search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரித்துறை"

    • தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    • சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு இந்த தடவை மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடக்கும் என்று தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வாக்காளர்களுக்கு நேரடி யாக பணம் கொடுப் பதை தவிர ஜிபே, போன்பே மூலமாகவும் பணம் கொடுக் கப்படலாம் என்று கருதப் படுகிறது. இதையடுத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்த னைகளை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    குறிப்பாக டிஜிட்டல் மூலம் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்தால் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதற்காக அவர்கள் தனித்தனி குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

    டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது. அதுபோல மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்கு ஜிஎஸ்டி துறை சார்பில் தனித்தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    • சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.
    • மேல்முறையீடு செய்த காங்கிரசின் மனுவை தீர்ப்பாயம் இன்று நிராகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாத இடையில் நடைபெறவுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பை இன்னும் சில வாரங்களுக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொள்ள மும்முரமாக பணியாற்றி வருகின்றன.

    கடந்த 2018-ம் ஆண்டில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் வரவேற்றன.

    இதற்கிடையே, பொதுமக்களிடமிருந்து நிதி பெறுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த வங்கி கணக்குகள், காங்கிரஸ் கட்சியின் கணக்கு, இளைஞர் காங்கிரசின் கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த முடக்கத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

    இதுகுறித்து வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. அதன்பின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன.

    இந்நிலையில், வருமான வரித்துறையின் நடவடிக்கையை நிறுத்தக்கோரி தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று நிராகரிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

    • வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
    • பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது

    வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் இத்தகைய செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    பல்வேறு வங்கிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கணக்குகளிலிருந்து வருமான வரித்துறை ஜனநாயக விரோதமாக ₹ 65 கோடியை எடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் கூறியுள்ளார்.

    பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இங்கு தயாரிக்கபடும் பொருட்கள் அரியாங்குப்பம், மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் விற்பனை செய்யபட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். ஒரே நேரத்தில் 3 குழுக்களாக பிரிந்து, தோல் தொழிற்சாலை மற்றும் விற்பனையகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம்.
    • ஒரு எம்.பி.-யிடம் இருந்து மீட்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து எம்.பி.யானவருமான தீரஜ்குமார் சாகு-வுக்கு தொடர்படைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றுடன் 5-வது நாளாக நடைபெற்று வரும் சோதனையில், அதிகாரிகளே ஆச்சரியப்படும் அளவுக்கு ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் பணத்தை எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதவிர மேலும் பல இடங்களில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

     


    இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.-யிடம் இருந்து இவ்வளவு பெரிய தொகை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் ஒரு எம்.பி.-யிடம் இருந்து மீட்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு, ஒரு எம்.பி.-யின் வீட்டில் இருந்து இவ்வளவு பெரிய தொகை மீட்கப்பட்டு இருக்கிறது. கோடிக்கணக்கான தொகை மீட்கப்பட்டு இருக்கிறது, ஆனாலும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் அமைதியாகவே இருக்கிறது."

    "ஊழல் தான் அவர்களின் குணம் என்பதால் காங்கிரஸ் மவுனமாக இருப்பது புரிகிறது. ஆனால் ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தி.மு.க. மற்றும் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் ஏன் மவுனம் காக்கின்றன. அரசு துறைகள் தவறாக கையாளப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரம் செய்யப்பட்டது ஏன் என்பது நன்றாகவே புரிகிறது. அவர்கள் செய்யும் ஊழல் அம்பலமாகி விடும் என்ற அச்சத்தில் தான் இத்தகைய பிரசாரம் செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
    • சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் 5 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை புரசைவாக்கத்தில் மட்டும் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் டி.வி.எச். லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 9 பிளாக்குகள் உள்ளன. இதில் 4-வது பிளாக்கில் உள்ள அமித் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இன்று காலையில் அமித் வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் சோதனை நடத்தினார்கள்.

    அமித், அரசு ஒப்பந்தங்களுக்கு மின்சார சாதனங்களை வினியோகித்து வந்தார். இவர் சட்டவிரோத பண பரிவர்த்தனை மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இவர் பொதுப்பணித் துறைக்கு மின்சார பொருட்களை மொத்தமாக சப்ளை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு செய்ததாக ஏற்கெனவே கிடைத்த தகவலில் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் தற்போது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அமித் வீடு இருக்கும் பக்கத்து தெருவில் உள்ள ஜெயின் வில்லா அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் மகேந்திரா பி.ஜெயின் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மகேந்திரா பி.ஜெயினின் தம்பி ரமேஷ்குமார் டி.வி.எச். லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது பிளாக், 3-வது மாடியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அண்ணன்- தம்பி இருவரும் சலீம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இங்கும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சென்னையில் மேலும் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 5 இடங்களில் சோதனை நடந்தது.

