திட்டக்குடி நகராட்சியில் பா.ஜ.க குடியேறும் போராட்டம்

போராட்டம் திட்டக்குடி நகரத்தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது. வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி போராட்டம் செய்தனர்.
திட்டக்குடி நகராட்சியில் பா.ஜ.க குடியேறும் போராட்டம் நடைப்பெற்றது.
திட்டக்குடி நகராட்சியில் பா.ஜ.க குடியேறும் போராட்டம் நடைப்பெற்றது.
Published on

கடலூர்:

திட்டக்குடி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக பிரதமர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திட்டக்குடி நகரத்தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது. போரா ட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் வேல்முருகன்,விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட செயலாளர் சிவா, முன்னாள் மாநில செயலாளர் அமைப்பு சாரா பிரிவு பொன் பெரியசாமி, நகரத் தலைவர் விவசாய அணி ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com