search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைனஸ் 7 டிகிரி குளிரால் காஷ்மீர் மக்கள் கடும் அவதி
    X

    மைனஸ் 7 டிகிரி குளிரால் காஷ்மீர் மக்கள் கடும் அவதி

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது. #Kashmir #Snowfall
    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தாங்க முடியாத அளவுக்கு கடும் குளிர் நீடித்து வருகிறது.

    டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் அதிகாலையில் பயங்கர குளிர் காற்று வீசுகிறது. இதனால் போக்குவரத்துகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது.

    இதனால் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள் குளிர் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காரணமாக நீர் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஏரிகள், குளங்களில் உள்ள தண்ணீர் பனிக் கட்டியாக மாறி வருகிறது. புகழ்பெற்ற டால்ஏரி முற்றிலும் பனிக்கட்டியாக உறைந்து விட்டது.

    அதிகாலையில் குளிர் காற்று வீசுகிறது. வாட்டி வதைக்கும் அந்த குளிர் காற்றை எதிர்கொண்டு செல்ல முடியாததால் பகல் 11 மணி வரை வாகன போக்குவரத்தும் குறைவாகவே உள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் 1990-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி மிக குறைவான மைனர் 8 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தது. தற்போது மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது.

    இதனால் காஷ்மீருக்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கார்கில் பகுதியில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.

    குளிர் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாரடைப்பு உள்பட உடல்நலக்குறைவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காஷ்மீர் மாநில டாக்டர்கள் சங்கம் எச்சரித்து உள்ளது. #Kashmir #Snowfall
    Next Story
    ×