என் மலர்
நீங்கள் தேடியது "house"
முதலில் ஸ்டோர் ரூமின் அளவை கவனிக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும். இரண்டாவது அந்த அறையில் போதுமான அளவு வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லது அறையின் இரண்டு புறமும் மின்விளக்குகள் பொருத்துவது சிறந்தது.
எப்போதும் ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை, அதன் வகை மற்றும் பயனுக்கு ஏற்ப, தனித்தனி அட்டைப்பெட்டிகளில் அல்லது பைகளில் பிரித்து வைப்பது சிறந்தது. மேலும், அந்த பைகள் அல்லது அட்டைப்பெட்டியின் மீது உள்ளிருக்கும் பொருட்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை குறிப்பிடுவது நல்லது. இது அவசர நேரத்தில் நாம் தேடும் பொருளை எளிதாக எடுக்க உதவும்.
ஸ்டோர் ரூமில் பொருட்களை பக்கவாட்டில் அடுக்குவதை விட, நேர்கோடாக அடுக்குவது சிறந்தது. இது இட வசதியை ஏற்படுத்துவதுடன் பொருட்களை வகைப்படுத்தவும் எளிதாக இருக்கும். ஸ்டோர் ரூமில் ஜன்னல் அல்லது 'எக்சாஸ்ட் பேன்' கட்டாயம் இருக்க வேண்டும்.
அப்போதுதான் அறையினுள் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் நிலவும். இது அறையில் இருக்கும் தூசு வாசனை மற்றும் பழைய பொருட்களின் வாசனையை குறைக்கும். வாரம் ஒரு முறை ஸ்டோர் ரூமை சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் பூச்சிகள், ஒட்டடை மற்றும் தூசுகளிடம் இருந்து பொருளையும், அறையையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஸ்டோர் ரூமில் ஏர் பிரஷ்னர் அல்லது ரூம் பிரஷ்னரை தினமும் பயன்படுத்துவது நல்லது.
இதனால், தூசு, பழைய பொருள் வாசனையால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது தடுக்க முடியும். மாதம் ஒரு முறை ஸ்டோர் ரூமில் உள்ள பொருட்களை எடுத்துப் பார்க்கவும். அப்போதுதான் நமக்குத் தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடியும்.
மேலும், நாம் ஸ்டோர் ரூமில் என்னென்ன பொருட்கள் வைத்துள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். தனியாக ஸ்டோர் ரூம் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பரண் அல்லது ஸ்லாப்களில் தேவையில்லாத பொருட்களை வைத்திருப்பார்கள். அவர்களும் இதே பராமரிப்பு முறையை பின்பற்றலாம்.
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்தோசம் (வயது 55).
இவர்களது மகள் காந்திமதியை அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். சமீபத்தில் காந்திமதி இறந்துவிட்டார். இதனால் சந்தோசம் தனது மகள் வீட்டுக்குச் சென்று அவரது குழந்தைகளை கவனித்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டில் வேலையை முடித்துவிட்டு கதவை பூட்டி விட்டு சந்தோஷம் தனது மகள் வீட்டுக்கு சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக சந்தோஷம் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- 2 மகன்களும் வீட்டை பூட்டி விட்டு கோபிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர்.
- பீரோவில் இருந்த 5¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
குன்னத்தூர் :
குன்னத்தூர் அருகே சேரன் நகர் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சண்முக ஜீவா. தனியார் கல்லூரியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுசீலா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது 2 மகன்களும் வீட்டை பூட்டி விட்டு கோபிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர். தேர்வு எழுதிவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து குன்னதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.
- வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் (டி.என்.யு.எச்.டி.பி.,) வீடு பெற, பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 10 சதவீத தொகை செலுத்த வேண்டும்.பயனாளிகள் பங்களிப்பு தொகையை வங்கி கடனாக பெற்று செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.
கனரா, இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., - எச்.டி.எப்.சி., வங்கிகள் சார்பில் தனித்தனியே முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்தியன் வங்கி சார்பில் கடன் முகாம் நடத்தப்பட்டது.வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.2 நாள் முகாமில் தகுதியுள்ள 78 பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பயனாளிகள் 437 பேருக்கு மொத்தம் 2.90 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு கடன் வழங்கப்படும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
- புறம்போக்கு இடத்தில் சுமார் 23 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.
- பயனாளிகள் வீட்டிற்கே சென்று இலவச பட்டா வழங்கல்.
திருவையாறு:
திருவையாறு அருகே கீழதிருப்பூந்துருத்தி ஊராட்சி மணக்கொல்லை பகுதியில் ரசுப் புறம்போக்கு இடத்தில் சுமார் 23 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.
