என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். #MilitantKilled
ஸ்ரீந்கர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #MilitantKilled
Next Story






