search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM"

    ஈராக் நாட்டில் பல்வேறு பகுதிகளில் முறையாக மின்விநியோகம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் போராடியதை அடுத்து, மின்சாரத்துறை மந்திரியை நீக்கி, ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். #IraqPM #HaideralAbadi
    பாக்தாத்:

    ஈராக்கில் ஹைதர் அல் அபாடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலங்களில் அதிக அளவில் மின்தடை ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக மின்துறை ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்து பிரதமர் உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது மின்சாரத்துறை மந்திரியான காசிம் அல் பக்தாவியை முறையாக பணி செய்யாதது மற்றும் ஊழல் காரணங்களுக்காக அதிரடியாக நீக்கம் செய்து பிரதமர் ஹைதர் அல் அபாடி உத்தரவிட்டுள்ளார். #IraqPM #HaideralAbadi
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அறுபதாயிரம் கோடி ரூபாய் அளவில் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார். #Modi #UP #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக இன்று பல்வேறு தொழில்நிறுவனங்களின் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்திரா காந்தி பிரட்டிஸ்தான் பகுதியில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், உ.பி கவர்னர் ராம் நாயிக், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல மத்திய மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.

    சுமார் 60 ஆயிரத்து 228 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். இந்த திட்டங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 10 ஆயிரம் கோடியும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாயும் தங்களது முதலீடுகளாக அளித்துள்ளனர்.

    மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் தலா 5 ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாயும் தங்களது முதலீடுகளாக அளிக்க உள்ளனர். மேலும், இதுபோன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைப்பதற்கான முதலீடுகளை அளிக்க உள்ளனர்.



    இந்த திட்டங்கள் செயல்முறைக்கு வரும்போது சுமார் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் இந்த அடிக்கல் நாட்டு விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இது ஒரு வரலாற்று சாதனையான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார். மேலும், முந்தைய உத்தரப்பிரதேச அரசு மாநிலத்தின் வளர்ச்சியின் மீது தெளிவான நோக்கம் இல்லாமல் ஆட்சி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது நாடு சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும், 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களே காரணம் என மோடி சாடியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முழு வளர்ச்சியையும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் சிறப்பாக செய்துமுடிப்பார் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், செல்போன் தயாரிப்பதில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி 2019 மார்ச் மாதத்துக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்படும் எனவும் மோடி உறுதியளித்துள்ளார். #Modi #UP #YogiAdityanath
    தற்போது பள்ளத்தில் இருக்கும் நமது நாட்டை மீட்க மோடிக்கு 5 ஆண்டுகள் போதாது, அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் பேசியுள்ளார். #PMModi #KanganaRanaut
    மும்பை:

    பிரதமர் மோடியின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படத்தின் திரையீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கங்கனா ரனாவத், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற தனது ஆவலை தெரிவித்துள்ளார்.

    நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் பேசுகையில், “பிரதமர் மோடி சிறு வயதில் மிகவும் கடினமாக சூழ்நிலைகளில் வாழ்ந்துள்ளார் என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது. நாம் தான் அவரை பிரதமர் தேர்ந்தெடுத்தோம். இந்த பதவியை யாராலும் பறிக்க முடியாது. இது அவருடைய கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. நம் நாடானது தற்போது பள்ளத்தில் இருக்கிறது. இதிலிருந்து நாட்டை மீட்க 5 வருடங்கள் போதாது. இதை பள்ளத்திலிருந்து மீட்க மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்" என்றார்.
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற எனது வாக்குறுதியை மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தேன் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். #Modi #ManmohanSingh #APSpecialStatus
    புதுடெல்லி:

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து சென்ற முறை பாராளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி, இந்த முறை மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.

    இதையடுத்து, சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பேசிய ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மோடி வாக்குறுதி அளிக்கவில்லை எனவும், அதற்கு பதிலாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லி உட்பட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தாம் வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தனக்கு பின்னால் பிரதமராக வருபவர்கள் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என தாம் எதிர்ப்பார்த்ததாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். #Modi #ManmohanSingh #APSpecialStatus
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி விடுவோம் எனும் பகல் கனவை மம்தா பானர்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulSinha
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, 2019 பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தின் 42 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ.க தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா, ‘மம்தா பானர்ஜி மீண்டும் மாநில அரசை கைப்பற்றுவதே சந்தேகத்தில் இருக்கும் நிலையில், அவர் டெல்லிக்கு கனவு காண்கிறார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி விடுவோம் எனும் பகல் கனவை மம்தா பானர்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulSinha
    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் இதற்காக காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றும் ராகுல் கூறியுள்ளார். #WomensReservationBill #RahulSupport
    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, 2010-ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மக்களவையில் இந்த மசோதா  நிறைவேற்றபடவில்லை.

    முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு  தெரிவித்தன. இதனால், மசோதா நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், விரைவில் கூட உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.



    இது தொடர்பாக  பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை இணைத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. #WomensReservationBill #RahulSupport

    உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்தனர். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    தாம்ப்ரே:

    பின்லாந்தில் நடந்து வரும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்குட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பதக்கமேடையில் நின்ற அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்த ஹிமாதாசின் சொந்த ஊர், அசாம் மாநிலம் நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமம் ஆகும். உடன் பிறந்தவர்கள் 4 பேர். ஹிமா தாசின் மகத்தான வெற்றியால் அந்த கிராமமே உற்சாகம் பூண்டுள்ளது. 18 வயதான ஹிமா தாஸ் கூறுகையில் ‘தேசத்திற்காக பதக்கத்தை கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும். இந்திய மக்களுக்கு இந்த பரிசை அளிப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. உலக சாம்பியன் ஆனதன் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிபேன்’ என்றார்.



    புயல்வேக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஹிமா தாசின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையால் தேசம் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது. அவரது சாதனை இளம் வீரர், வீராங்கனைகளுக்கு நிச்சயம் உந்து சக்தியாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது வாழ்த்து செய்தியில், ‘51.46 வினாடிகளில் இலக்கை எட்டியது என்பது அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. புதிய சகாப்தத்தில் இது வெறும் தொடக்கம் தான். இன்னும் நிறைய பதக்கங்களை அவர் வெல்வார்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக 2 எம்.பி.க்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். #Brexit #UK
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவரும், வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் ஆகியோரும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

    இதையடுத்து, டேவிட்டின் இடத்தில் டொமினிக் ராப்பை நியமித்து பிரதமர் தெரெசா மே உத்தரவிட்டார்.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிதி நடைமுறைகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் உள்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய பிரிட்டன் நாட்டு மந்திரிகள் இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சியின் துணைத்தலைவர் பதவியில் உள்ள 2 எம்.பிக்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    பென் பிராட்லே மற்றும் மரியா கால்ஃபீல்டு ஆகிய 2 எம்.பி.க்களும் பிரெக்ஸிட் விவகாரத்தில் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பிரெக்ஸிட் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பலர் பதவி விலகி வருவதால், பிரெக்ஸிட் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #Brexit #UK
    பூடான் நாட்டின் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே 3 நாள் அரசு முறை பயணமாக ஜூலை 5-ம் தேதி இந்தியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #BhutanPM
    புதுடெல்லி:

    இந்தியாவும் பூடானும் தூதரக ரீதியான நட்புறவு கொண்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜுலை 5-ம் தேதி முதல் 3 நாள் சுற்றுப்பயணமாக பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது டாஷோ ஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை சந்தித்து டோக்லாம் எல்லைப்பிரச்சனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரையும் பூடான் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #BhutanPM
    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 பழங்குடியின மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பாராட்டினார். #PMModi
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 மாணவர்களால் பயணத்தை முடிக்க முடியவில்லை.

    இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் காவல்துறையில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.



    இந்நிலையில், எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.  #PMModi
    பிரிட்டன் நாட்டின் இளவரசர் வில்லியம்ஸ், இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரி நேதன்யாகுவை ஜெருசலேம் இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார். #PrinceWilliam #Netanyahu #Israel
    ஜெருசலேம்:

    பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளுக்கு அரச குடும்ப உறுப்பினராக பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இஸ்ரேல் பிரதம மந்திரி நேதன்யாகுவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பிரிட்டன் பிரதமரின் வருகையையொட்டி இஸ்ரேலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இஸ்ரேல் நாட்டின் தலைவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஜெருசலேம் இல்லத்தில் இவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது.

    இந்த சந்திப்பு குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. #PrinceWilliam #Netanyahu #Israel
    2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தும் நோக்கத்துடன் தான் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு நிதி ஒதுக்கீடு 2 மடங்காக உயர்த்தப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMmodi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நாட்டு மக்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

    அதன்படி இன்று 600 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி, 2017 - 18ம் ஆண்டில் 280 மில்லியன் டன் உணவு பொருட்களின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது 10.5 சதவிகித கூடுதல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு மண் வளம் காப்பது குறித்தும் மண்ணின் தரம் குறித்து அறிந்து அதற்கேற்ப பூச்சிக்கொல்லிகளை உபயோகம் செய்வது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும், நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கான விலையை எவ்வித இடைத்தரகரும் இன்றி நேரடியாக பெறுவதற்காக இ-நாம் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக உயர்த்தவே மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கான நிதி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #PMmodi 
    ×