நீண்ட காலமாக அவர்கள் வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி வந்த நிலையில் நேற்று ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன் முன்னிலையில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாவட்ட வருவாய் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் ஆகியோர் 23 பயனாளிகள் வீட்டிற்கே சென்று இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தாசில்தார் பழனியப்பன், ஒன்றியச் செயலாளர் கௌதமன், திருப்பூந்துருத்தி பேரூராட்சித்துணைத் தலைவர் அகமதுமைதீன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
- பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அவினாசி :
திருப்பூர்மாவட்டம் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவினாசியை அடுத்து சேவூர் பாலிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி- கலா தம்பதியினர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்றுஅதிகாலை நேரத்தில் திடீரென அடுத்தடுத்து 2 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் பழனிசாமி மற்றும் கலா ஆகியோர் லேசான காயமடைந்தனர் .கலாவின் தாயார் மாகாளி(வயது 70) மீது சுவர் இடிந்து விழுந்ததால் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சேவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
- நரிக்குறவர்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
- 3 வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
பரமக்குடி
பரமக்குடி வைகை நகர், முருகன் கோவில் படித்துறை ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 23 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர்வர்கள் வசித்து வருகின்றனர். பரமக்குடி தாசில்தார் தமிம்ராஜா நரிக்குறவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர முதியோர் உதவித்தொகை, இளைஞர்கள், பெண்களுக்கு தொழில் செய்ய கடனுதவி, புதிதாக குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தகுதியான நபர்களை கண்டறிந்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, இளைஞர்கள், பெண்களுக்கு தொழில் செய்ய கடனுதவி, புதிதாக குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். பரமக்குடி அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசைகள் அமைத்து நரிக்குறவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
சில தினங்களில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட உள்ளது என தாசில்தார் தமிம்ராஜா தெரிவித்துள்ளார்.
- செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
- வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைபுதூர் ரேசன் கடை வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (46) இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1/4 பவுன் தங்க கம்மல் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் ஆறுமுகம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆலாங்கிர் மகன் முகமது (சுபியர்27) என்பவரை ஆறுமுகம் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா அப்பகுதியில் மயானம் அருகில் வழங்கியதாக கூறப்படுகிறது.
- பண வசதி இல்லாத காரணத்தால் அரசு தொகுப்பு வீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது வீடு ஓதுக்கிய நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சி சிக்கனுத்து பகுதியில் வினிதா , ராஜேஸ்வரி, துளசிமணி ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா அப்பகுதியில் மயானம் அருகில் வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் மேற்கண்டவர்களுக்கு பண வசதி இல்லாத காரணத்தால் அரசு தொகுப்பு வீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது வீடு ஓதுக்கிய நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தி.மு. க. வினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணிகள் செய்ய விடாமல் தடுத்தி தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் . ஆகையால் அரசு வழங்கிய வீட்டு மனை பட்டாவில் தொகுப்பு வீடு கட்டுவதற்கு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் தற்கொலை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வீட்டிற்குள் அழுகிய நிலையில் மெக்கானிக் பிணமாக கிடந்தார்
- மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்தார்
கரூர்:
திருப்பூா் மாவட்டம், வீரபாண்டியை மூகாம்பிகை நகரை சோ்ந்தவா் லட்சுமணன்(வயது37). ஏ.சி.மெக்கானிக். இவருடைய மனைவி தேன்மொழி. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.
தற்போது லட்சுமணன் கரூா் தாந்தோன்றிமலை கணபதிபாளையத்தில் தங்கி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் அவரது வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் தாந்தோணிமலை போலீசில் புகாா் செய்தனா். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அழுகிய நிலையில் கிடந்த லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் லட்சுமணன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து இருப்பார்களா என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனா்.
- சாலையோரம் இருந்த கலைச்செல்வி என்பவர் வீட்டின் முன்புறம் அரசு பஸ் மோதியது.
- மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மணிவண்ணன் கீழே விழுந்து உயிரிழந்தார்.
சீர்காழி,:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தற்காஸ் கிராமம் செல்லத்தம்பாள் நகரைச் சேர்ந்த மணிவண்ணன் (45). கூலி தொழிலாளி.
இவர் சிதம்பரத்திலிருந்து பழையாறு துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸில் செல்லத்தம்பாள் பஸ் நிறுத்தத்தில் ஏறி அடுத்துள்ள தற்காஸ் பஸ் நிறுத்தத்தில் இறங்க முயன்றபோது, பஸ் நிறுத்தம் அருகே, எதிரே வந்த ஒரு தனியார் பஸ்ஸுக்கு வழி விட முயன்ற போது சாலையோரம் இருந்த கலைச்செல்வி என்பவர் வீட்டின் முன்புறம் அரசு பஸ் மோதியது.
இதில் அந்த வீட்டிலிருந்து வந்த மின் வயர் பேருந்தின் முன் பகுதியில் தொங்கிக்கொண்டு பஸ்ஸிலும் சிக்கியது.
இதில் பஸ்ஸின் முன் பகுதியிலிருந்த கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்ஸிலிருந்து இறங்க முயன்ற மணிவண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மணிவண்ணன் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிவண்ணன் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மணிவண்ணனுக்கு செல்வி (40) என்ற மனைவியும், கனிவண்ணன் (25) என்ற மகன், கௌசல்யா (15) என்ற மகளும் உள்ளனர்.
- வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.
- தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் மு.பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் திருமுருக வீரக்குமார் (வயது 43) .இவர் கோயம்புத்தூர் அருகே உள்ள சரவணம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இவர் இந்த மாதம் கடந்த 9 ந்தேதி அன்று வெள்ளகோவில் வீட்டிற்கு வந்து விட்டு கோயம்புத்தூர் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் 22 ந்தேதி அன்று மாலை இவரது வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது, உடனே அருகில் இருந்தவர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து சென்றனர். கோவையில் இருந்த திருமுருக வீரக்குமாருக்கும் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். உடனே புறப்பட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 70 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து பேராசிரியர் திருமுருக வீரக்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






