search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Government"

    • 2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள்.
    • விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    தமிழக அரசு சார்பில், 2023ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது நேற்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

    2023ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

    2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

    தொடர்ந்து, 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன. அதன்படி, பத்தமடை பரமசிவத்திற்கு பேரறிஞர் அண்ணா விருது, உ.பலராமனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது, கவிஞர் பழநிபாரதிக்கு மகாகவி பாரதியார் விருது, எழுச்சிக் கவிஞர் முத்தரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, ஜெயசீல ஸ்டீபனுக்கு திரு.வி.க. விருது, முனைவர் இரா.கருணாநிதிக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருதும் வழங்கி கவுரவித்தார்.

    விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்பட்டது.

    • உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது.

    சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளான இன்றே, ரூ.5.5 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை எட்டியுள்ளதாக தொழிற்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.

    இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை வரை நடைபெறவுள்ள நிலையில், இன்றைய நாளில் மட்டும் 5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
    • தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 9-ந் தேதி ஸ்டிரைக் கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

    இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    இதன்படி சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சு நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

    இதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதால் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி பல்லவன் இல்லத்தில் நாளை காலை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதில் அண்ணா தொழிற் சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நாளை மறுநாள் (8-ந் தேதி) தொழிலாளர் நல ஆணையாளரும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.

    இதற்கிடையே அமைச்சருடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற போக் குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலை படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடுவையும் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம்.
    • தமிழக அரசுக்கு ரூ.167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு.

    2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.

    அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் எனவும் அறிவித்துள்ளது.

    • சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.
    • உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரூர் ஊராட்சி இளம்பாவயல் கிராம பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.

    இதில் பழனிகுமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர்கள் வலுவிழந்து காணப்பட்டது. இதனை அறியாத பழனிக்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழத்தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.

    உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்ததால் பழனிகுமாரின் குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    விவசாய கூலி வேலை பார்க்கும் பழனிக்குமார் வீட்டை இழந்ததால் இருக்க வீடு இன்றி தனது குடும்பத்துடன் அக்கம் பக்க உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்தேக்கங்களின் இருப்பு 10939 மில்லியன் கனஅடியாக இருந்தது.
    • வட மாவட்டங்களில் மழை நின்ற பிறகும் நீர் தேக்கங்களில் குறைந்த அளவு நீர்வரத்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் நீர் தேக்கங்கள் நிரம்பி உள்ள நிலையில் கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந் விட வேண்டாம் என தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர மாநிலத்திற்கு வேண்டுகோள் வைத்து உள்ளனர். பூண்டியில் நீர் இருப்பு அதிகமாக இருப்பதால் தண்ணீர் திறக்க வேண்டாம் என்று அரசு கடிதம் எழுதியுள்ளது.

    பூண்டி நீர் தேக்கத்தின் முழு கொள்ளளவான 3237 கனஅடியில் 3076 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. நேற்றைய நிலவரப்படி வீரானம் உள்பட 6 நீர் தேக்கங்களில் மொத்த நீர் இருப்பு 11,650 மில்லியன் கன அடியாகும். இந்த நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கனஅடி.

    கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்தேக்கங்களின் இருப்பு 10939 மில்லியன் கனஅடியாக இருந்தது.

    இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வட மாவட்டங்களில் மழை நின்ற பிறகும் நீர் தேக்கங்களில் குறைந்த அளவு நீர்வரத்து வருகிறது. உதாரணமாக பூண்டி நீர் தேக்கத்திற்கு அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. சோழவரம் ஏரியில் நீர்வரத்து 46 கனஅடியாக உள்ளது.

    செங்குன்றம் நீர்வரத்து 189 கனஅடி. கன்னங்கோட்டை தேர்வாய் கண்டிகைக்கு 32 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 231 கனஅடியும் பதிவானது. வீரானத்தில் நீர்வரத் பூஜ்யமாக உள்ளது.

    கிடைக்கும் தண்ணீரை கொண்டு நகரின் அடுத்த ஆண்டுக்கான தண்ணீர் தேைவயை பூர்த்தி செய்ய முடியும். நீர்த்தேக்கங்களில் நீர் சேமிப்பு அதிகரித்து உள்ளதால் குடிநீர் வாரியத்தின் தினசரி வினியோகம் 1015 எம்.எல்.டி.யில் இருந்து வெள்ள பாதிப்பு நேரத்தில் 864 எம்.எல்.டி.யாக குறைந்துள்ளது.

    குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றிய பிறகு சென்னை குடிநீர் வாரியம் தினசரி வினியோகம் மீண்டும் 1015 எம்.எல்.டி.யாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புக், ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார்.
    • ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கம்பாக்கம், முள்ளி கொளத்தூர், ஈகை ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புக், ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார்.

    மேலும் குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு? சொந்த நிலம் இருக்கிறதா? என்ன வேலை செய்கிறீர்கள்? குடும்பத்தில் உள்ள நபர்கள் எத்தனை பேர்? எந்தெந்த பணியில் உள்ளனர்? அரசு பணியில் உள்ளனரா? சொந்தமாக கார், டிராக்டர் உள்ளிட்ட ஏதேனும் வாகனங்கள் உள்ளதா? என கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கம்பாக்கம் ஊராட்சி தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டன.

