search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank accounts dismissed"

    • சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.
    • மேல்முறையீடு செய்த காங்கிரசின் மனுவை தீர்ப்பாயம் இன்று நிராகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாத இடையில் நடைபெறவுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பை இன்னும் சில வாரங்களுக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொள்ள மும்முரமாக பணியாற்றி வருகின்றன.

    கடந்த 2018-ம் ஆண்டில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் வரவேற்றன.

    இதற்கிடையே, பொதுமக்களிடமிருந்து நிதி பெறுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த வங்கி கணக்குகள், காங்கிரஸ் கட்சியின் கணக்கு, இளைஞர் காங்கிரசின் கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த முடக்கத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

    இதுகுறித்து வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. அதன்பின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன.

    இந்நிலையில், வருமான வரித்துறையின் நடவடிக்கையை நிறுத்தக்கோரி தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று நிராகரிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

    ×