என் மலர்

  நீங்கள் தேடியது "constituency"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை மற்றும் ஆரணி, அரக்கோணம் மக்களவை தொகுதியில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

  திருவண்ணாமலை:

  மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் பதிவான வாக்குகளில், 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருந்தால் செலுத்தப்பட்ட டெபாசிட் தொகையை வேட்பாளர் தக்க வைத்துக் கொள்வார்கள்.

  திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு (27,503) வாக்குகள்), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் (14,654 வாக்குகள்), அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஞானசேகர் (38,639 வாக்குகள்) உட்பட 23 வேட்பாளர்கள், தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

  6,66,272 வாக்குகளை பெற்று தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையும், 3,62,085 வாக்குகளை பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டனர்.

  ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழரசி (32,409 வாக்குகள்), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஷாஜி (14,776 வாக்குகள்) அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் (46,383 வாக்குகள்) உட்பட 13 வேட்பாளர்கள், டெபாசிட் தொகை இழந்துள்ளனர்.

  6,17,760 வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தும், 3,86,954 வாக்குகளை பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையும் டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டனர்.

  ஆரணி மக்களவை தொகுதியில் பதிவான 11,14,699 வாக்குகளில் 1,90,284 வாக்குகளை பெற்றிருந்தால் டெபாசிட் தொகை திரும்ப கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 6 லட்சத்து 72 ஆயிரத்து 190 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3 லட்சத்து 43 ஆயிரத்து 234 ஓட்டு பெற்று தோல்வியடைந்தார்.

  இவர்களை தவிர இந்த தொகுதியில் போட்டியிட்ட 17 வேட்பாளர்கள் டெபாசிட் இழுந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றத்துக்கு இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

  புதுடெல்லி:

  பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது.

  அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

  கடந்த 6-ந்தேதி 51 தொகுதிகளுக்கும், 12-ந் தேதி 6-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருந்தது.

  பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்குவங்காளம் (9), சண்டிகர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் இந்த 59 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 30-ந்தேதி இந்த 59 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.

   


  கடந்த 2 வாரங்களாக இந்த 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் 8 மாநிலங்களிலும் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்கள். அதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோரும் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  இதற்கிடையே மாநில கட்சிகளின் தலைவர்களான மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்பட்டதால் அங்குள்ள 9 தொகுதிகளிலும் நேற்று முன்தினமே பிரசாரம் ஓய்ந்தது.

  மற்ற 50 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் கடந்த 2 மாதமாக பரபரப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.

  நாளை (ஞாற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இதற்காக 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  முதல் 6 கட்ட தேர்தல் மூலம் 483 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. நாளை 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெறும். பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் தேர்தல் நடைபெறும்.

  நாளை நடக்கும் தேர்தலில் சுமார் 10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற் காக 59 தொகுதிகளிலும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  59 தொகுதிகளில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

  நாளை சத்ருகன்சின்கா, ரவிசங்கர்பிரசாத், நிஷா பாரதி, பவன்குமார் பன்சால், சன்னி தியோல் ஆகியோர் தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த 50 தொகுதிகளிலும் 33 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை மாநில கட்சிகளின் கடுமையான சவால் காரணமாக பாரதிய ஜனதா நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
  லக்னோ:

  பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

  உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோவில் நகரமான வாரணாசி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

  இந்த தொகுதியில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து  வாரணாசி நகர வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.  கடந்த தேர்தலில் இங்கு சுமார் 10.28 லட்சம் வாக்குகள் பதிவாகின. அதில் பிரதமர் மோடி 5 லட்சத்து 16 ஆயிரத்து 593 வாக்குகளை பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 793 வாக்குகளை பெற்றார்.

  மூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  80 தொகுதியிலும் போட்டியிட முடியுமா? என்று காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சவால் விடுத்துள்ளார். #Mayawati

  லக்னோ:

  பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

  என்றாலும் மரியாதை நிமித்தமாக சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும், ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியிலும் வேட்பாளர்களை சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிறுத்தவில்லை.

