search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலுவைத் தொகை"

    • முதல்வர் மம்தா பானர்ஜி, ரூ.93 கோடி மதிப்பிலான 70 திட்டங்களை அறிவித்தார்.
    • பழங்குடியின மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

    மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.15 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளதாகக் கூறிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிதியை விடுவிக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவியை காலி செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

    மாநிலத்தின் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக மம்தா கூறினார்.

    அப்போது, மேற்கு வங்காளத்திற்கு வரவேண்டிய 1.15 லட்சம் கோடி ரூபாய் நிதி கோரப்படும்... ஏழை மக்களின் பணத்தைக் கொடுங்கள் அல்லது பதவியை விடுங்கள் என்று முழக்கத்தை எழுப்புவோம் என்று அவர் கூறினார்.

    மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ரூ.93 கோடி மதிப்பிலான 70 திட்டங்களை அறிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "நான் எம்.பி.க்களுடன் டெல்லிக்கு செல்ல உள்ளேன். டிசம்பர் 18 முதல் டிசம்பர் 20 வரை நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரிக்கை வைக்க பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளேன்.

    மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கியிருந்தால், தனது அரசு தனது சமூக நலத் திட்டங்களின் கீழ் மேலும் பலரை இணைத்திருக்க முடியும்.

    மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களை மீண்டும் திறப்பதாக உறுதியளித்த பாஜக போலல்லாமல், எனது வாக்குறுதியை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன். எங்களின் நிலுவைத் தொகையைப் பெற்றிருந்தால், பலருக்கு சமூக நலத்திட்டங்களை வழங்கியிருக்க முடியும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை, வீட்டுவசதி, ஜிஎஸ்டி வசூலில் மாநிலத்தின் பங்கு உட்பட பல்வேறு கணக்குகளில் மேற்கு வங்கத்தின் நிலுவைத் தொகை இருக்கிறது.

    ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வங்காளத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பண உதவியின் கணக்குகளை சமர்ப்பிக்கத் தவறியதால், வங்காளத்திற்கு நிதி விடுவிப்பது இடைநிறுத்தப்பட்டதாக மாநிலத்தின் பாஜக தலைமை அடிக்கடி கூறி வருகிறது.

    அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனது அரசாங்கம் நில 'பட்டாக்களை' (பத்திரங்கள்) வழங்கும் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவதற்கு ரூ.1.2 லட்சம் வழங்கும்.

    மேலும், பழங்குடியினருக்கு எஸ்டி சான்றிதழ், சுத்தமான குடிநீர் மற்றும் சமூகத் திட்டங்களுக்கான அணுகல் தொடர்பான அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யப்படும்.

    பழங்குடியின மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி ஒன்றியம் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் செய்த வேலைக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காத தையும் கண்டித்தும், பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு ஒன்றிய கவுரவ தலைவர் பெத்தபெருமாள் ஒன்றிய சங்க தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஏஐடியுசி துணை செயலாளர் காந்தி, சங்க மாவட்ட தலைவர் சாந்தகு மார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • ஆதாருடன் பான்கார்டு எண்ணை இணைக்க இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
    • இதனால் பலர் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

    சேலம்:

    வருமான வரி ஏய்ப்பை தடுப்பதற்காக ஆதாருடன் பான்கார்டு எனப்படும் நிரந்தர வருமான வரிக்கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக இன்று (30-ந்தேதி) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    1000 ரூபாய் அபராதமாக செலுத்தி இந்த தேதிக்குள் ஆதார்-பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் நாளை முதல் செயலற்றதாகிவிடும். ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு டி.டி.எஸ். பிடித்தம், மற்றும் செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்படும்.

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரித்துறையில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் வட்டி ரத்து செய்யப்படும்.

    ஆதார்- பான் இணைக்க விரும்புவோர் மற்றும் தங்களின் இணைப்பு நிலவரத்தை தெரிந்து கொள்ள விரும்புவோர் மத்திய அரசின் வருமான வரித்துறை இணைய தளத்தை பயன்படுத்துமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பான்கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

    • போராட்டம் திட்டக்குடி நகரத்தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி போராட்டம் செய்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக பிரதமர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திட்டக்குடி நகரத்தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது. போரா ட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் வேல்முருகன்,விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட செயலாளர் சிவா, முன்னாள் மாநில செயலாளர் அமைப்பு சாரா பிரிவு பொன் பெரியசாமி, நகரத் தலைவர் விவசாய அணி ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×