பல்லடம் அருகே வீடு புகுந்து நகை பணம் திருடிய வட மாநில வாலிபர்

செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரைபுதூர் ரேசன் கடை வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (46) இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1/4 பவுன் தங்க கம்மல் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் ஆறுமுகம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆலாங்கிர் மகன் முகமது (சுபியர்27) என்பவரை ஆறுமுகம் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com