search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Investors Conference"

    • உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது.

    சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளான இன்றே, ரூ.5.5 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை எட்டியுள்ளதாக தொழிற்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.

    இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை வரை நடைபெறவுள்ள நிலையில், இன்றைய நாளில் மட்டும் 5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.
    • கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் வெல்கம் ஓட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் ராமு ஜிஜேந்திரன் (ஜி ஜி), தனது தொழில் முதலீட்டாளர் ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். நிகழ்ச்சியில் எம். எல். ஏ.க்கள்

    வரலட்சுமி மதுசூதனன், மு.பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங் மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், உதவி இயக்குனர் கார்த்திக், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மாவட்ட பிரதிநிதி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தொழில்கள் செழிக்கும் தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளையும், முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த சூழலையும் எடுத்துக்காட்டும் தளமாக இம்மாநாடு அமையும்.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு:-

    தமிழ்நாடு, கடந்த 2 ஆண்டுகளாக தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

    2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 3,89,651 பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இவற்றின் மூலம் 2,70,020 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்படும்.

    இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்பட உள்ளது.

    தொழில்கள் செழிக்கும் தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளையும், முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த சூழலையும் எடுத்துக்காட்டும் தளமாக இம்மாநாடு அமையும். மேலும், மாநிலத்தில் உள்ள பெருந்தொழில்கள், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றை முதலீட்டாளர்களுடனும் உலக சந்தையுடனும் இணைக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமையும்.

    இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தொழில் வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்பது இந்த அரசின் குறிக்கோளாகும்.

    அண்மையில் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.

    இத்திட்டங்களின் மூலம் 1,44,028 கோடி ரூபாய் முதலீட்டில் 2,14,478 பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    சிலர் தன்னை பற்றி வாட்ஸ் அப்பில் சித்தரித்து அனுப்புவதை பற்றி கவலைப்படவில்லை என்றும், தமிழக மக்களை நம்பித்தான் தாம் அரசியல் நடத்திக்கொண்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #MKStalin #DMK
    சென்னை :

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து, பேசியதாவது:-

    சுயமரியாதை திருமணத்தின் வரலாற்றை எல்லாம் நான் பல மேடைகளில் பேசியது உண்டு. அந்தத் திருமணங்கள் எவ்வாறு நடக்கும் என்பதையெல்லாம் நான் விரிவாக எடுத்துரைத்து இருக்கிறேன். வைதீக திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களுக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ அதேபோல இதுபோன்ற சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களைப் போன்றவர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

    வைதீக முறையில் நடைபெறக்கூடிய திருமணங்கள் எப்படி நடக்கும் என நான் விவரித்தால், மு.க.ஸ்டாலின் இப்படிப் பேசி விட்டாரே என சிலர் வாட்ஸ் அப்பில் ஜோடித்து அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. நாம் தமிழ்நாட்டு மக்களை நம்பித்தான் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இனியும் அரசியல் நடத்துவோம். அதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

    இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அவர்கள் யார் படத்தை தன்னுடைய சட்டப்பையில் வைத்து ஊரை ஏமாற்றி வருகிறார்களோ அவர் கூட முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். ஜெயலலிதா முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்திய பின்னர், 2.42 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டார். இதனால் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாகப்போகிறது, தமிழ்நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கப்போகிறது என்றெல்லாம் உறுதிமொழி கொடுத்தார். இதுவரைக்கும் அது நடந்ததா என்றால் இல்லை.

    ஜெயலலிதா மறைந்ததற்குப் பிறகு இவர்களும் ஒரு மாநாடு என்கிற நாடகத்தை நடத்தினார்கள். முதல் மாநாடு நடத்தி போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியாத நிலையில், இதுவரை எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது? என்பது குறித்த புள்ளி விவரங்களுடன் ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமென நான் தொடர்ந்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலியுறுத்தினேன். ஆனால் இதுவரையில் வைக்கவில்லை.



