என் மலர்

  நீங்கள் தேடியது "Brexit deal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  லண்டன்:

  இங்கிலாந்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், 2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.

  ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

  ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை தோல்விகளை சந்தித்ததால், தெரசா மேவின் கோரிக்கையின் பேரில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

  இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  இதற்கு முன் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்புகள் அனைத்தும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஓட்டெடுப்பு தெரசா மேவுக்கு கைகொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால் இங்கிலாந்து, ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலிக்கிறார். #TheresaMay #BrexitDeal
  லண்டன்:

  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் இழுபறி நிலை நீடிக்கிறது.

  2016-ம் ஆண்டு நடந்த பொதுவாக்கெடுப்புக்கு பின்னர் பிரதமர் பதவிக்கு வந்த தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை தொடங்கினார்.

  இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஒரு ஒப்பந்தம் போட்டார். இந்த ஒப்பந்தம் முதன்முதலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் வந்தபோது வரலாற்று தோல்வியை சந்தித்தது. 230 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தெரசா மேயின் அந்த ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தோல்வி அடைந்தது நினைவுகூரத்தக்கது. 15 நாட்களுக்கு முன்பாக 2-வது முறையும் ஒப்பந்தம் தோல்வியைத் தழுவியது.  இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர், இரு தரப்பினரிடையே சிறப்பு வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தம், மூன்றாம் முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தோல்வியை தழுவியது.

  ஒப்பந்தத்தை ஆதரித்து 344 ஓட்டுகளும், எதிர்த்து 286 ஓட்டுகளும் விழுந்தன. இது தெரசா மேயுக்கு தலைவலியாக உருவாகி உள்ளது. ஒப்பந்தம் நிறைவேறி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதும் பதவி விலகுகிறேன் என அவர் உறுதி அளித்தும்கூட இந்த விவகாரத்தில் இங்கிலாந்து எம்.பி.க்கள் அவர் பக்கம் இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது.

  இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தை 4-வது முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து ஓட்டெடுப்பு நடத்துவதற்கான வழிவகைகளை பிரதமர் தெரசா மேயும், மந்திரிகளும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முன்தினம் ஒப்பந்தம் தோல்வியை தழுவிய பின்னர் பேசிய பிரதமர் தெரசா மே, இங்கிலாந்துக்கு மாற்றுவழி தேவைப்படுகிறது என கூறியது நினைவுகூரத்தக்கது.

  எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பைன், “ஒன்று தெரசா மே தனது திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அவர் உடனே பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தி வருகிறார்.

  ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் அதிருப்தி எம்.பி.க்கள் 34 பேரின் ஆதரவை பெறும் முயற்சியில் அரசு இதுவரை தோல்வியைத்தான் கண்டு வருகிறது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்கு பிரதமர் தெரசா மே முயற்சிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேறுவதை தவிர்க்கும் வகையில் பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்கு தெரசா மேயுக்கு ஏப்ரல் 12-ந் தேதி வரை அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #TheresaMay #BrexitDeal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது. #BrexitDeal #TheresaMay
  லண்டன்:

  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தியது.

  அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவாக வாக்களித்ததால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என முடிவானது.

  அதனை தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக பதவி ஏற்ற தெரசா மே முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.  ஆனால் அது அவருக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

  ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கான ஒப்புதலையும் பெற்றார்.

  இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

  அதன் பின்னர் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என்கிற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்தார்.

  ஆனால் இங்கிலாந்து எம்.பி.க்கள் அதையும் நிராகரித்தனர். அத்துடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.

  தெரசா மே அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு இடம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறி விட்டது.

  இந்த நிலையில் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை கொண்டு வந்தார்.

  இதையடுத்து மாற்றங்களுடன் கூடிய அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

  அப்போது இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 242 ஓட்டுகள் கிடைத்தன. எனினும் ஒப்பந்தத்தை எதிர்த்து 391 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். இதனால் 149 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது.

  அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தெரசா மே, சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து வெளியேறும் என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கும். அதையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 50-ன் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக தெரசா மே கொண்ட வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2-வது முறையாக தோல்வி அடைந்தது. #BrexitDeal #TheresaMay
  லண்டன்:

  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

  ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.

  இதில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

  இதன் மூலம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #BrexitDeal #TheresaMay 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார். #BrexitDeal #TheresaMay
  லண்டன்:

  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

  ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார்.

  அதே சமயம் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். #BrexitDeal #TheresaMay 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது. #TheresaMay #BrexitDeal
  பிரிட்டன்:

  பிரக்ஸிட்டை அமல்படுத்துவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

  ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி முடிவு செய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பிரிட்டன் ஐரோப்பிய யூனியிலிருந்து பிரிய ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டனின் இந்த வெளியேற்ற முடிவுதான் பிரக்ஸிட் எனக் குறிப்பிடப்படுகிறது.

  இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை வரும் மார்ச் 29ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான விதிகளை வகுக்கவில்லை என கூறப்படுகிறது.

  முன்னதாக இது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் தெரசா மே, பிரக்ஸிட்டை அமல்படுத்த தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றும் தெரசா மே கூறி இருந்தார்.

  இந்நிலையில், பிரக்ஸிட் மீதான பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு படுதோல்வி அடைந்தது. 432 பேர் பிரக்ஸிட்டுக்கு எதிராகவும் 202 பேர் பிரக்ஸிட்டுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

  பிரிட்டன் வெளியேற்றத்துக்கான கெடு முடிய இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் தெரசா மே அரசுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  #TheresaMay #BrexitDeal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே உருவாக்கிய உடன்படிக்கைக்கு ஆளும்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. #TheresaMay #Brexitdeal #Maynoconfidence
  லண்டன்:

  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

  ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

  இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

  இதற்கிடையில், சுமார் 500 பக்கங்களை கொண்ட ஒரு செயல்திட்ட அறிக்கையை ஐரோப்பிய யூனியன் தயாரித்துள்ளது.

  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

  இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.  ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோரும் 25-11-2018 அன்று புருசெல்ஸ் நகரில் தெரசா மே-வை சந்தித்தனர்.

  பின்னர், பிரிட்டன் அரசின் சார்பில் தெரசா மே முன்வைத்த உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக  ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார்.

  இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் ஆளும்கட்சியில் இடம்பெற்றுள்ள தெரசா மேவின் எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை தோற்கடிப்பதற்கு மறைமுகமாக முயற்சித்து வருகிறார்கள்.

  மேலும், பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் ரகசியமாக கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர்.

  650 இருக்கைகளை கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 315 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 257 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 15 சதவீதம் (48) எம்.பி.க்கள் கையொப்பமிட்ட கடிதம் 1922 உயர்மட்டக்குழு உறுப்பினர்களை கொண்ட ஆளும்கட்சி குழு தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும்.

  ஆளும்கட்சியை சேர்ந்த 315 எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் (210 உறுப்பினர்கள்) தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தால் தெரசா மே பதவியில் இருந்து விலக நேரிடும்.

  வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தால் அடுத்த 12 மாதங்களுக்கு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை யாரும் கொண்டுவர முடியாது.

  இந்நிலையில், தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் 18 உறுப்பினர்களை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் நம்பகமாக தெரிவிக்கின்றன.

  இதுதொடர்பான தகவலை கிரஹம் பிராடி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, இதில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது உறுதி என ஆளும்கட்சியில் உள்ள அவரது அதிருப்தி எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  இந்த வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி அடைந்தால் கட்சியின் தலைவர் பதவியிலும் அவர் நீடிக்க மாட்டார். மறுமுறை தலைவர் பதவிக்கு போட்டியிடவும் முடியாது. அப்படி ஒருவேளை தெரசா மே பதவி விலகினாலும் புதிய பிரதமர் பதவி ஏற்கும்வரை 6 வார காலம்வரை அவர் காபந்து பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளது.

  சமீபத்தில் பதவி விலகிய பிரெக்சிட் துறை மந்திரி டேவிட் டேவிஸ் லண்டன் நகர முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன், சர்வதேச வர்த்தகத்துறை மந்திரி பென்னி மோர்டுவான்ட், பாகிஸ்தான் வம்சாவளியினரும் உள்துறை மந்திரியுமான சாஜித் ஜாவித், பிரெக்சிட் முன்னாள் செயலாளர் டோமினிக் ராப், உணவு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி மைக்கேல் கோவே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெரெமி ஹன்ட் உள்ளிட்டோர் தெரசா மேவின் இடத்தை நிரப்புவதற்கும் ஆளும்கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமையேற்பதற்காகவும் காத்திருப்போர் பட்டியலில் தயார் நிலையில் உள்ளனர்.

  இந்நிலையில், வாக்கெடுப்பு நடந்தால் தெரசா மே பதவி விலக நேரிடுமா? அல்லது தீர்மானம் தோல்வி அடையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். #TheresaMay #Brexitdeal  #Maynoconfidence

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறைக்கான மந்திரி சாம் கியிமா ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #SamGyimah
  லண்டன்:

  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் விவகாரத்தில் பிரதமர் தெரசா மேயுக்கும், அவரது கன்சர்வேடிவ் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

  இந்த விவகாரத்தில் கடந்த மாதம் ஒரே நேரத்தில் டொமினிக் ராப், சைலேஷ் வாரா, சூயல்லா, எஸ்தர் மெக்வே ஆகிய 4 மந்திரிகள் பதவி விலகினார்கள்.

