என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு பெறும் பயனாளிகளுக்கு ரூ.2.90 கோடி வங்கி கடன்

- மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.
- வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் (டி.என்.யு.எச்.டி.பி.,) வீடு பெற, பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 10 சதவீத தொகை செலுத்த வேண்டும்.பயனாளிகள் பங்களிப்பு தொகையை வங்கி கடனாக பெற்று செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.
கனரா, இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., - எச்.டி.எப்.சி., வங்கிகள் சார்பில் தனித்தனியே முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்தியன் வங்கி சார்பில் கடன் முகாம் நடத்தப்பட்டது.வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.2 நாள் முகாமில் தகுதியுள்ள 78 பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பயனாளிகள் 437 பேருக்கு மொத்தம் 2.90 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு கடன் வழங்கப்படும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.