search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "candidates"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று 2-வது நாளாக நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர்.
    • நாகப்பட்டினம் தொகுதியில் நிற்க கடும் போட்டி ஏற்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடந்த பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நாகப்பட்டினம், திருப்பூரில் போட்டியிடுகிறது. இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    இன்று 2-வது நாளாக நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். தேசிய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து விவாதித்தனர்.

    திருப்பூர் தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள சுப்பராயனை மீண்டும் நிறுத்துவது எனவும் நாகப்பட்டினம் தொகுதியில் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் என்பவரை நிறுத்தவும் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

    நாகப்பட்டினம் தொகுதியில் நிற்க கடும் போட்டி ஏற்பட்டது. மாநில நிர்வாகிகள் கருத்துக்களை ஏற்று இறுதியில் சுப்பராயன் மற்றும் வை.செல்வராஜ் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இருவரையும் இன்று மாலை 4 மணியளவில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    அதன்படி, திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் போட்டியிடுவதாகவும், நாகப்பட்டினம் தொகுதியில் செல்வராஜ் போட்டியிடுவதாகவும அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
    • பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

    அதன்படி, யஷ்வீர் சிங் (பிஜ்னோர்), மனோஜ் குமார் (நாகினா), பானு பிரதாப் சிங் (மீரட்), பிஜேந்திர சிங் (அலிகார்), ஜஸ்வீர் வால்மீகி (ஹத்ராஸ்) மற்றும் தரோகா சரோஜ் (லால்கஞ்ச்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது.
    • 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.

    அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.

    மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள போட்டியாளர்களின் 2ம் கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.

    இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 60 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.

    இதில், அம்மாநில முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது. இது, பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தவாங் மாவட்டத்தின் கீழ் வரும் மூன்று தொகுதிகளில் இதுவும் ஒன்று. 

    இந்த 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.

    கடந்த திங்கள் அன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

    முன்னதாக 2019 மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 60 சட்டமன்றத் தொகுதிகளில் 57 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

     

    • கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.
    • பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று தி.மு.க. ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளது.

    இந்நிலையில் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து கடந்த சில நாட்களாக கருத்து கேட்டு வந்தது.

    தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தினமும் காலை, மாலை என இரு நேரமும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.

    ஆனாலும் உங்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பேசி தீர்த்து கொள்ளலாம். இப்போது மேலிடம் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். தொகுதிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்று கேட்டறிந்தனர்.

    28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த குழு தயாரிக்க உள்ளது.

    இந்த பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    இதற்கிடையே தி.மு.க.வில் யார்-யாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

    1 மத்திய சென்னை-தயாநிதிமாறன், 2 வட சென்னை-கலாநிதி வீராசாமி, 3 தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், 4 ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு, 5 காஞ்சிபுரம்-செல்வம், 6 அரக்கோணம்-ஜெகத்ரட்சகன், 7 வேலூர்-கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகனின் மகன்) 8 திருவண்ணாமலை-அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், இவர் மாநில மருத்துவ அணி துணைத் தலைவராக உள்ளார். 9 கள்ளக்குறிச்சி-கவுதம் சிகாமணி (அமைச்சர் பொன்முடியின் மகன்), 10 கடலூர்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், 11 சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் பேரன் டாக்டர் தருண் அல்லது உதயநிதி ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் பி.கே.பாபு, 12 நீலகிரி-முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, 13 பொள்ளாச்சி-சண்முக சுந்தரம் எம்.பி. அல்லது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து இணைந்த மகேந்திரன், 14 பெரம்பலூர்-அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண், 15 தர்மபுரி-முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அல்லது டாக்டர் செந்தில் குமார், 16 திண்டுக்கல்-வேலுசாமி எம்.பி., 17 தூத்துக்குடி-தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., 18 நெல்லை-மகளிரணி ஹெலன் டேவிட்சன் அல்லது கிரகாம்பெல், 19 தென்காசி-தனுஷ் எம்.குமார் எம்.பி., 20 தஞ்சை-முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

    தி.மு.க. வசம் உள்ள இந்த தொகுதிகளில் சிலவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கேட்டு பட்டியல் கொடுத்துள்ளதால் தொகுதிகளை மாற்றிக் கொடுக்க வாய்ப்புள்ளது.

    மேலும் சில தொகுதிகள் கூட்டணி வசம் இருப்பதால் அந்த தொகுதிகளில் சிலவற்றை தி.மு.க. கேட்டு பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்டியல் மாற்றமும் இருக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    • ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
    • வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இடம் பெற்றுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் அவரது கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.

    இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்று கணிசமான வாக்குகள் பெற வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் பா.ஜ.க.விடம் கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகளை குறிப்பிட்டு அவர் பட்டியல் தயாரித்து கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 22 தொகுதிகளில் இருந்து அ.ம.மு.க.வுக்குரிய 2 அல்லது 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


    டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

    மற்றொரு தொகுதியாக தேனி அல்லது சிவகங்கையை கேட்டுள்ளார். இந்த தொகுதிகளில் தனது தீவிர ஆதரவாளர்களை களம் இறக்க டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கும் டி.டி.வி.தினகரன் இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் தனது வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    • 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
    • அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டி.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை, சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

    இந்நிலையில், 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.

    இதில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    லக்னோ, கோரக்பூர், பைசாபாத் உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
    • தொகுதிகளில் வேலைகளையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

    இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில் டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை), ராயபுரம் மனோ (வடசென்னை), மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்), செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு), ராஜ்சத்யன் (மதுரை), கண்ணன் (திண்டுக்கல்), கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி) உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.

    தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

    இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    • உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
    • வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.

    பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.

    இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.

    ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.

    அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.

    வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    • கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர்கள் 925 கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • நேர்காணல் மாவட்ட வாரியாக உள்ள மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

    சேலம்:

    கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர்கள் 925 கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப் பட்டு, அவர்களுக்கான நேர்காணல் மாவட்ட வாரி யாக உள்ள மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

    அதன்படி, சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 236 விற்பனையாளர் பணியி டத்திற்கு 18000 பேரும், 40 கட்டுனர்கள் பணியிடத் துக்கு 3000 பேரும் விண்ணப்பித்தனர். தகுதி யான விண்ணப்பதாரர் களுக்கு விற்பனையாளர், கட்டுனர் பணி இடங்களுக் கான நேர்முகத் தேர்வு கடந்த டிசம்பரில் அழகா புரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் 236 விற்பனையாளர்கள் 40 கட்டுனர் பணிக்கு தேர்வா னவர்கள் பெயர் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலை யத்தின் மூலம் இணையத ளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட் டுள்ளது. இதில் விண்ணப்ப எண், தேர்வர்கள் பெயர், பிறந்த தேதி இடம் பெற்றுள்ளது.

    ரேஷன் கடை விற்பனை யாளர், கட்டுனர் பணி இடத்துக்கு தேர்வானவர் களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

    • பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தி.மு.க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திட்டக்குழு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரவிகுமார், முஸ்தபா, ஜார்ஜ், ராமசாமி, ராஜேந்திரன், பாபு, விசாலாட்சி ஆகியோரும், ஏற்கனவே மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக உள்ள பொன்தோஸ், உமாராஜன், வனஜா, மீனா, சசிகலா, அனீபா ஆகியோர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றதை தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்கிடம் வாழ்த்து பெற்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத் துல்லா, தொரை, பில்லன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், இஸ்மாயில், மணிகண்டன், ஊட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் ரவி, ரீட்டாமேரி, ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், நாகமணி, கீதா, மேரி பிளோ ரினா, பிரியா வினோதினி, திவ்யா, அனிதா லட்சுமி, பிளோரினா, மீனா, ஜாகீர்உசேன், மன்சூர், கோபி, சாந்தாசந்திரன், வசந்தி, சுசிலா, சித்ரா, பாக்கியவதி, சமீனா மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    வேளாண் எந்திரங்கள், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
    தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை வாயிலாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் “வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்டம் கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்யவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்து டனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.  தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்; நிறுவனங்களுக்கு இம்மை யங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.  இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன.  இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும். 

    இந்த மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியில் துறை அலுவலகங்களை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

    மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படை யில் வேளாண் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளரால்முடிவு செய்யப்பட்டு பயனாளிகள் மொத்தத் தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ள லாம். பின்னர் சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் மையத்தை நேரில் அய்வு செய்து திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையை பயனாளியின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.

    தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த வர்கள் தஞ்சாவூர் வேளாண் பொறியியல் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர்,மானோ ஜிபட்டி ரோடு, மருத்துவ க்கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்- 613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாபே ட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்தவ ர்கள் வேளாண் பொறியியல் துறை கும்பகோணம் உபகோட்ட உதவிசெயற்பொறியாளர் அலுவலகம்,தொழில் பேட்டை அருகில், திருபு வனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் - 612 103 என்ற முகவரியிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.இதேபோல் பட்டுக்கோ ட்டை,மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவா சத்திரம் வட்டார ங்களை சார்ந்த வர்கள் பட்டுக்கோட்டை வேளாண் பொறியியல் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை -614 601 என்ற முகவரியிலும் அணுகி விண்ணப்பத்தை அளித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
    ×