ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடக்க விழா

சோழவந்தான் ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடக்க விழா நடந்தது. பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடக்க விழா
Published on

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே நிலையத்தை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரெயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

முதன்மை திட்ட மேலாளர் (காதி சக்தி) பாலசுந்தர், துணை தலைமை பொறியாளர் சூர்யமூர்த்தி, பிரிவு பொறியாளர்கள் யுகேந்தர், ரவி தேஜா முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com