என் மலர்
புதுச்சேரி

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.
லாஸ்பேட்டை தொகுதி மக்களுக்கு தேசியக்கொடி
- 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
- லாஸ்பேட்டை தொகுதிக் குட்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியை செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.
புதுச்சேரி:
76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்று வேண்டும்என்ற பிரதமர் மோடியின் ஆணைக்கிணங்க லாஸ்பேட்டை தொகுதிக் குட்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியை செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.
சுதந்திர தினத்தை போற்றி கொண்டாடிட பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனை வரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றிடுவோம் என்று புதுச்சேரி பா.ஜனதா தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி லாஸ் பேட்டை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாடாளு மன்ற உறுப்பினர் செல்வ கணபதி தேசிய கொடியை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்டபொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா பிரமுகர்கள், ஜேயபிரகாஷ், மௌலி தேவன், சந்துரு, வேலு, கலியபெருமாள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