  இந்த நிலையில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

  இதற்கு சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:-

  உத்தரபிரதேசத்தில் நாங்கள் கூட்டணியில் சேர்க்காததால் எங்கள் மீது காங்கிரஸ் தலைவர்கள் கோபத்துடன் உள்ளனர். எங்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே 7 தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளனர்.

  இப்படி குழப்பத்தை பரப்புவதை காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களுக்குள் நல்ல நட்புறவு உள்ளது. அதை கெடுப்பதற்கு காங்கிரஸ் முயற்சி செய்ய வேண்டாம்.

  காங்கிரஸ் பரப்பும் வதந்திகளையும் குழப்பத்தையும் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் நம்ப வேண்டாம். காங்கிரஸ் கட்சி இனி தினமும் ஒரு வதந்தியை பரப்பும். எனவே நமது கூட்டணி தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

  காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் போட்டியிட ஆள் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு துணிவு இருந்தால் 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? அந்த துணிவு காங்கிரசுக்கும் இல்லை.

  80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியால் பாரதிய ஜனதாவை தோற்கடித்து விட முடியுமா? எனது இந்த சவாலுக்கு காங்கிரசார் முதலில் பதில் சொல்லட்டும்.

  இவ்வாறு மாயாவதி கூறினார்.

  மாயாவதியின் கருத்தை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வழிமொழிவதாக கூறியுள்ளார். #Mayawati

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள். #Congress

  சென்னை:

  தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள்.

  அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதிக்கு 62 பேர் மனு கொடுத்து உள்ளனர். கிருஷ்ணகிரி- 15, ஆரணி- 36, கரூர்- 17, திருச்சி- 25, சிவகங்கை, தேனி- 18, விருதுநகர்- 12, கன்னியாகுமரிக்கு 54 பேர் மனு கொடுத்துள்ளார்கள். விருப்பமனுவை பரிசீலித்து பட்டியல் தயாரிக்கும் பணி இன்று நடந்தது.

  காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சஞ்சைதத், ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், மற்றும் குஷ்பூ, செல்வப்பெருந்தகை, ஆரூண், கே.ஆர். ராமசாமி, டாக்டர் செல்லக்குமார் உள்பட 26 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் விருப்ப மனுக்களை ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்தனர்.

  இந்தப் பட்டியல் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்படுகிறது. டெல்லி மேலிடம் வேட்பாளர்களை தேர்வு செய்து இன்னும் இரண்டு நாளில் அறிவிக்க உள்ளது.

  தேனி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பி ஆரூண் வாய்ப்பு கேட்டுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அவரது மகனும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான அசன் ஆரூணும் மனு கொடுத்துள்ளார் ஒரே தொகுதிக்கு தந்தையும், மகனும் வாய்ப்பு கேட்டு இருப்பது ருசிகரமாக அமைந்துள்ளது. #Congress

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParliamentElection #BJP #ADMK
  சென்னை:

  பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  ஆனால், அதே நேரத்தில் மற்றொரு புறம் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், 6 தொகுதிகள் எவை என்பது கண்டறியப்பட்டுவிட்டன. அதற்கு பா.ம.க.வும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஒரு தொகுதி மட்டும் தான் எது என்பது பேச்சுவார்த்தையில் உள்ளது.

  அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் வடசென்னை தொகுதியை பா.ஜ.க. விரும்பவில்லை. அதற்கு மாற்றாக திருப்பூர் அல்லது தஞ்சாவூர் தொகுதியை அந்த கட்சி கேட்டு வருகிறது.  அதே நேரத்தில், 4 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் யார் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

  மேலும், பா.ஜ.க.வுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும், தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தமும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. #ParliamentElection #BJP #ADMK
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam
  சென்னை:

  பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.

  வழக்கம்போல அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது.

