தமிழக அரசு திட்டங்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டு

மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் நடைபெற்றது. அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு கொண்டுவந்த தமிழக அரசுக்கு பாராட்டு.
பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேசிய காட்சி.
பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேசிய காட்சி.
Published on

திருப்பூர் :

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழகம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம், அர்ச்சனை மொழியாக தமிழ், உயர்கல்வியில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி உதவித்தொகை திட்டம், மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், அரசு பணிகளுக்கு தமிழில்தேர்வு போன்றவற்றை கொண்டுவந்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.

தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாகவும் அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை நிராகரித்து மாநில கல்வி கொள்கைக்காக குழு அமைத்துள்ள தமிழக அரசை பாராட்டுவதுடன், கல்வி உரிமையை பாதுகாத்திட கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றும் பணியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் 6 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com