search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீரஜ்குமார் சாகு"

    • ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம்.
    • ஒரு எம்.பி.-யிடம் இருந்து மீட்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து எம்.பி.யானவருமான தீரஜ்குமார் சாகு-வுக்கு தொடர்படைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றுடன் 5-வது நாளாக நடைபெற்று வரும் சோதனையில், அதிகாரிகளே ஆச்சரியப்படும் அளவுக்கு ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் பணத்தை எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதவிர மேலும் பல இடங்களில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

     


    இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.-யிடம் இருந்து இவ்வளவு பெரிய தொகை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் ஒரு எம்.பி.-யிடம் இருந்து மீட்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு, ஒரு எம்.பி.-யின் வீட்டில் இருந்து இவ்வளவு பெரிய தொகை மீட்கப்பட்டு இருக்கிறது. கோடிக்கணக்கான தொகை மீட்கப்பட்டு இருக்கிறது, ஆனாலும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் அமைதியாகவே இருக்கிறது."

    "ஊழல் தான் அவர்களின் குணம் என்பதால் காங்கிரஸ் மவுனமாக இருப்பது புரிகிறது. ஆனால் ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தி.மு.க. மற்றும் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் ஏன் மவுனம் காக்கின்றன. அரசு துறைகள் தவறாக கையாளப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரம் செய்யப்பட்டது ஏன் என்பது நன்றாகவே புரிகிறது. அவர்கள் செய்யும் ஊழல் அம்பலமாகி விடும் என்ற அச்சத்தில் தான் இத்தகைய பிரசாரம் செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். 

    ×