search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்வு செய்த 15 அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்க ரகசிய உத்தரவு
    X

    தேர்வு செய்த 15 அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்க ரகசிய உத்தரவு

    • கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
    • தொகுதிகளில் வேலைகளையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

    இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில் டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை), ராயபுரம் மனோ (வடசென்னை), மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்), செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு), ராஜ்சத்யன் (மதுரை), கண்ணன் (திண்டுக்கல்), கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி) உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.

    தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

    இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×