  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவியது. அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் சேர மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்த கமல்ஹாசன் காங்கிரஸ் பக்கம் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் பேசியதால் காங்கிரஸ் அணியில் நிச்சயமாக அவர் இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அவர் எந்த அணியிலும் சேராமல் தனித்து போட்டியிட தயாராகி வருவது உறுதியாகி இருக்கிறது.

  இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணியவன் அல்ல. ஆனால், நான் அரசியலுக்கு வர வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  இது ஒரு கடினமான பணி என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. சினிமாவும் கூட கடினமான பணிதான். இருந்தாலும் அதில் நான் அனுபவித்து பணிகளை செய்தேன். சினிமா வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.

  அதே போன்று அரசியலும் இருக்கும். மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார்கள். எங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் நிலை உருவாகும்.

  மக்கள் நீதிமய்யம் கட்சியின் பெயர், சின்னம், கொடி போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று நினைத்தோம். ஆனால், அதை முறியடித்து இருக்கிறோம்.

  இப்போது அனைத்து கிராமங்களிலும் கூட நாங்கள் பிரபலம் அடைந்து இருக்கிறோம். அதாவது எல்லா இடங்களிலும் எங்களது கட்சி சென்றடைந்துள்ளது.

  கிராம சபை கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி நேரடியாக மக்களை சந்தித்து வருகிறோம். இதன் மூலம் அடிமட்ட மக்களை சென்றடைந்து வருகிறோம். எங்கள் திட்டங்களைத்தான் இப்போது பல கட்சிகளும் காப்பி அடிக்கின்றன.

  எங்களுக்கு தடை ஏற்படுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. எங்களது கூட்டத்துக்கு அனுமதி தருவது போன்றவற்றில் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்.

  அதே நேரத்தில் நான் எங்கு சென்றாலும் என்னை பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் பல லட்சம் மக்களை நான் சந்தித்து விட்டேன்.

  நான் சிறு வயதில் இருந்தே இது போன்ற கூட்டங்களை பார்த்து பழக்கப்பட்டு உள்ளேன். கடந்த காலங்களில் மக்கள் என்னை சந்தித்ததற்கும், இப்போது சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

  அன்று என்னை சினிமா நடிகர் என்ற அடிப்படையில் பார்ப்பதற்கு கூடினார்கள். இப்போது அதில் மாற்றம் உள்ளது. என்னை முக்கிய தலைவராக கருதி பார்க்கிறார்கள்.

  பல மக்கள் என்னை ஒரு தலைவராக பார்த்ததால் தான் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை உருவானது. என்னை தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

  வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். நம்பிக்கையோடு களம் இறங்குகிறோம்.

  எங்களுடைய சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயமாக சாதனை செய்வோம்.

  எங்களுடனும் கூட்டணி சம்பந்தமாக பலர் பேசுகிறார்கள். சில கட்சிகளை பொறுத்தவரை எங்களால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் கூட்டணி வைப்பதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  மக்கள் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், யாரையும் எங்கள் தோளில் சவாரி செய்ய அனுமதிக்க மாட்டோம்.

  தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி கிடையாது என்பது எங்களது உறுதியான எண்ணம்.

  காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோமா? என்பது பற்றிய வி‌ஷயத்தில் தமிழ்நாடு நலன் தான் எங்களுக்கு முக்கியம்.

  மாநில நலனுக்கு எதிராக எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து முடிவுகள் இருக்கும்.

  நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத்தான் விரும்புகிறோம். இதில், எந்த மாற்றமும் இருக்காது. நாங்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்ய முடியாது.

  நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னது எனது கட்சியை குறிப்பிட்டு தான் சொன்னேன். நான் போட்டியிடுவேனா? இல்லையா? என்பது சூழ்நிலைகளை பொறுத்தது. தேவைப்பட்டால் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

  எங்கள் கட்சியில் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வேட்பாளராக நிறுத்துவோம்.

