search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kashmir"

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இந்த சம்பவத்துக்கு பிறகு இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் எல்லையில் உள்ள 80 கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 பேர் பலியானார்கள். 100 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் இன்று அத்துமீறலில் ஈடுபட்டது.

    பூஞ்ச் மாவட்டத்தில் 4 இடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை 4.30 மணி முதல் தாக்குதல் நடத்த தொடங்கினர். கிராமங்கள், ராணுவ நிலைகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. காலை 7.30 மணி வரை இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை. #PakistanCeasefireViolation #JammuAndKashmir

    காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. #PulwamaAttack #India #Pakistan
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

    குறிப்பாக இந்தியாவின் இந்த பதிலடி எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இந்தியாவின் பதிலடி எவ்வாறு இருக்குமோ? என்ற அச்சமும் அந்த நாட்டு தலைவர்களிடம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என ஆளாளுக்கு அலறி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி இந்த பதற்றத்தை தணிப்பதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியையும் நாடி வருகின்றனர். அந்தவகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பிரான்சிஸ்கோ ஆன்டனியோ கார்ட்டொரியலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்முத் குரேஷி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புலவாமா தாக்குதல் விவகாரத்தில், இந்தியா தனது சொந்த கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் தோல்விகளை மறைக்க தவறான யூகங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது பழிபோடுகிறது. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக, வேண்டுமென்றே பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுவது மட்டுமின்றி பதற்றமான சூழலையும் உருவாக்குகிறது.

    இந்த தாக்குதல் தொடர்பாக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி பலமுறை கூறியிருக்கிறார். இதைப்போல இந்திய அரசின் மூத்த உறுப்பினர்கள் பலரும் அச்சுறுத்தல் விடுகின்றனர். சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறி, தண்ணீரை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

    இரு நாடுகளுக்கு இடையே நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

    எனவே இந்தியாவின் விரோத மனப்போக்கு மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான படை அச்சுறுத்தல் போன்றவற்றால் எங்கள் பிராந்தியத்தில் சீரழிந்து வரும் பாதுகாப்பை பலப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில் தலையிட்டு தற்போதைய பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெசிடமும் வலியுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி, தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

    இதைப்போல ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். 
    ராஜஸ்தானின் டோங்க் என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களது போர் காஷ்மீருக்கானது, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார். #PMModi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது. காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர்.

    காஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது. எங்களது போர் காஷ்மீருக்கானது மட்டுமே. காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல.



    பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    எல்லைப்பகுதியில் உள்ள வீரர்கள் மீதும் மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உரிய நேரத்தில் எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம் என தெரிவித்துள்ளார். #PMModi
    ஜம்மு காஷ்மீரில் 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, இதற்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐநா சபையில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack

    பாரீஸ்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.

    இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.

    அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

    ஆனால் தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரம் மூலம் சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது பங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    அதற்கான நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீர்மானம் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ஆலோசகர் பிலிப் எடின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் நேற்று டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். #JammuKashmir #CRPF #PulwamaAttack

    ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மீட்ட ராணுவ வீரர்கள் சுமார் 2½ கி.மீ சுமந்து சென்று காப்பாற்றினர். #Pregnantwoman #Snowfall
    ஜம்மு:

    கா‌ஷ்மீரில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில் வடக்கு கா‌ஷ்மீர் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவும்படியும் பந்திபூர் ராணுவ முகாமுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.

    இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். ஆனால் சாலைகள் முழுவதும் பனித்துகள்களால் மூடப்பட்டு இருந்ததால் ஆம்புலன்சை வீட்டின் அருகே கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் மனம் தளர்ந்துவிடாத வீரர்கள், அந்த பெண்ணை தூக்குப்படுக்கையில் சுமார் 2½ கி.மீ தூரத்துக்கு இடுப்பளவு பனித்துகள்களுக்கு மத்தியிலும் சுமந்து சென்றனர்.

    பின்பு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தக்க நேரத்தில் உதவி புரிந்த ராணுவ வீரர்களுக்கு அந்த பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். #Pregnantwoman #Snowfall
    காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #IMD
    புதுடெல்லி:

    காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும் குளிரும் நிலவுகிறது.

    இதற்கிடையே இமயமலையின் மேற்கு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (20-ந் தேதி) முதல் 23-ந் தேதி வரை மேற்கு இமயமலை பகுதிகளான காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காஷ்மீரில் இன்றும், நாளையும் பனிப்பொழிவு மிக கடுமையாக இருக்கும் என்றும் பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    துருவப் பகுதியில் இருந்து மணிக்கு 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிக பட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் குளிர் காற்று வீசும்.