    • தொகுதிக்குள் வருவதில்லை என தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி உள்ளார்.
    • பொதுமக்கள் பட்டா கேட்டும், பேருந்து வசதி கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்., ஆனந்தன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகே ஆலூத்துபாளையம் பகுதியில் கடந்த 9 ந்தேதி புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான நான் தொகுதிக்குள் வருவதில்லை என தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி உள்ளார். மேலும் பொதுமக்கள் பட்டா கேட்டும், பேருந்து வசதி கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே நான் சட்டமன்ற த்தில் பேசி உள்ளேன். பலமுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். பல்லடம் தொகுதியின் அடிப்படைத் தேவைகளான 10 முக்கிய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் சமர்ப்பித்தும் இன்னும் அவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் பல்வேறு குறைகளை என்னிடம் தெரிவித்து உள்ளனர். எனவே அவர் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதை விடுத்து திருப்பூர் தெற்கு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்து தருமாறு கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

    • 5-8, 9-12, 13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும்.
    • குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமிய நடனப்போட்டி நடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டக்கலைப்போட்டிகள் திருப்பூர் மாவட்டம் மண்ணரை கிராமம் சத்யா காலனி (கிழக்கு) ல்உள்ள நைருதி வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில்வருகிற 17 -ந்ேததி( சனிக்கிழமை) அன்றுநடைபெற உள்ளது.இப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம்மற்றும்ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகிறது. மேலும் 5-8, 9-12, 13-16 என்ற வயதுவரம்பில்போட்டிகள் நடைபெறும்.ஜுன் 17-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமியநடனப்போட்டி நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்குபெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள்பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப்போட்டியில் அதிகபட்சம் 3நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமாபாடல்களுக்கான நடனம்மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. கிராமிய நடனப்போட்டியில் நமதுபாரம்பரிய கரகம், காவடி , பொய்க்கால்குதிரை போன்ற நடனங்கள் மட்டும் ஆடப்பெறவேண்டும்.

    மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டி நடைபெறும். ஓவியத்தாள், வண்ணங்கள்தூரிகைகள்உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டுவருதல் வேண்டும்.தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

    பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்புசான்றிதழ் வழங்கப்படும். 9-12, 13-16 என்ற வயது வரம்பில் முதல் பரிசு பெறும் சிறார்கள் அரசின்செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர். மேலும் விவரம் வேண்டுவோர்கோயம்புத்தூர் மண்டலக் கலைபண்பாட்டு மைய அலுவலகத்தை 0422 2610290, 94422 13864 ஆகியஎண்களில்தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் நடைபெற்றது.
    • அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு கொண்டுவந்த தமிழக அரசுக்கு பாராட்டு.

    திருப்பூர் :

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழகம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம், அர்ச்சனை மொழியாக தமிழ், உயர்கல்வியில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி உதவித்தொகை திட்டம், மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், அரசு பணிகளுக்கு தமிழில்தேர்வு போன்றவற்றை கொண்டுவந்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.

    தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாகவும் அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை நிராகரித்து மாநில கல்வி கொள்கைக்காக குழு அமைத்துள்ள தமிழக அரசை பாராட்டுவதுடன், கல்வி உரிமையை பாதுகாத்திட கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றும் பணியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் 6 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ குழுவை எய்ம்ஸ் நியமித்தது.
    • ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு .

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டர்.

    முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதமாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அவருடன் உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ நிர்வாகம், டாக்டர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வந்தது.

    குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் 2017 டிசம்பர் 24-ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன் முதலாக நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடையும் விதித்தது. அதன்பிறகு மருத்துவ குழுவை அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ குழுவை எய்ம்ஸ் நியமித்தது. இதன் பிறகு தான் மீண்டும் விசாரணை துரிதமாக நடைபெற்றது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு 3 பக்க அறிக்கையை அளித்தது. அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித தவறுகளும் இல்லை.

    உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. ஒருவழியாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணியும் முடிவடைந்துள்ளது.

    இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாளை காலை 10.30 மணி அளவில் தாக்கல் செய்கிறார். இதில் உள்ள தகவல்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரத்தில் அனைத்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், மேலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் வீரர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

    மாமல்லபுரம்:

    சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் தொடங்க உள்ளது. 186 நாடுகளில் இருந்து இங்கு வரும் செஸ் வீரர்களை 38 நட்சத்திர அந்தஸ்து விடுதிகளில் தங்க வைக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    வீரர்கள் தங்கும் 38 விடுதிகளில் உணவு வழங்குதல், உபசரித்தல், விருந்தோம்பல் செய்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல், ரூம்களில் அதிவேக இணையதள வசதி இருத்தல் போன்ற ஏற்பாடுகளை கவனிக்க தமிழக அரசு வருவாய்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.

    அந்த குழு நேற்று மாலை மாமல்லபுரத்தில் அனைத்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், மேலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் வீரர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

    ஓட்டல் நிர்வாகிகள் கூறும் போது, ஜி.எஸ்.டி வரிவிலக்கு தேவை, வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக வீடியோகால் பயன் படுத்துவார்கள். அதற்கு தற்போது இருக்கும் இணைய சேவை ஒத்துழைக்காது. தடையில்லா குடிநீர் தரவேண்டும், கூடுதல் மின்சாரம் தரவேண்டும், வீரர்கள் பாதுகாப்பு காவலர்கள் உணவுக்கான கட்டணமும் தரவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை செயலர் வினய், சிறப்பு அலுவலர்கள் வீரப்பன், திவாகர், கலெக்டர் ராகுல் நாத், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந் தகன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×