தும். இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது.

  சீலியாயிக், சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்க வல்லது. உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க உதவும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

  இந்த வகை அரிசியை கொண்டு இட்லி செய்தால் மென்மையான இருக்கும். மேலும் தோசை, சாதம் வகைகள் செய்யலாம்.

  சிறப்புகள்:

  பூங்கார் அரிசியில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் மோலேபிடினம் ஆகிய தாதுக்கள் உள்ளன.

  பூங்கார் அரிசியில் உள்ள அத்ரோசயானின் ஒரு சிறந்த ஆண்டிஆக்சிடெண்ட் ஆகும்.

  மற்ற நவீன அரிசிகளை விட பூங்கார் அரிசியில் சற்று அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது.

  உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது ரத்த ஓட்டத்தை தடை செய்து இறுதியில் மாரடைப்புக்கு வழிவகுக்கும். பூங்கார் அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் கொழுப்பின் ஒட்டுமொத்த அளவை குறைக்க உதவுகிறது. இதனால் இதநோய் அபாயத்தை குறக்கிறது.

  பூங்கார் அரிசியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்கி செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை தடுக்கிறது.

  பூங்கார் அரிசி ஹார்மோன் அளவை பராமரிப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் உதவுகிறது. இதனால் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

  மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்கவும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் பூங்கார் அரிசி பெரிதும் பயன்படுகிறது.

  கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் அதிக அளவில் ஊறும். 

  பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.

  • அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர் தமிழர்கள்.
  • தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை.

  உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்கள் உணவு கலாசாரமாக இருந்தது. தமிழர்களின் முதன்மை உணவாக இருந்துவரும் அரிசியில் வெவ்வேறு ரகங்களை உருவாக்கி, அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர்.

  தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை, என்கிறார்கள் வேளாண் ஆய்வாளர்கள். அந்த அரிசி ரகங்களில் ஒன்றான இலுப்பைப்பூ சம்பா, தனித்துவமான மருத்துவ குணம் கொண்டது. மேலும் இது, அரிதான அரிசி ரகம் ஆகும்.

  இலுப்பைப்பூவின் நறுமணம் இந்த அரிசியிலும் வெளிப்படுவதன் காரணமாக இந்த அரிசிக்கு அதன் பெயர் வந்தது. இலுப்பைப்பூ சம்பா சாப்பிட மிகவும் மென்மையானது.

  பக்கவாத பாதிப்பை தடுக்க முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனராம். மூட்டு வலி, முடக்குவாத நோய்களை போக்கும். நோயால் பலவீனமானவர்களுக்கு இலுப்பைப்பூ சம்பா அரிசி கஞ்சியை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் பலவீனம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

  இந்த அரிசி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். முடக்குவாதத்தை தடுக்கிறது. உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.

  மிகக்குறைவான குளுக்கோஸ் அளவை கொண்டதால் நீரிழிவு நோயாளிகள் இலுப்பைப்பூ சம்பா அரிசியை தாராளமாக உட்கொள்ளலாம்.

  மேலும், உடலில் எலும்புகள் பலவீனம் அடைவதை தடுத்து வலுப்படுத்தும் குணம் இந்த அரிசிக்கு உண்டு.

  இதனால், வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கவும், வளரும் குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் உருவாகவும் இலுப்பைப்பூ சம்பா கஞ்சியை தரலாம்.

  இலுப்பை பூ சம்பா அரிசியின் நன்மைகள்:

  இலுப்பை பூ சம்பா அரிசி வீக்கம், மூட்டு பிரச்சனைகள், செயலிழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  இந்த தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கஞ்சி, சிகிச்சை பெறும் அனைவருக்கும், வயதானவர்கள் அல்லது குழந்தைகளுக்கு ஆற்றலை கொடுக்கிறது.

  இந்த அரிசி ஒரு இயற்கை தோட்டத்தில் பயிரிடப்பட்டு அரைக்கப்படுகிறது. இதன் விளைவாக, விவசாயத்தில் செயற்கை அல்லது களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

  காலப்போக்கில் அடிக்கடி உட்கொண்டால், உடலில் உள்ள கலவை அல்லது களைக்கொல்லி எச்சத்தின் தாக்கங்களை மாற்றுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

  கரிம உணவு பொதுவாக மிகவும் சுவையாக இருக்கும், உங்கள் பசியை அதிகரிக்கிறது மற்றும் போதுமான ஊட்டச்சத்தை பாதுகாக்க அல்லது மேம்படுத்த உதவுகிறது.

