என் மலர்
தமிழ்நாடு

X
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் நாளிலேயே இலக்கை எட்டி தமிழக அரசு சாதனை
By
மாலை மலர்7 Jan 2024 6:13 PM IST

- உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து.
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளான இன்றே, ரூ.5.5 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை எட்டியுள்ளதாக தொழிற்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை வரை நடைபெறவுள்ள நிலையில், இன்றைய நாளில் மட்டும் 5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X