    ஜெயலலிதா எப்படி முதல் மாநாட்டை ஆடம்பரமாக செலவு செய்து நடத்தினாரோ, அதைவிட அதிக செலவு செய்து வீண் விளம்பரம் செய்து இரண்டாவது மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அந்த மாநாட்டுக்கு ரோடுகளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கோட் சூட் அணிவித்து கட்டாயப்படுத்தி வரவழைத்து இருக்கிறார். வங்கிகளில் கடன் வாங்கி நோட்டீஸ் பெற்ற கம்பெனிகளின் முதலாளிகளும் அதில் அடக்கம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. சட்டமன்றத்தை கூட்டட்டும், ஆதாரத்தோடு அதனைச் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவை விட நாங்கள் அதிக முதலீடு வாங்கி விட்டோம் எனச் சொல்லி, மூன்றரை லட்சம் கோடி முதலீடு வாங்கியிருக்கிறோம் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது எடப்பாடி அரசு.

    ஆனால், என்னைப் பார்த்து எடப்பாடி கேட்கிறார், இதுவரை மு.க.ஸ்டாலின் கிராமங்களுக்குச் சென்றது உண்டா? ஏன் புதிதாக கிராமத்திற்கு செல்கிறார் எனக்கேட்கிறார். நான் போகாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் எல்லாம் அதிக கொடியேற்றிய ஒரு தலைவர் என்றால், அது நம்முடைய தலைவர் கருணாநிதி தான். அதற்கடுத்து யார் என்று கேட்டீர்கள் என்றால், நான் நெஞ்சு நிமிர்த்து சொல்வேன். அவருடைய மகனான நான் தான் இருக்கிறேன் என்று. என்னைப் பார்த்து எடப்பாடி சொல்கிறார் நான் கிராமத்துக்கு சென்று பஞ்சாயத்து செய்கிறேன் என்று, ஆனால், நீங்கள் கமி‌ஷனுக்கு போய் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய நிலைமை.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. அந்த தேர்தலை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது. நிச்சயம் வந்தே தீரும். அந்தத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத்தேர்தல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆகவே, இந்த மதவாதம் பிடித்த பா.ஜ.க. அரசுக்கும், கமி‌ஷன், கலெக்‌ஷன், கரப்‌ஷன் அ.தி.மு.க அரசுக்கும் தக்க பாடம் புகட்டுகிற வகையில் வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK
    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தகமையத்தில் வருகிற ஜனவரி 23 மற்றும் 24 ஆகியநாட்களில், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. #WorldInvestorsConference
    சென்னை:

    தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தகமையத்தில் வருகிற ஜனவரி 23 மற்றும் 24 ஆகியநாட்களில், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் “தமிழ்நாடு இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019” மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான தொழில் பொருட்காட்சி நடக்க உள்ளன.

    மாநாட்டின் போது முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்கள் ஆகியவற்றைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

    அங்கு அமைக்கப்பட உள்ள 250-க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்குகளில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகள் ஆகியோரின் தயாரிப்பு மற்றும் சேவைகள் பார்வைக்கு வைக்கப்படும்.

    மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாய வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணி துறைகளை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட உள்ள பொருட்காட்சிக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

    பொருட்காட்சியில் பங்கேற்பதற்கு முன் பதிவுகள் செய்து கொள்வதற்கான கடைசி நாள் 15.11.2018 ஆகும். பொருட்காட்சி அரங்கத்திற்கான இடம் கட்டணமின்றி ஒதுக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குழு பொருட்காட்சி அரங்கிற்கு விண்ணப்பித்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான இடத்தினைத் தேர்வு செய்து வழங்கும்.

    கூடுதலாக தேவைப்படும் அனைத்து விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தலைவர், பொருட்காட்சிக்குழு, தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 மற்றும் மேலாண் இயக்குநர், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொலைபேசி :914428554514 நிகரி : 914428518999 மின்னஞ்சல்முகவரி : md@sipcot.com

    பொருட்காட்சியில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்ய www.tngim.com இணைய தளத்தை பார்வையிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், முதலீட்டாளர்கள் இந்த அருமையான வணிக மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் வேண்டப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #WorldInvestorsConference
    ×