    இதேபோல் சென்னையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரசாயன நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினாகள். இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக டெல்லியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். இந்த நிறுவனத்தின் கிளை அண்ணாநகரில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    • மது விலக்கு குறித்து பேரணி நடத்த பா.ம.க. மனு அளித்தது
    • மராத்தான் ஓட்டத்திற்கு அனுமதி வழங்குவதை நீதிபதி குறிப்பிட்டார்

    பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கோரி பல வருடங்களாக தமிழ்நாட்டின் ஆளும் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    தங்களின் கோரிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

    அனுமதி மறுக்கப்பட்டதால் பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    பேரணி செல்லும் பாதையில் பிற மதத்தினர் உள்ளனர் என கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பா.ம.க. மதம் சார்ந்த கட்சி அல்ல என்றும் பா.ம.க. வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அரசு தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.

    அவர் விசாரணையின் போது கேட்டதாவது:

    ஆளும் கட்சியினர் மராத்தான் ஓடவும், நடப்பதற்கும் அனுமதி வழங்குகிறீர்கள்; மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கினால் என்ன? யாருக்காக காவல்துறை உள்ளது? தமிழ்நாட்டில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்தினால் அவை மத்திய அரசின் ஏஜென்சிகள் என குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை செயல்படுமா?

    இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    விவாதங்களுக்கு பிறகு வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • கடந்த நிதி ஆண்டுக்கான 7 கோடியே 27 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
    • வீட்டுக்கடன் மற்றும் சேமிப்புகளுக்கு வரிச்சலுகை அளிக்காத புதிய வருமான வரி திட்டம், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    வருமான வரித்துறையின் நிர்வாக அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த நிதி ஆண்டுக்கான 7 கோடியே 27 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 7 கோடியே 15 லட்சம் கணக்குகள், வரி செலுத்துவோரால் சரிபார்க்கப்பட்டன. அவற்றில், 6 கோடியே 80 லட்சம் கணக்குகளை தணிக்கை செய்துள்ளோம்.

    அதாவது, சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் 93.5 சதவீத கணக்குகளை தணிக்கை செய்துள்ளோம்.

    நேரடி வரிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ரூ.9 லட்சத்து 57 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுதவிர, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி 'ரீபண்ட்' (திருப்பி அளிக்கும் தொகை) அளித்துள்ளோம்.

    நிதி ஆண்டு முடியும்போது, பட்ஜெட்டில் மதிப்பிட்டதை விட நேரடி வரி வசூல் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

    அதே சமயத்தில், 35 லட்சம் பேருக்கு தர வேண்டிய 'ரீபண்ட்' நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், அவர்கள் அளித்த தகவல்கள் ஒத்துப்போகவில்லை. வங்கி கணக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களது வங்கி, பிற வங்கியுடன் இணைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது ஐ.எப்.எஸ்.சி. எண் மாறி இருக்கலாம்.

    அதனால், அந்த வரி செலுத்துவோரை வருமான வரித்துறை ஊழியர்கள் சிறப்பு கால்சென்டர் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படும்.

    வரி செலுத்துவோரின் சரியான வங்கி கணக்கில் 'ரீபண்ட்' செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

    வீட்டுக்கடன் மற்றும் சேமிப்புகளுக்கு வரிச்சலுகை அளிக்காத புதிய வருமான வரி திட்டம், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    60 முதல் 70 சதவீத தனிநபர்கள், அந்த புதிய திட்டத்துக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆன்லைன் விளையாட்டுகளில் கிடைக்கும் பரிசுத்தொகைக்கு வரி பிடித்தம் செய்யும் சட்டம், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் ஆன்லைன் விளையாட்டுகள் வரி பிடித்தம் மூலம் ரூ.600 கோடி வருவாய் கிடைத்ததாக நிதின் குப்தா கூறினார்.

    கிரிப்டோகரன்சி எனப்படும் ஆன்லைன் பணத்தின் வர்த்தகம் மீது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அந்தவகையில், நடப்பு நிதிஆண்டில் இதுவரை ரூ.105 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    ஆன்லைன் விளையாட்டுகளில் கிடைக்கும் பரிசுத்தொகைக்கு வரி பிடித்தம் செய்யும் சட்டம், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் ஆன்லைன் விளையாட்டுகள் வரி பிடித்தம் மூலம் ரூ.600 கோடி வருவாய் கிடைத்ததாக நிதின் குப்தா கூறினார்.

    கிரிப்டோகரன்சி எனப்படும் ஆன்லைன் பணத்தின் வர்த்தகம் மீது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அந்தவகையில், நடப்பு நிதிஆண்டில் இதுவரை ரூ.105 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    • கட்டுமான நிறுவனம் சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று வீடுகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனர்.
    • வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.

