search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AP special status"

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற எனது வாக்குறுதியை மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தேன் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். #Modi #ManmohanSingh #APSpecialStatus
    புதுடெல்லி:

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து சென்ற முறை பாராளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி, இந்த முறை மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.

    இதையடுத்து, சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பேசிய ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மோடி வாக்குறுதி அளிக்கவில்லை எனவும், அதற்கு பதிலாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லி உட்பட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தாம் வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தனக்கு பின்னால் பிரதமராக வருபவர்கள் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என தாம் எதிர்ப்பார்த்ததாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். #Modi #ManmohanSingh #APSpecialStatus
    ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக பஸ்கள் ஓடாததால் திருப்பதியில் தரிசனம் முடித்த பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். #APSpecialStatus #APBandh
    திருமலை:

    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி ஆந்திர மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், மக்களின் நிலைமையை மாற்ற வேண்டும் என ஆந்திர சட்டசபையில் பலமுறை பேச முயன்றார். ஆனால் அவரை பேச விடாமல் மறுத்தனர். இதனை கண்டித்தும் சந்திரபாபு நாயுடு, தேர்தலின்போது மக்களுக்கு இலவச வீட்டுமனை, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, சொந்த வீடு, இலவச மின்சாரம், இலவச வேளாண்மைக் கருவிகள் வழங்குவதாக கூறினார். ஆனால் எந்த திட்டமும் முழுமையாக நிறைவேறவில்லை.

    இதனை கண்டித்தும் மாநில அளவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    அதன்படி இன்று முழு அடைப்பு நடந்தது. திருப்பதி, சித்தூரில் பஸ், ஆட்டோ, வேன், கார்கள் ஓட வில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடாததால் முக்கிய வீதிகள், ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    திருப்பதியில் இருந்து திருமலைக்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. திருமலையில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.

    தரிசனம் முடித்த பக்தர்கள் திருமலையில் இருந்து திருப்பதிக்கு பஸ்களில் வந்தனர். ஆனால் திருப்பதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வேலூர், சென்னை உள்பட தமிழகத்தில் இருந்த வந்த பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    இதனால் திருப்பதியில் இருந்து தமிழக பக்தர்கள் ரெயில்களில் ஊருக்கு திரும்பினர். இதனால் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

    ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பாஸ்கர ரெட்டி, சித்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூரில் இருந்து திருப்பதி, சித்தூர், கே.ஜி.எப்., மதனபல்லி, குப்பம் செல்லும் பஸ்கள் ஓடவில்லை.



    ஆந்திரா செல்லும் 32 தமிழக அரசு பஸ்கள், ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் 46 ஆந்திர பஸ்கள், 32 தனியார் பஸ்கள் பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு பிறகு ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஆந்திரா செல்லும் கார், வேன் உள்பட வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. #APSpecialStatus #APBandh

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #APSpecialStatus #YSRCongressbandh #JaganMohanReddy
    விஜயவாடா:

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆளும் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து தெலுங்குதேசம் கட்சி சார்பில் மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லாததால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

    இந்நிலையில், ஆந்திராவுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், இந்த விஷயத்தில் மக்களை ஏமாற்றிய கட்சிகளைக் கண்டித்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



    விஜயவாடாவில் நேரு பஸ் நிலையத்திற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்சனம் செய்தனர். சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக முதல்வர் நாயுடு எப்படி பணியாற்றுகிறார்? என்பதை இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது என்று அவர்கள் கூறினர். பிரகாசம் மாவட்டத்தின் ஓங்கோல் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  #APSpecialStatus  #YSRCongressbandh #JaganMohanReddy
    ×