search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state party"

    • தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து விட்டு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
    • உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தர இயலாது என்று கைவிரித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டது.

    ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

    பா.ஜ.க. சவாலை சமாளிக்க காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4 முறை சந்தித்து பேசி உள்ளனர்.

    கூட்டணிக்கு பெயர் வைத்த பிறகு தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, குறைந்தபட்ச பொது செயல்திட்டம் போன்ற நடவடிக்கைகளில் தலைவர்கள் ஈடுபட்டாலும் இன்னமும் அதற்கு முடிவு எதுவும் கிடைக்கவில்லை. தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து விட்டு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

    ஜனவரி 17-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இருந்து மும்பைக்கு பாத யாத்திரை மேற் கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பாக இந்தியா கூட்டணியில் உள்ள செல்வாக்குமிக்க மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க அவர் விரும்புகிறார். இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக டெல்லியில் கூடி ஆலோசித்தனர்.

    அடுத்த கட்டமாக வருகிற 4-ந்தேதி மீண்டும் கூட உள்ளனர். அதற்கு பிறகு தான் மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதற்கு முன்னதாக தொடக்கத்திலேயே காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு விசயத்தில் கடும் சிக்கலையும், இழுபறியையும் சந்திக்க தொடங்கி உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை விட்டு தரமாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி திட்ட வட்டமாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தனக்கு நிபந்தனை விதிக்கும்பட்சத்தில் தனித்து போட்டியிடுவோம் என்றும் அவர் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தர இயலாது என்று கைவிரித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 எம்.பி. தொகுதிகள் இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 4 அல்லது 5 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்று அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அங்கு மொத்தம் 48 தொகுதிகளில் சுமார் 25 முதல் 30 தொகுதிகள் வரை போட்டியிட சிவசேனா விரும்புகிறது. மீதமுள்ள 18 தொகுதிகளை காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் விட்டு தருவதாக அறிவித்துள்ளது.

    இதற்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கடும் அதிருப்தியயை தெரிவித்துள்ளன. இந்நிலையில் டெல்லி, பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி 90 சதவீத இடங்களில் போட்டியிடப் போவதாகவும் 10 சதவீத இடத்தை மட்டுமே கூட்ட ணிக்கு ஒதுக்க முடியும் என்று கூறியுள்ளது.

    கேரளாவிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அதிக இடங்களை காங்கிரசுக்கு கொடுக்க விரும்பவில்லை. பீகாரில் நிதிஷ்குமாரும், லல்லு பிரசாத் யாதவும் தங்களுக்குரிய இடங் களை வைத்துக் கொண்டு தான் மீதமுள்ள இடங்களை காங்கிரசுக்கு கொடுக்கும் நிலையில் உள்ளனர்.

    இதன் காரணமாக உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீட்டை செய்ய முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மேலிட தலைவர்களை தவிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே பங்கீட்டில் சிக்கல் வர வாய்ப்பு இல்லை. தி.மு.க. கொடுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் நிலையில்தான் உள்ளது.

    ஒடிசா, குஜராத் உள்பட சில மாநிலங்களில் செல்வாக்கு இல்லாத நிலையில் காங்கிரஸ் அங்கு தனித்து விடப்படும் நிலையில் இருக்கிறது. இதனால் காங்கிரசுக்கு தோழமைக் கட்சிகள் மூலம் அதிக இடங்கள் கிடைக்குமா? என்பதில் சிக்கல் நிலவுகிறது.

    5 மாநில தேர்தலில் தெலுங்கானா தவிர மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளிடம் அதிக தொகுதிகள் கேட்டு பேரம் பேச முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரசின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மாநில கட்சி தலைவர்களும் நிபந்தனை விதிப்பதால் "இப்பவே கண்ணைக் கட்டுதே" என்ற நிலையில்தான் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர்.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் பா.ஜ.க.வை வீழ்த்த 400 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதுவும் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இத னால் இந்தியா கூட்டணியில் எதிர்பார்த்தபடி தொகுதி பங்கீடு குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று மராட்டியம், பஞ்சாப் மாநில கட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராகுல் அறிவிப்பையொட்டி மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

    மாநில தலைவர் அசோக் சவான், மும்பை நகர தலைவர் மிலிந்த் தியோரா ஆகியோர் முன்மொழிந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ராகுல் காந்தி நாடு முழுவதும் அயராமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். உண்மையில் தேர்தல் தோல்விக்கு மாநில தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

    காங்கிரசுக்கு வாக்களித்த கோடிக்கணக்கான வாக்காளர்கள் ராகுல் காந்தியின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ராகுல் காந்தியின் தலைமையும், வழிகாட்டலும் தேவை. எனவே ராகுல் காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதேபோல பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியின் தலைமை மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
    ×