  தேர்தலில் எங்களுக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பற்றிய வி‌ஷயத்தில் மற்ற கட்சிகளுக்கு நாங்கள் கடுமையான சவால் ஏற்படுத்துவோம். நாங்கள் ஆழமாக ஊடுருவி செல்வோம்.

  ஊழல் புகார் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, அ.தி.மு.க.- தி.மு.க. இருகட்சிகளுமே தவறு செய்துள்ளன.

  அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை இது அகற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த அரசால் தமிழ்நாட்டில் பேரழிவும், தோல்விகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

  அதேபோல் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மதச்சார்பற்ற தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சீரழித்து வருகிறது. நாட்டின் நிலைமையே இந்த ஆட்சியால் சீர்குலைந்து இருக்கிறது.

  பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை. ஆனால், அந்த கட்சி, ஆட்சியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு காரணமாக இருக்கின்றன.  ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டுமா? என்ற வி‌ஷயத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஒருநபரை முன்னிறுத்தி எதுவும் சொல்ல முடியாது.

  ஆனால், ஒரு மனிதன் மட்டுமே நாட்டை நடத்தி சென்று விட முடியாது. அது ஒரு இயக்கமாக இருக்க வேண்டும். அதற்கு ராகுல்காந்தியை பயன்படுத்தி கொள்ளலாம். சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு கருவி வேண்டும்.

  அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமைந்தால் அது எங்களுக்கு சாதகமான வி‌ஷயம்தான். சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவது தான் எங்களது ஒரே நோக்கம்.

  ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பழைய கட்சிகள் செய்கின்றன. அவர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்து பணத்தை சுரண்டி வைத்து இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் சாதாரண மக்களுக்கு எதிராக இருக்கின்றன. அந்த மக்களின் ஆதரவு எங்களை நோக்கி இருக்கும்.

  தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள்தான் சாதிக்க முடியும் என்று சொல்வது தவறான கருத்து. அன்றைய கால கட்டத்தில் அவர்களுடைய கொள்கைகள் தேவைப்பட்டு இருக்கலாம். எங்களை பொறுத்தவரையில் இந்தியை எதிர்க்கவில்லை. அதை திணிப்பதை மட்டும்தான் எதிர்க்கிறோம்.

  ஊழல் அனைத்து மட்டத்திலும் ஒழிக்கப்பட வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் இலவசம் என்பது கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்றவற்றில் மட்டும்தான் இருக்க வேண்டும். மது வியாபாரம் மூலம் சாராய மாபியாக்கள் ஆழமாக காலூன்றி இருக்கிறார்கள்.

  மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வருவது அவசியமானது. இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அழிக்க முடியும்.

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சம்பந்தமான வி‌ஷயத்தில் அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவருடைய தனிப்பட்ட வி‌ஷயம்.

  ஜெயலலிதா மரணம் சில சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது. ஜெயலலிதா மரணம் மட்டும் அல்ல, கொடநாடு கொலை விவகாரம் உள்ளிட்ட அனைத்து சம்பவங்கள் பற்றியும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

  ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு வயதான பெண் என்னிடம் நடந்து வந்து மற்றவர்களை போல் நீயும் என்னை ஏமாற்றி விடாதே? என்று கூறினார்.

  இதேபோல் மக்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக என்னை சந்திக்கிறார்கள். மாநிலத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறோம். அதை சிறப்பாக செயல்படுத்துவது எங்களது ஒரே நோக்கமாக இருக்கும்.

  இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 8000 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிக்கோட்டை நெருங்கியுள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
  பெங்களூரு:

  கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன. 9 மணிக்குப் பிறகு நிலைமை மாறியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க அந்த மேஜிக் எண்ணை நெருங்க ஆரம்பித்தது.

  10.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 106 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 68 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 45 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. இந்த நிலையில் சற்று மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது.  100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நெருங்கியிருப்பதால் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறியுள்ளார். அவர் தான் போட்டியிட்ட ஷிகாரிபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 8 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
   
  ×