    டெல்லி, ஒடிசாவில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தற்போது நிலவும் குளிர் தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இப்போதைக்கு சேர மாட்டேன் என்றும் ஷா பைசல் கூறினார். #ParliamentElection #ShahFaesalIAS
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பைசல். 35 வயதான இவர், 2009-ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்த முதலாவது காஷ்மீரி என்ற பெருமையை பெற்றவர். கடந்த 9-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார். காஷ்மீர் மக்கள் கொல்லப்படுவதற்கும், முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.



    இந்நிலையில், ஷா பைசல் நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இப்போதைக்கு சேர மாட்டேன் என்றும் அவர் கூறினார். பிரிவினைவாத ஹூரியத் மாநாடு இயக்கத்தில் தனது ஆட்சிப்பணி அனுபவம் பயன்படாது என்பதால், அதில் சேர மாட்டேன் என்றும் ஷா பைசல் தெரிவித்தார்.  #ParliamentElection #ShahFaesalIAS

    காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களிலும் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. #JammuAndKashmir #Kashmir #SnowFall
    ஸ்ரீநகர்: 

    வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது.

    காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு, வருகிற 31-ந் தேதியுடன் கடும் பனிப்பொழிவு காலம் நிறைவுபெறுகிறது. அந்த வகையில், புத்தாண்டு தினத்தில் இருந்து கடும்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்காம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இன்று பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கார்கில் பகுதியில் மைனஸ் 17 டிகிரி செல்சியசும், லடாக் மாகாணம் லே நகரில் மைனல் 12.4 டிகிரி வெப்பநிலையும் நிலவியது. 



    மேலும் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது. இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #JammuAndKashmir #Kashmir #SnowFall

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது. #Kashmir #Snowfall
    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தாங்க முடியாத அளவுக்கு கடும் குளிர் நீடித்து வருகிறது.

    டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் அதிகாலையில் பயங்கர குளிர் காற்று வீசுகிறது. இதனால் போக்குவரத்துகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது.

    இதனால் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள் குளிர் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காரணமாக நீர் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஏரிகள், குளங்களில் உள்ள தண்ணீர் பனிக் கட்டியாக மாறி வருகிறது. புகழ்பெற்ற டால்ஏரி முற்றிலும் பனிக்கட்டியாக உறைந்து விட்டது.

    அதிகாலையில் குளிர் காற்று வீசுகிறது. வாட்டி வதைக்கும் அந்த குளிர் காற்றை எதிர்கொண்டு செல்ல முடியாததால் பகல் 11 மணி வரை வாகன போக்குவரத்தும் குறைவாகவே உள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் 1990-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி மிக குறைவான மைனர் 8 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தது. தற்போது மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது.

    இதனால் காஷ்மீருக்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கார்கில் பகுதியில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.

    குளிர் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாரடைப்பு உள்பட உடல்நலக்குறைவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காஷ்மீர் மாநில டாக்டர்கள் சங்கம் எச்சரித்து உள்ளது. #Kashmir #Snowfall
    காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டுகிறது. இந்த குளிரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். #Kashmir
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டுகிறது. இதனால் மாநிலத்தின் பல இடங்களில் மைனஸ் டிகிரிக்கு வெப்பநிலை சென்றுள்ளது.

    லே பகுதியில் நேற்று முன்தினம் இரவு மைனஸ் 15.8 டிகிரியாக இருந்தது. இது முந்தைய நாள் இரவை விட 3.1 டிகிரி குறைவாகும். இதன் மூலம் நடப்பு குளிர்காலத்தின் அதிக குளிரான இரவாக அந்த இரவு பதிவாகி இருக்கிறது.

    இதைப்போல மாநிலத்தின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு மைனஸ் 5.4 டிகிரியும், காசிகுண்ட் பகுதியில் மைனஸ் 4.9 டிகிரியும் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    மாநிலத்தில் ஆண்டுதோறும் கடுங்குளிர் நிலவும் 40 நாள் காலமான ‘சில்லாய்-காலன்’ தொடங்கிய 2-வது நாளிலேயே காஷ்மீரின் பல பகுதிகளில் கடுங்குளிர் வாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளிரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். #Kashmir 
    காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் காரணமாக ஸ்ரீநகரில் இன்டர்நெட் சேவை தற்காலிமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. #jammuandkashmir #3terroristskilled

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் முஜ்குந்த் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.


    அதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக ஸ்ரீநகரில் இன்டர்நெட் சேவை தற்காலிமாக முடக்கி வைக்கப்பட்டது. #jammuandkashmir #3terroristskilled 

    காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். #JK #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ரெட்ஹனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில போலீசார் ஆகியோர் இணைந்து அந்த வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.

    அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. வீடுகள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    5 மணி நேரம் நடந்த இந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். அங்கிருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதேபோல மற்றொரு என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது.

    புல்ஹமா மாவட்டம் டிரால் பகுதியை அடுத்த ஹபு என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் 20 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JK #MilitantsKilled

    ×