search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "initiation"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சோழவந்தான் ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடக்க விழா நடந்தது.
    • பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே நிலையத்தை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரெயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    முதன்மை திட்ட மேலாளர் (காதி சக்தி) பாலசுந்தர், துணை தலைமை பொறியாளர் சூர்யமூர்த்தி, பிரிவு பொறியாளர்கள் யுகேந்தர், ரவி தேஜா முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கதவணையின் ஆண்டு பராமரிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 4-ந் தேதி அணையில் இருந்த நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதற்கு மாற்று ஏற்பாடாக சிறிய ரக படகுகளில் பயணிகள் சென்று வந்தனர்.

    கதவணை பகுதியில் உள்ள சட்டர்கள் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலைய தடுப்புகள் மற்றும் சல்லடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அணையில் மீண்டும் தண் ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிக மாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து நேற்று மீண்டும்தொடங்கியது.

    • மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது.
    • வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்றில் பிரசித்தி பெற்ற வீர அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 11-ந்தேதிவரை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் இரவு பன வீர அழகர் என்ற நாமத்துடன் அழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாள் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பின்னர் வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.25 மணியில் இருந்து 7.25 மணி வரை நடைபெறுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) இரவு மானாமதுரை கிராமத்தார் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் பக்தர்கள் வீர அழகருடன் வைகைஆற்றில் நிலாசோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று முதல்நாள் நிகழ்ச்சி மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. நகராட்சி அலுவலகத்தில் வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • வாடிப்பட்டி அருகே ரூ.56.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலங்கள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு செல்லும் சாலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்தவழியாக நாச்சிகுளம் பஞ்சாயத்து உட்பட்ட நரிமேடு கிராமத்திற்கும் கருப்பட்டி, இரும்பாடி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த வெங்கடேசன் எம்.எல்.ஏ., இடிந்து விழுந்த அந்த சிறு பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டிட நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    அதன்படி வாடி பட்டி ஊராட்சி ஒன்றியம் கருப்பட்டி பஞ்சாயத்துகுட்பட்ட பொம்மன்பட்டி-கருப்பட்டி இடையே மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலமும், நாச்சிகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நரிமேடு செல்ல போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு சாலையில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலமும் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

    இந்த சிறுபாலங்கள் கட்டிட கட்டுமான பணி க்கான பூமி பூஜை நடந்தது.

    இந்த பூஜைக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் யூனியன் கமிஷனர் கதிரவன், ஒன்றிய பொறியாளர் ராதா, ஒன்றிய செயலாளர்கள் பால. ராஜேந்திரன், பசும்பொன் மாறன், பேரூர் செயலாளரும் பேரூராட்சித் தலைவருமான பால்பா ண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க.நிர்வாகிகள் பிரகாஷ், மோகன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பு வதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில் சேலம், நாமக்கல் மாவட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்பு.

    சேலம்:

    அண்ணா பல்கலைக்க ழகத்தின் கீழ் இயங்கும் 431 என்ஜினீயரிங் கல்லூரி களில் இளநிலைப் படிப்பு களுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பு வதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதற்கட்ட கலந்தாய்வில் 10,340 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு கடந்த செம்படம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கி, புதன்கிழமை முடிவடைந்தது. இதில் பங்கேற்க 31,095 மாண வர்களுக்கு அைழப்பு விடுக்கப்பட்டது. அதில் 24,430 பேர் கலந்தாய்வில் கலந்துகொண்டு விருப்ப மான இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 18,521 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பிரிவில் 1,426 ேபருக்கு விருப்ப இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு கட்டங்களும் சேர்த்து 30,317 இடங்கள் நிரம்பியுள்ளன.

    சேலம், நாமக்கல்...

    தொடர்ந்து 3-ம் கட்ட கலந்தாய்வு நேற்று (வியா ழக்கிழமை) தொடங்கியது. இதில் பங்கேற்க ெமாத்தம் 49,042 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வில் ் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். கல்லூரிகளை தேர்வு செய்யாத மாணவ- மாணவிகள் நாளைக்குள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளின் விருப்பப்பட்டியலை இறுதி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்த உள்ளது.
    • 1000-க்கும் மேற்பட்ட தொடக்க, நடு நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

    சேலம்:

    அரசு பள்ளிகளில் கல்வி கற்பித்தல், தேர்வு நடத்துதல், ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

    இதன்படி அரசு பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்த உள்ளது. மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப் படையில் பொதுத் தேர்வுக்கு இணை யாக நடத்தப்படுகிறது.

    இன்று முதல் 3 நாட்க ளுக்கு நடத்தப்பட உள்ள தேர்வு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தேர்வு தொடங்கியது. குறிப்பாக 1000-க்கும் மேற்பட்ட தொடக்க, நடு நிலைப்பள்ளிகளில் 4, 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிந்த பின், அதன் மதிப்பீடுகள், கல்வி அமைச்சகத்துக்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்பப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ‘‘நம்ம ஊரு சூப்பர்” தூய்மை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
    • வீட்டில் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களிமண் குண்டு ஊராட்சியில் வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் நடந்தது.

    அரசு முதன்மைச் செயலர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை தாங்கி களிமண்குண்டு ஊராட்சி யில் உள்ள கடற்கரைப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருப்பு ல்லாணி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் "நம்ம ஊரு சூப்பர்" தூய்மை திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் பொதுமக்களுடன் அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் "நம்ம ஊரு சூப்பரு''க்கான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் குப்பையில்லா கிராமங்களை உருவாக்கி, சுகாதாரத்தை காப்பதற்காக நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

    பொது இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்யக் கூடாது. வீடு மற்றும் தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

    ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. கடைக்குச் செல்லும் போது கண்டிப்பாக துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வீட்டிலும் பொது இடங்களிலும் மரங்களை நட வேண்டும்,

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

    தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் காய்கறி தோட்டத்தை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர், தோட்டக்கலை துணை இயக்குநர் நாகராஜன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் புல்லாணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் அரசு மகளிர் கலை க்கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு நாளை (16-ந்தேதி) நடக்கிறது.
    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்

    சேலம்:

    சேலம் அரசு மகளிர் கலை க்கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு நாளை (16-ந்தேதி) காலை 10 மணிக்கு தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    அதன்படி நாளை( 16-ந் தேதி) பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புள்ளியியல் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கும், 17-ந் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது .

    இதில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் சான்றதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ×