search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்ணீர் திறந்து விட வேண்டாம்- ஆந்திராவுக்கு தமிழக அரசு கடிதம்
    X

    தண்ணீர் திறந்து விட வேண்டாம்- ஆந்திராவுக்கு தமிழக அரசு கடிதம்

    • கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்தேக்கங்களின் இருப்பு 10939 மில்லியன் கனஅடியாக இருந்தது.
    • வட மாவட்டங்களில் மழை நின்ற பிறகும் நீர் தேக்கங்களில் குறைந்த அளவு நீர்வரத்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் நீர் தேக்கங்கள் நிரம்பி உள்ள நிலையில் கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந் விட வேண்டாம் என தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர மாநிலத்திற்கு வேண்டுகோள் வைத்து உள்ளனர். பூண்டியில் நீர் இருப்பு அதிகமாக இருப்பதால் தண்ணீர் திறக்க வேண்டாம் என்று அரசு கடிதம் எழுதியுள்ளது.

    பூண்டி நீர் தேக்கத்தின் முழு கொள்ளளவான 3237 கனஅடியில் 3076 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. நேற்றைய நிலவரப்படி வீரானம் உள்பட 6 நீர் தேக்கங்களில் மொத்த நீர் இருப்பு 11,650 மில்லியன் கன அடியாகும். இந்த நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கனஅடி.

    கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்தேக்கங்களின் இருப்பு 10939 மில்லியன் கனஅடியாக இருந்தது.

    இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வட மாவட்டங்களில் மழை நின்ற பிறகும் நீர் தேக்கங்களில் குறைந்த அளவு நீர்வரத்து வருகிறது. உதாரணமாக பூண்டி நீர் தேக்கத்திற்கு அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. சோழவரம் ஏரியில் நீர்வரத்து 46 கனஅடியாக உள்ளது.

    செங்குன்றம் நீர்வரத்து 189 கனஅடி. கன்னங்கோட்டை தேர்வாய் கண்டிகைக்கு 32 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 231 கனஅடியும் பதிவானது. வீரானத்தில் நீர்வரத் பூஜ்யமாக உள்ளது.

    கிடைக்கும் தண்ணீரை கொண்டு நகரின் அடுத்த ஆண்டுக்கான தண்ணீர் தேைவயை பூர்த்தி செய்ய முடியும். நீர்த்தேக்கங்களில் நீர் சேமிப்பு அதிகரித்து உள்ளதால் குடிநீர் வாரியத்தின் தினசரி வினியோகம் 1015 எம்.எல்.டி.யில் இருந்து வெள்ள பாதிப்பு நேரத்தில் 864 எம்.எல்.டி.யாக குறைந்துள்ளது.

    குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றிய பிறகு சென்னை குடிநீர் வாரியம் தினசரி வினியோகம் மீண்டும் 1015 எம்.எல்.டி.யாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×