  இந்த நிலையில் மேலும் ஒரு மந்திரி இப்போது பதவி விலகி உள்ளார். அவர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறைக்கான மந்திரி சாம் கியிமா ஆவார்.  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் நிலையில், கலிலியோ செயற்கை கோள் திட்டத்தின் கீழ் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஐரோப்பிய கூட்டமைப்பு கூறி விட்டது. இதை தெரசா மேயும் உறுதி செய்துள்ளார்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் இப்போது மந்திரி சாம் கியிம் பதவி விலகி உள்ளார்.

  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில் தெரசா மே வரைவு திட்டம் வெளியிட்டதில் இருந்து பதவி விலகியுள்ள 7-வது மந்திரி சாம் கியிம் ஆவார்.  #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #SamGyimah
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்று ஒப்புதல் அளித்தன. #Brexitdeal
  புருசெல்ஸ்:

  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

  ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

  இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற தேதி நெருங்கி வருவதால் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

  இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். 

  இந்நிலையில், பிரெக்சிட் உடன்படிக்கயுடன் தெரசா மே நேற்று மாலை ஐரோப்பிய யூனியன் தலைநகரான புருசெல்ஸ் சென்றார்.   ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோரும் இன்று தெரசா மே-வை சந்தித்தனர்.

  பின்னர், பிரிட்டன் அரசின் சார்பில் தெரசா மே முன்வைத்த உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக  ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  இந்த பிரிவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர், இந்தநாள் மிகவும் சோகமான நாளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனைப் போன்ற ஒரு உயர்ந்த நாடு ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து விலகிச் செல்வது மகிழ்ச்சியான தருணமாகவும், கொண்டாட்டத்துக்குரிய சம்பவமாகவும் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

  இந்த உடன்படிக்கை உருவாவதற்கு ஐரோப்பிய யூனியன் தரப்பில் இருந்து பக்கதுணையாக இருந்த பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மைக்கேல் பார்னியெர், ‘நாங்கள் எப்போதும் துணைவர்களாகவும், பங்காளிகளாகவும், நண்பர்களாகவும் இருப்போம்’ என்று உறுதி அளித்தார்.

  இந்த பிரெக்சிட் உடன்படிக்கையின் அம்சங்கள்  ஐரோப்பிய யூனியன் நாட்டு அரசுகளின் இணையதளங்களில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் ஆளும்கட்சியில் இடம்பெற்றுள்ள தெரசா மேவின் எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை தோற்கடிப்பதற்கு மறைமுகமாக முயற்சித்து வருகிறார்கள் என தெரியவருகிறது. #TheresaMay #Brexitdeal #EUapproveBrexit 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். #Britishministerresigns #EstherMcVeresigns #Brexitagreement
  லண்டன்:

  ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் இன்று சமர்ப்பித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பிரெக்சிட் மந்திரி டோம்னிக் ராப் இன்று ராஜினாமா செய்தார்.

  இந்நிலையில், அவரை தொடரந்து பிரிட்டன் தொழிலாளர் நலன் மற்றும் ஓய்வூதியத்துறை மந்திரியான எஸ்தர் மெக்வே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒரே நாளில் இரு மந்திரிகள் ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாணயமான பவுண்டுகளின் மதிப்பில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. #Britishministerrsigns  #EstherMcVeresigns #Brexitagreement
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட உடன்படிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #TheresaMay #Brexitdeal
  லண்டன்:

  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

  ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

  இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

  இதற்கிடையில், சுமார் 500 பக்கங்களை கொண்ட ஒரு செயல்திட்ட அறிக்கையை ஐரோப்பிய யூனியன் தயாரித்துள்ளது.  பிரிட்டனில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் இதுதொடர்பாக விவாதிக்க வரும் 25-ம் தேதி அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற தேதி நெருங்கி வருவதால் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

  இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். சுமார் 5 மணிநேர விவாதத்துக்கு பின்னர் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது அறிவுப்பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் சிந்தித்து ஒட்டுமொத்த பிரிட்டன் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

  இந்த அறிக்கையில் மந்திரிகள் அனைவரும் கையொப்பமிட்ட பின்னர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் உடன்படிக்கை என்ற பெயரில் ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இந்த உடன்படிக்கையின் அம்சங்கள்  ஐரோப்பிய யூனியன் நாட்டு அரசுகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TheresaMay #Brexitdeal