    வடவள்ளி:

    கோவை அருகே உள்ள வடவள்ளியில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து நேற்று காலை 11 மணியளவில் 5-க்கும் மேற்பட்ட கார்களில் 25-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குள் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை அதிகாரிகள் வெளியே விடவில்லை. வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.

    இதேபோல இந்த கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்கள் 3 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது அதிகாரிகள் எத்தனை இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன? அதில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது? ஒரு வீட்டின் விலை என்ன? அதற்கு ஆகும் செலவு எவ்வளவு?, இந்த வீடுகள் கட்டிக்கொடுக்க பணம் எப்படி வந்தது? வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் அதற்கான ஆதாரங்கள் என்ன? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் வீடுகள் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது? விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த லாபம் எவ்வளவு? அதற்கு வருமானவரி செலுத்தப்பட்டு உள்ளதா என்பது போன்ற கேள்விகளையும் கேட்டனர். மேலும் கட்டுமான நிறுவனம் சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று வீடுகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் சில முக்கிய ஆதாரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    இந்த சோதனை நள்ளிரவு 1 மணி வரை 14 மணி நேரம் நடந்தது. பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் வெளியே செல்ல முடியாத படியும், யாரும் உள்ளே வர முடியாத படியும் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தி விட்டு சென்றனர்.

    இன்று 2-வது நாளாக காலை 9.30 மணி முதல் கட்டுமான நிறுவனத்தில் தலைமை அலுவலகம் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • சத்தீஸ்கர் முதல் மந்திரியின் அரசியல் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
    • அவரது வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில், சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிய முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் ஆகிய ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    கடந்த 2 நாளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், துர்க் ஆகிய நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வந்தது.

    இதற்கிடையே, நேற்று முதல் மந்திரி பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, பூபேஷ் பாகலின் சிறப்பு அதிகாரி ஆகியோரது ராய்ப்பூர் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    துர்க் நகரில் ஒரு தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடந்தது. வினோத் வர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது, பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    எந்த வழக்குக்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடப்பதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல் மந்திரி பூபேஷ் பாகல் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களே, எனது பிறந்தநாளில், என் அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரி வீடுகளுக்கு அமலாக்கத் துறையை அனுப்பி எனக்கு விலைமதிப்பில்லாத பரிசு அளித்து இருக்கிறீர்கள்.

    ராய்ப்பூரில் எங்கள் கட்சியின் தேசிய அமர்வு நடைபெற்ற போது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன. எனது பிறந்தநாளான இன்றும் சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை துணை கொண்டு பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுகிறது. நிரந்தரமாக ஆட்சியில் இருப்போம் என்று பாஜக நினைக்கக் கூடாது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இப்படியே குறிவைத்துக் கொண்டே இருந்தால் இந்த முறை 15 சீட் கூட கிடைக்காது என தெரிவித்தார்.

    • ஆதாருடன் பான்கார்டு எண்ணை இணைக்க இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
    • இதனால் பலர் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

    சேலம்:

    வருமான வரி ஏய்ப்பை தடுப்பதற்காக ஆதாருடன் பான்கார்டு எனப்படும் நிரந்தர வருமான வரிக்கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக இன்று (30-ந்தேதி) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    1000 ரூபாய் அபராதமாக செலுத்தி இந்த தேதிக்குள் ஆதார்-பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் நாளை முதல் செயலற்றதாகிவிடும். ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு டி.டி.எஸ். பிடித்தம், மற்றும் செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்படும்.

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரித்துறையில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் வட்டி ரத்து செய்யப்படும்.

    ஆதார்- பான் இணைக்க விரும்புவோர் மற்றும் தங்களின் இணைப்பு நிலவரத்தை தெரிந்து கொள்ள விரும்புவோர் மத்திய அரசின் வருமான வரித்துறை இணைய தளத்தை பயன்படுத்துமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பான்கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

    • பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
    • வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    அவினாசி:

    திருப்பூா் மாவட்டம் பழங்கரை பிரிவு அருகே அவிநாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

    அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த 2பேர் பழங்கரை பிரிவு அருகே இறங்கினா். இதையடுத்து, போலீசாா் அவா்கள் இருவரும் கொண்டு வந்த கைப்பைகளில் சோதனை நடத்தினா். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1 கோடி இருந்தது தெரியவந்தது. அப்பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

    விசாரணையில் அவா்கள் வேலூா், சைதாப்பேட்டையை சோ்ந்த ஆரீப் (வயது 47), பொன்னியம்மன் நகரை சோ்ந்த அப்துல் காதா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்த அவிநாசி போலீசார் அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    ×