  இந்த அரிசியில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பக்கவாதத்தைத் தடுக்கிறது மற்றும் கீல்வாதம், மூட்டு சேதம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

  • உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
  • உள்ளூர் சந்தை மட்டுமின்றி வெளியூர்களுக்கும் ஏற்றுமதியாகிறது.

  ராமேசுவரம்:

  ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதியாக திகழ்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் தொழில் மீன்பிடி தொழில் உள்ளது. சுமார் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களாக உள்ளனர். இந்த பகுதியில் கிடைக்கும் இறால்மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையாக மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அன்னிய செலாவணியும் அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால் மீன்களை காய வைத்து கருவாடு ஆக்கினால் அதன் சுவையே தனித்தன்மை கொண்டது.

  தமிழர்களின் உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஆனால் ஏனோ, மீனை உணவில் சேர்த்து கொள்ளும் அளவுக்கு கருவாடை சேர்த்து கொள்வதில்லை. ஒருவேளை அதன் வாடை காரணமாகவும் இருக்கலாம் என்ற கருத்தும், அல்லது அதன் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. எனினும், நிறைய மருத்துவ குணங்களை இந்த கருவாடுகள் ஒளித்து வைத்து இருக்கிறது.

  கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பாம்பனில் மீன்களைக் கருவாடாக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

  அரியவகை மீன்கள் கிடைக்கும் பாம்பன் பகுதியில் விற்பனைக்குப் போக மிஞ்சும் மீன்கள் மற்றும் கருவாட்டுக்கு நல்ல சுவையுள்ள மீன்களைத் தேர்ந்தெடுத்து கருவாடாக்கி வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  இங்கு தயார் செய்யப்படும் கருவாடு உள்ளூர் சந்தைகள் மட்டுமில்லாமல் வெளியூர்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களைக் கருவாடாக்கும் பணி பாம்பனில் மும்முரமாக நடந்து வருகிறது.

  இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதால் டன் கணக்கிலான மீன்களைக் கருவாடாக காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் பாம்பன் பாலத்தின் கீழ் ஈடுபட்டு வருகின்றனர்.

   இதில், மருத்துவ குணம் கொண்டுள்ள நெத்திலி, திருக்கை, சாவாளை, வாழை, நகரை, கட்டா, மாசி, கனவாய், பால்சுறா போன்ற மீன்களை அதிகளவில் கருவாடாக்கி வருகின்றனர். தற்போது மீன் வரத்தினை பொறுத்து விலை இருக்கும் நிலையில், தடைக்காலம் என்பதால் கருவாடு விலை அதிகரித்துள்ளது.

  அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான். 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் உள்ளது. கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

  கருவாடுகளில் ஆண்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள் என்பது நம்பிக்கையுடன் கூடிய மருத்துவ முறையாக இன்றும் கருதப்படுகிறது.

  சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச்சாறு எடுத்துக்கொள்வது சிறந்த மருந்தாக இருக்கும் என்று கருத்து நிலவுகிறது. கருவாடு சாப்பிடுவதால் பூச்சிகளை அகற்றும். பித்தம், வாத, கப நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த கருவாடுக்கு உண்டு. மாதவிலக்கு பலவீனம், சீரமைப்பிற்கும், உடல் தேற்றத்திற்கும் இந்த சுறா கருவாடு உதவுகிறது. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.

  கொடுவா கருவாடு வாங்கி குழம்பு வைத்தால், அதுவே பலருக்கு மருந்தாகிவிடும். காரணம், கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் கொடுவா மீன், நமக்கு 79 கலோரி ஆற்றலை தருகிறது என்றால், 100கிராம் கொடுவா கருவாடு, 266 கலோரி ஆற்றலை நமக்கு தருகிறதாம்.

  அதாவது, கொடுவாமீனுடன் ஒப்பிடும்போது, புரதச்சத்து 4 மடங்கும், தாதுப்புக்களின் செறிவு 10 மடங்கும், இரும்புச் சத்து 5 மடங்கும், சுண்ணாம்புச்சத்து 2 மடங்கும் அதிகமாக இருக்கிறதாம்.

  இந்த கருவாடை சாப்பிட்டால், உடல்பலவீனம் மறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு இந்த கருவாடு. அதுபோலவே, கெளுத்தி மீனைவிட, உப்பங்கெளுத்தி கருவாட்டில்தான் சத்து அதிகம்.

