search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிப்பொழி"

    காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #IMD
    புதுடெல்லி:

    காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும் குளிரும் நிலவுகிறது.

    இதற்கிடையே இமயமலையின் மேற்கு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (20-ந் தேதி) முதல் 23-ந் தேதி வரை மேற்கு இமயமலை பகுதிகளான காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காஷ்மீரில் இன்றும், நாளையும் பனிப்பொழிவு மிக கடுமையாக இருக்கும் என்றும் பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    துருவப் பகுதியில் இருந்து மணிக்கு 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிக பட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் குளிர் காற்று வீசும்.

    டெல்லி, ஒடிசாவில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தற்போது நிலவும் குளிர் தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD

    ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை, தத்தனூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடுமையான மூடுபனி காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 

     மேலும் திருச்சி-சிதம்பரம் செல்லும் தேசியநெடுஞ்சாலையிலும், கும்பகோணம் -சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும்  கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால் விபத்துகளை தவிர்க்க டிரைவர்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மெதுவாக ஊர்ந்து சென்றனர். 8 மணிஅளவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பனி மெதுவாக விலகி சென்றது.

    இந்த பனிப்பொழிவால் நெற்பயிருக்கோ, பூக்கள் செடிக்கோ பாதிப்பு ஏற்ப டுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  பனிப்பொழிவு காணப்பட்டது.
    ×