என் மலர்
நீங்கள் தேடியது "terrorist killed"
- ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் பயங்கரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவுஃப் அசார் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
IC-814 விமான கடத்தல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவன் அப்துல் ரவுஃப் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பண்டிபோரா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். பணய கைதியாக பிடித்துவைத்திருந்த ஒருவரை மீட்டனர். மற்றொருவரை மீட்க முயற்சி நடக்கிறது.
காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் மிர் மொஹல்லாவில் பயங்கரவாதிகள் ஒரு இடத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரின் சிறப்பு படை, ராணுவம், மத்திய ஆயுதப்படை போலீசார் அடங்கிய கூட்டுக்குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை நெருங்கியதும் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன், பயங்கரவாதிகள் பணய கைதியாக பிடித்துவைத்திருந்த அப்பாவி ஒருவரை மீட்டனர். மேலும் ஒருவர் அங்கு சிக்கியிருப்பதாக தெரியவந்தது. அவரை மீட்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துப்பாக்கி சண்டை நடைபெறும் தகவல் அறிந்து போராட்டக்காரர்கள் அந்த பகுதிக்கு விரைந்துவந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கினர். இதைத்தொடர்ந்து அவர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் முதலில் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து சிறு குண்டுகளால் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். #JammuKashmir #ArmyEncounter
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் முஜ்குந்த் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக ஸ்ரீநகரில் இன்டர்நெட் சேவை தற்காலிமாக முடக்கி வைக்கப்பட்டது. #jammuandkashmir #3terroristskilled
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம், ஹந்த்வாரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தொடர்கிறது. #TerroristKilled