  சீலா மீனைவிட, சீலா கருவாட்டில்தான் சத்து அதிகம். இறால் கருவாடை அடிக்கடி உணவில் பயன்படுத்தினால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறு உப்புசம் போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம். இன்னும் ஏராளமான கருவாடுகள் இருக்கின்றன. ஆனால், எல்லா கருவாடுமே நன்மை தரக்கூடியதுதான்.

  • முக்கனிகளில் பிரபலமான கனி வாழை.
  • அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கும்.

  முக்கனிகளில் பிரபலமான கனி வாழையாக கருதப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

  இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை உட்கொள்வதால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

  வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும். இதனால் தான் விளையாட்டு வீரர்கள் அடிக்கடி வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

  வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.

  உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தசோகை போன்ற

  குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

  தாது உப்புக்களைப் பொறுத்த வரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

  100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.

   மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

  ஒவ்வாமையால் கஷ்டப்படுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. இதில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

  தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான அல்சர் பிரச்சினை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

  வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

  • கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் பயன்படுத்தப்பட்டது.
  • ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

  மக்களுக்கு ஓமியோபதி மருத்துவம் சிறப்பானதாக இருக்கும் என்றார் மகாத்மா காந்தி. விலை குறைவு, உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் நிவாரணம் அளிப்பதால் உலக அளவில் மக்கள் பயன்படுத்தும் 2-வது மருத்துவமுறையாக ஓமியோபதி மருத்துவமுறை இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவத்தில் பெருமளவு தாவரங்களும், ஒரு சில உலோகங்களும் அணு வடிவமாக்கப்பட்டு மருந்தாக பயன்படுகின்றன.

  அந்த வகையில் நாம் வீடுகளில் வளர்க்கும் அழகு தாவரமான கலாடியம் என்ற செடியில் இருந்து மருந்து தயாரிக்கப்பட்டு அந்த செடியின் பெயரிலே வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த கலாடியம் மருந்து, தீவிர புகையிலை பழக்கத்தால் ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பசியின்மை, வாயு கோளாறு, கொசு கடித்தால் கூட தோலில் ஏற்படும் கடுமையான அரிப்பு, சிவப்பு கொப்பளங்கள், மூக்கு, காது மற்றும் தலையில் ஏற்படும் கொப்பளங்கள், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளையும் நீக்க ஓமியோபதி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

  கலாடியம் தாய் திரவத்தை சொட்டு மருந்தாக தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் புகைப்பழக்கம், புகையிலை பழக்கங்களில் இருந்து மீளலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.

  பொதுவாக, ஓமியோபதி மருந்துகளை தகுதி வாய்ந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தினால் பெரிய மருத்துவ செலவு இல்லாமல் பல நோய்களில் இருந்து வருமுன் தற்காத்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது.

  • மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
  • மாதுளையை சாப்பிட்டு வரும்போது இதயமும், மூளையும் வலிமை பெறும்.

  உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள் தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டு வரும் போது உடல் வலிமை பெறும்.

  இனிப்பு மாதுளையை சாப்பிட்டு வரும்போது இதயமும், மூளையும் வலிமை பெறும். அதுமட்டுமில்லாமல் பித்தம், இருமல் ஆகியவற்றை போக்கும். புளிப்பு மாதுளை சாப்பிட்டால் தடைபட்ட சிறுநீரை வெளியேற்றும் மற்றும் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

  சருமத்தை பராமரிக்கக்கூடியதில் மிகவும் முக்கியமானது வைட்டமின் ஈ. இது மாதுளம் பழத்தில் அதிகம் இருக்கிறது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

  இவற்றின் தோலை காய வைத்து பொடி செய்து பாசிப்பயறு மாவு சேர்த்து குளித்தாலும் அல்லது முகத்தில் பூசிக்கொண்டாலோ உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

  மாதுளம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் நார்சத்து போன்றவை இருக்கின்றது. இது கருவுற்ற பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வரும்போது மலச்சிக்கல் நீங்கும்.

  மாதுளம் பழம் சாற்றை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வரும்போது மாதவிடாய் பிரச்சினை நீங்கும். அதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

  மாதுளை தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கச்செய்கிறது. இதில் உள்ள தனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் தலைமுடியை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரச்செய்கிறது.

  மாதுளம் பழ விதைகளை பசும்பால் விட்டு அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து நஷ்டம் வேகக்கடுப்பு குணமாகி ஆண்மை தன்மை அதிகரிக்க உதவி செய்கிறது.

  • குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு நார்ச்சத்து முக்கியமானது.
  • அத்திப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன.

  உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களுக்கு அத்திப்பழம் சிறந்த தேர்வாக அமையும். அதில் இருக்கும் நார்ச்சத்து வயிறு நிறைந்த உணர்வை தரும். பசியை தடுக்கும். அதனால் அதிகம் சாப்பிடத்தோன்றாது.

  மேலும் அத்திப்பழத்தில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதோடு பல்வேறு உடல் நல நன்மைகளை அத்திப்பழம் வழங்குகின்றன. அவை ஒட்டுமொத்த உடல் நலனை காப்பதில் நிகழ்த்தும் மாயஜாலங்கள் குறித்து பார்ப்போம்.

  செரிமானத்தை எளிதாக்கும்

  அத்திப்பழத்தின் தனித்துவமான பண்புகளில் ஒன்று, நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதுதான். குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு நார்ச்சத்து முக்கியமானது. தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி புரியும். அதனால் செரிமானம் மேம்படும். இதில் இருக்கும் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து கழிவுப்பொருட்களுடன் பிணைக்கப்பட்டு அவை குடல் வழியாக விரைவாக வெளியேற உதவும்.

  அத்திப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கும், உடலில் தீங்கு விளைவிக்கும் ஃபிரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துவதற்கும் உதவி புரியும். இந்த ஆன்டி ஆக்சிடென்டுகளில் கிவெர்செடின், கேடசின்கள் மற்றும் அந்தோசயின்கள் போன்ற பாலிபினால்கள் அடங்கும். இவை இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.

  இதய ஆரோக்கியம்

  இதயத்திற்கு உகந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. ரத்த அழுத்தத்தை பராமரிக்க தேவையான எலக்ட்ரோலைட்டுகள் இதில் ஏராளம் உள்ளன. கூடுதலாக, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் ரத்த நாளங்களின் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன. ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும் உதவி புரிகின்றன.

  எலும்பு ஆரோக்கியம்

  அத்திப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்பு உருவாக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.

  சர்க்கரை அளவு

  அத்திப்பழம் மிட்டாய் போன்று லேசான இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டவை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கு பொருத்தமானதாக இருக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சப்படுவதை தடுக்க உதவி புரியும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு பொக்கிஷமாக அத்திப்பழம் அமையும்.

  சரும நலன்

  அத்திப்பழம் சரும நலனையும் பாதுகாக்கக்கூடியது. ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வைட்டமின் ஏ, பி போன்றவை இருப்பதால் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும். கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க தூண்டும். சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றுவதை குறைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அத்திப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் இயற்கையாகவே சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கக்கூடியவை.

  சுவாச ஆரோக்கியம்

  அத்திப்பழத்தில் மூச்சுக்குழாய் அழற்சி பண்புகளுடன் கூடிய சேர்மங்கள் உள்ளன. இவை சுவாச பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும் குவெர்செடின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. அவை நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி ஆஸ்துமா போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

  நோய் எதிர்ப்பு தன்மை

  அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும், தொற்றுநோய்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதிலும், நோய்களை குணப்படுத்த உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  • அதிராம்பட்டினம் கடலில் மருத்துவ குணம் கொண்ட காரப்பொடி மீன் வரத்து அதிகரித்துள்ளது.
  • ஆஸ்துமா நோயாளிகள் பிற சுவாச கோளாறுகளுக்கு இந்த மீன் குழம்பு நல்ல நிவாரணி.

  அதிராம்பட்டினம்:

  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இறால், மீன், நண்டு வகைகளுக்கு மவுசு அதிகம் . அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று பகுதியான மல்லிப்பட்டிணம், கொள்ளுக்காடு, சேதுப்பாவசத்திரம் போன்ற பகுதிகளில் கடலில் சில மாதங்களுக்கு முன்பு நண்டு வரத்து அதிமாக இருந்து வந்த நிலையில் தற்போது மருத்துவ குணம் கொண்ட காரப்பொடி மீன் வரத்து அதிகரித்துள்ளது.

  இந்த மீன் வகைகள் முழுக்க முழுக்க மருத்துவ குணம் நிறைந்து.

  இது எவ்வளவு கடினமான நெஞ்சு சளியையும் கரைத்து விடும்.

  ஆஸ்துமா நோயாளிகள் பிற சுவாச கோளாறுகளுக்கு இந்த மீன் குழம்பு நல்ல நிவாரணி.

  பாலூட்டும் தாய்மார்கள், காய்ச்சல் கண்டவர்கள், புண் ஆறாமல் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம்.